Monday, 24 December 2018

கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள்"

"கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள்" என்பதற்கு எடுத்துக்காட்டாக, இஸ்லாமும் கிறிஸ்தவமும் மிஞ்சும் சீனாவில் எப்படி கெஞ்சுகிறார்கள், கெஞ்சும் இந்தியாவிடம் எப்படி மிஞ்சுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்.

“இஸ்லாமும் கிறிஸ்தவமும்,  அரசியல் அமைப்புகள். பிரிவினைவாதிகள்” என்பதை தெளிவாக புரிந்து கொண்ட சீன அரசு கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் எப்படி வைத்திருக்கிறது என்பதற்கான விவரங்கள் கீழே:

சீனாவில் கிறிஸ்தவம்: 

    - 20-ஏப்ரல்-2018இல், "சர்ச்சுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பெரிய அச்சுறுத்தல்கள்" என்றார் சீன அதிபர். இதுதான் சீனாவின் நிலைப்பாடு. இதன் காரணமாக, சர்ச்சுகளுக்கும் கிறிஸ்தவத்துக்கும் சீனாவில் சுதந்திரம் கிடையாது.

    - சீனாவுக்குள் பைபிள் எடுத்து செல்வது குற்றம். ஃபிலிப்பைன் நாட்டவர் பலர் சீனாவுக்குள் பைபிள் எடுத்துச் செல்வதும் அவர்கள் பிடிபட்டு சிறையிலடைக்கப்படுவதும் வழக்கம்.

    - அமேசான் போன்ற வலைதளங்கள் வாயிலாக பைபிள் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது சீனாவில்.

    - சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்ததிலிருந்து - கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக - சீனாவுக்கும் வாட்டிகனுக்கும் தூதரக உறவுகள் (diplomatic relations) இல்லாமலிருந்தது.

    - மீண்டும் உறவுகளை வலுப்படுத்தவும் சர்ச்சுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கவும் வழங்கவும மார்ச் 2018இல் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வாட்டிகன். இந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக வாட்டிகன் தரப்பில் சொல்லப்பட்டாலும், கத்தோலிக்கர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    - காரணம், சர்ச்சின் அத்தனை நடவடிக்கைகளிலும் கம்யூனிச சீனாவின் தலையீட்டை வாட்டிகன் ஒப்புக்கொண்டிருப்பதால். குறிப்பாக, சர்ச்சின் எந்த நிர்வாகியையும் வாட்டிகன் நியமிக்க முடியாது, கம்யூனிச சீன அரசே நியமிக்கும்.

    - இது தவிர சர்ச்சின் அத்தனை நடவடிக்கைகளையும் சீன அரசு கண்காணிக்கும்.

    - சர்ச்சுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பெரிய அச்சுறுத்தல்கள் - என்பதில் தெளிவாக இருக்கும் சீனா விதித்திருக்கும் கடுமையான நிபந்தனைகளை வாட்டிகன் ஏற்றது பல கத்தோலிக்கர்களுக்கும் பிடிக்கவில்லை.

சீனாவில் இஸ்லாம்: 

    - சீன இஸ்லாமியர்கள் பன்றிக்கறி உண்ண வேண்டும்.

    - சீன இஸ்லாமியர்களுக்கு தனி சிவில் சட்டம் கிடையாது. எல்லா சீனர்களுக்கும் ஒரே சிவில் சட்டம் தான். சீனா மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீன இஸ்லாமியர்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு சட்டம் பொருந்தும்.

    - சீன மசூதிகளில் சீனாவின் தேசியக் கொடி பறக்க வேண்டும்.

>> இத்தனையும் செய்யும் சீனாவை, எந்த அரபு நாடும் கண்டிப்பதில்லை,  எந்த கிறிஸ்தவ நாடும் கண்டிக்க துணிந்ததில்லை.

>> இந்தியாவில் அத்தனை உரிமைகளையும் எடுத்துக்கொண்டு, ராஜபோக வாழ்க்கை வாழ்பவர்கள், "இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. இந்தியாவில் வாழ எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்று மத  அரசியல்  ரீதியாக மோடி என்ற இந்து தேசியவாதியின் ஆட்சியை
பொறுக்கமுடியாமல் சொல்வது  கொடுமையிலும் கொடுமை. 

"கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள்"

Sampat Kumar

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...