Sunday, 16 December 2018

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம்.

வள்ளுவன் இந்து அல்ல, சமண கவிஞன் என சிலர் கிளம்பி இருக்கின்றார்கள், சிலர் தோமா காலத்து கிறிஸ்தவர் என்று கூட சத்தம்.......

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம்.

முதலாவதாக இறைவன் எனும் சொல் தமிழருடையது, அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர், மற்ற மதத்தவருக்கு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது.

சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை, அவர்களின் சொல் கடவுள் அல்லது வேறு பெயர்கள்.

இந்துக்களின் சொல்லை வள்ளுவன் அப்படியே வைத்திருக்கின்றான்.

அப்படியே தெய்வம் என்பதும் இந்துக்கள் பெயரே, தமிழ் இந்துக்கள் வணங்க பயன்படுத்திய பெயர். "வானுறையும்
தெய்வத்துள் வைப்படும் என இந்துக்கள் அடையாளத்தை வைக்கின்றான் வள்ளுவன்.

முத்தாய்ப்பாக  ஐம்புலன்களை கட்டுப்படுத்தாதவன்  நிலைக்கு "இந்திரனே சாலுங் கரி" என ஆணித்தரமாக சொல்கின்றான்.

பெண்ணாசையால் இந்திரன் பட்டபாடுகளை சொல்லும் குறள் அது, இந்திரன் கதை இந்துமதம் தவிர எந்த மதத்தில் இருந்தது?

அடுத்ததாக அட்டகாசமாக கடவுளின் 8 குணங்களை குறித்து.......

"கோளில் பொறியியற் குணமிலவே எண்குணத்தான் என்கின்றான் வள்ளுவன். அதாவது கடவுளுக்கு 8 குணம் உண்டாம்.

இதையே அப்பரும் "எட்டு வான் குணத்து ஈசன்" என அழகாக குறிப்பிடுகின்றார், ஆக வள்ளுவன் இந்துக்களின் நம்பிக்கையினை குறளில் வைத்திருக்கின்றான்.

பிறவிப்பெருங்கடல் என வாழ்வினை சொல்வது இந்துக்களே....வள்ளுவன் அதனை குறளில் வைத்திருக்கின்றான்.

இன்னும் மலர்மிசை ஏகினான் என மிக அழகாக இந்து கடவுள்களை குறிக்கின்றான்.

வேறு எந்த மதத்து தெய்வம் மலர்மிசை ஏகிற்று?

தானமும் தவமும் என இந்துக்களின் நம்பிக்கையினையே வள்ளுவன் சொல்கின்றான்.

இந்துக்களின் தர்மத்தையே துறவு முதல் பல இடங்களில் அவனால் குறளாக வைக்க முடிந்தது.

நன்றாக ஆய்ந்து படித்து பாருங்கள், வள்ளுவன் ஒரு இந்து என்பதும், இந்துக்களின் நம்பிக்கையினையும் தத்துவத்தையும் அவன் குறளாக வைத்திருகின்றான் என்பதும் புரியும்.

குறள் இந்துக்களின் நூலாகவே 1930 வரை சைவ சிந்தாந்தக் கழகம் , ஆதீனங்கள் என எல்லாவற்றாலும் கருதபட்டது

தொடக்க கால வெள்ளையர்கள் கூட இந்து நூலாகவே கருதினர், உண்மையும் அதுவே.

குறள் இந்துக்கள் அடையாளம் அல்ல என்பது 1930களுக்கு பின் வந்த திராவிட புரட்சி, கடவுள் மறுப்பு காலங்களில் செய்யபட்ட கட்டுகதையே அன்றி வேறல்ல‌.

Thanks to Sowdha Mani

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...