http://tnnews24.com/?p=1047
கர்நாடக அரசு கவிழப்போகிறது எல்லாம் நம்ம ஸ்டாலின் ராசிதான்!
கர்நாடகா:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது,இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்ற முடியாததால் அதனால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இணைந்த எதிரிகள்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் கடுமையாக ஒருவரை ஒருவர் எதிர்த்து வந்த மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இது கர்நாடகா மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மதவாதத்தை எதிர்க்கவே தாங்கள் ஒன்றிணைந்ததாக குமாரசாமி தெரிவித்தார். இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.
MLA-கள் அதிருப்தி:
இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான MLA-க்கள் தங்களுக்கு ,மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முதலமைச்சர் குமாரசாமி தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்காததால் அதிருப்தியில் இருந்தனர்.
சமாதானம் செய்த சித்தராமையா:
அமைச்சர் பதவி கிடைக்காத மூத்த MLA-களை முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா 6 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கத்தை போது கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
ஆனால் நேற்று கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது அதில் உறுதியளித்தபடி யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மேலும் சுயேட்சை MLA-வின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
பாஜக கதவை தட்டும் காங்கிரஸ் MLA-க்கள்:
இந்நிலையில் காங்கிரஸ் MLA-க்கள் பலரும் பாஜகவிற்கு தாவ இருப்பதாக தகவல் வருகின்றன. பாஜக தலைமையோ அவர்களை தங்கள் MLA பதவிகளை ராஜினாமா செய்யும் படி கோருகிறது. இதனால் குமாரசாமி , காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
ஸ்டாலின் முன்மொழிவு:
எந்த நேரத்தில் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தாரோ அன்றில் இருந்து மம்தா பேனர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஆகியோர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில் அருகில் உள்ள கர்நாடக மாநிலமும் காங்கிரஸ் கையில் இருந்து செல்ல போகிறது.” எல்லாம் நம்ம ஸ்டாலின் ராசிதான் ”
No comments:
Post a Comment