https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1943320505964392
"பாகிஸ்தானில், முஸ்லிம் மட்டுமே ஜனாதிபதியாக முடியும்!
ஆனால், எங்கள் நாடு இதுவரை பல ஒடுக்கப்பட்ட மக்களை அந்த பதவியில் அமர்த்தி இருக்கிறது! சிறுபான்மையினர் உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றால் என்ன என்று எங்களிடம் கற்றுக் கொள்ள இம்ரான் கானுக்கு இதுவே சரியான தருணம்!"
'சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்று மோடிக்கு நான் கற்றுத்தருவேன்' என்று கூறிய இம்ரானுக்கு, ஹைதராபாத் எம்.பி. அசாவுதீன் ஒவைஸி காட்டமான பதில்!
இந்த மனிதரின் கொள்கை, பேச்சு, நடவடிக்கைகளுடன் நான் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை! ஆயினும், மேற்கண்ட அறிக்கை எனக்கு மிகவும் ஏற்புடையதே! காரணம், நம் நாட்டு நிலவரத்தை குறைகூறி நாட்டாமை செய்ய எந்த அந்நியருக்கும் இடமில்லை. இதுபோன்ற விவகாரங்களில், இந்து-முஸ்லிம் என்று பாராமல், இந்தியர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஒவைஸிக்கு பாராட்டுகள்!
இம்ரான், மோடியைத்தானே குறைகூறுகிறார் என்று மகிழ்ந்த காங்கிரசும் அதன் போலி மதச்சார்பின்மை கூட்டாளிகளும் வெட்கித் தலைகுனிய வேண்டும்! மணி சங்கர் ஐயர் போன்ற காட்டிக் கொடுக்கும் கயவர் கூட்டத்தைவிட, ஒவைஸி போன்றவர்களை ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை!! தெலங்கானா வாக்காளர்கள், சென்ற முறையைவிட, இம்முறை காங்கிரசுக்கு குறைவான இடங்களை அளித்ததில் வியப்பொன்றுமில்லை!
No comments:
Post a Comment