*#GST #320rs 👇👇*
*ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மாத குடும்ப மாதச் செலவு ₹320 குறைந்து இருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை...👌*
வாட் இருந்த போது கோதுமைக்கு 2.50 சதவீதமும், அரிசிக்கு 2.75 சதவீதமும் வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஜிஎஸ்டியில் அரிசி மற்றும் கோதுமைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு உங்கள் மாத பட்ஜெட்டில் 320 ரூபாய் குறைந்துள்ளதாம்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தேங்காய் எண்ணெய், டூத்பேஸ்ட், சோப், சோப் பவுடர் எனத் தினசரி நாம் பயன்படுத்தும் 83 பொருட்கள் மீதான வரி குறைந்துள்ளது.
பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, சாக்லேட், தின்பண்டங்கள், இனிப்பு, வாஷிங் பவுடர், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றுக்காக மாதம் ஒரு குடும்பம் 8,400 ரூபாய் செலவு செய்து வந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வந்த பிறகு மாதம் 320 ரூபாய் மிச்சம் ஆகிறதாம்.
ஜிஎஸ்டி வந்த பிறகு மாதம் 8,400 ரூபாய்க்கு நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு 510 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதுவே வாட் இருந்திருந்தால் 830 ரூபாய் வரி செலுத்த வேண்டி இருந்திருக்கும். எனவே இப்போது 320 ரூபாய் மாதம் சேமிப்பாகிறது என்கிறது ஆய்வறிக்கை.
மசாலா பொருட்கள், கோதுமை, அரிசி, ஹார்லிக்ஸ்/போர்ன்விட்டா, பாஸ்தா, இட்லி தோசை மாவு, மினரல் வாட்டர், தயிர், மோர் போன்ற பொருட்களுக்கு வாட் இருக்கும் போது இருந்ததைவிட ஜிஎஸ்டியில் வரி குறைவாக உள்ளது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பால் பவுடருக்கு இருந்து வந்த 6 சதவீத வரி ஜிஎஸ்டியில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே போன்று சர்க்கரை மீதான வரி 21 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சோப் பவுடர் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. மரச் சாமானங்கள் மீதான வரி 12/28 சதவீதத்தில் இருந்து 5/18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி ஆட்சி முறையில் ஒரு பொருளை தயாரிக்கும் போது அதற்கு நிறுவனம் கலால் வரியைச் செலுத்த வேண்டி இருந்தது. இந்தக் கலால் வரியை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்தன. ஆனால், ஜிஎஸ்டி வரி முறையில் உற்பத்திக்குக் கலால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பல நாடுகளில் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு பணவீக்கம் அதிகரித்தது. ஆனால், இந்தியாவில் வாட் வரிக்கு இணையான விகிதங்களில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
*420-களுக்கு இதெல்லாம் தெரியாது.*
Check out @News18TamilNadu’s Tweet: 👇
https://twitter.com/News18TamilNadu/status/1074612464585605120?s=09
No comments:
Post a Comment