பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம் பெற்ற நபர் யார்
என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாக 1969 ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றில் திருத்தம் அல்லது ரத்து செய்வது பற்றி பிரிவு 15 கூறுகிறது.
பிரிவு 15 - இந்த சட்டத்தின் படி பதிவாளர் பராமரித்து வரும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு அல்லது இறப்பு குறித்த விபரத்தில் தவறு அல்லது மோசடியாக அல்லது முறையற்ற வகையில் அந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனநிறைவு அடைந்தால் மாநில அரசு வகுத்துள்ள நேர்விற்கேற்ப அந்தப் பதிவுகளில் திருத்தம் செய்யவோ, அந்த பதிவை ரத்து செய்யும் விதமாகவோ அசல் பதிவில் எந்த திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் விளிம்புக் கோட்டில் (Margin Area) உரிய பதிவுகளை செய்து அந்த திருத்தம் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள தேதியை குறிப்பிட்டு சான்று கையொப்பம் இட வேண்டும்.
பிரிவு 15(1) ன்படி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரத்தில் எழுத்துப்பிழை அல்லது சாதாரண பிழைகள் ஏற்பட்டுள்ளது என பதிவாளர் கவனத்திற்கு கொண்டு வரப்படும் போது அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் அந்த தவறு குறித்து பதிவாளருக்கு தெரிய வருகிற நிலையில் தன்னால் பராமரிக்கப்பட்டு வருகிற அந்தப் பதிவேட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து பதிவாளர் ஒரு விசாரணையை மேற்கொண்டு, அந்த தவறு நடைபெற்றுள்ளது என மனநிறைவு அடைந்தால், அந்த பதிவை பிரிவு 15 ல் கூறப்பட்டுள்ளவாறு திருத்தவோ அல்லது நீக்கவோ செய்வதோடு தகுந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்த திருத்தம் குறித்த பதிவேட்டின் நகலை அட்டவணையில் கட்டம் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் போன்றவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எனவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய வட்டாட்சியர், சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர்களுக்கு அதிகாரம் உள்ளது.
1969 ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 2000 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விதிகளின், விதி 11 ன்படி, பதிவாளர் பிறப்பு சான்றிதழ்களில் ஏற்படும் தவறுகளை திருத்துவதற்கு அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை "W. P No - 8319/2018 ல் 11.6.2018 ல் விளக்கமாக தீர்ப்பு கூறியுள்ளது.
No comments:
Post a Comment