நீங்க என்ன சொன்னாலும் மோடி ஒழிக தான் சார். என்ன சார் ஆட்சி பண்றாரு.
அஞ்சு வருஷமா ஒரு ஊழல் இல்லை, அதிகார துஷ்பிரயோகம் இல்லை, ஒரு குண்டு வெடிப்பு இல்லை , ஒரு மதக் கலவரம் இல்லை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படவில்லை, இப்போதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு பதிலாக தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், லோனை வாங்கிவிட்டு தப்பியோடியவர் எல்லாம் லோனை திருப்பி கட்டுகிறேன் தயவுசெய்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள், கடந்த ஆட்சியில் ராணுவ மந்திரி ஏகே ஆண்டனி அருணாச்சல பிரதேசத்திற்கு நுழையக் கூடாது என்று தடை விதித்த சீனா இன்று இந்தியா எங்களை ஆக்கிரமிக்க முயல்கிறது என்று சர்வதேச நாடுகளின் முன்பு கதறுகிறது. எப்போதும் இந்தியாவிற்கு கட்டளைகள் விதிக்கும் அமெரிக்கா இப்போது நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று கட்டிப் பிடிக்கிறது. எப்போதும் இல்லாத வண்ணமாக இந்தியாவின் பிரதமரை விமானம் வரை வந்து வழி அனுப்புகிறார் ரஷ்ய பிரதமர் புதின். உலகின் சக்திவாய்ந்த நாலாவது நபராக தேர்ந்தெடுக்கிறது சர்வதேச மேலாண்மை நிறுவனம், எங்கள் மேல் கை வைத்தாள் நீங்கள் சீனாவையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று நம்மையே அதிரவைத்த மாலத்தீவு, பாகிஸ்தான் போன்ற பிள்ளை பூச்சிகள் எல்லாம் கூறிய காலம் போய், அந்த சீனாவை இந்தியா எங்களை ஆக்கிரமிக்கின்றது என்று கதற வைத்த modiji. என்ன ஆட்சி செய்கிறார்؟؟؟ . எங்களுக்கெல்லாம் நேர்மையான, நியாயமான ஆட்சியை விட எங்களுக்கு entertainment உள்ள ஆட்சிதான் முக்கியம். அதில் ஊழல் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் 60 வருடங்களாக அந்த வார்த்தையைக் கேட்காமல் ஒரு நாள் கூட நாங்கள் படுக்கைக்கு சென்றதில்லை. எனவே மோடி ஒழிக!!!!
நன்றி!!!
ராஜசேகர்.
No comments:
Post a Comment