Sunday, 16 December 2018

பாரதப் பிரதமருக்கு ஒரு குடும்பத் தலைவியின் பகிரங்கக் கடிதம்.

பாரதப் பிரதமருக்கு ஒரு குடும்பத் தலைவியின் பகிரங்கக் கடிதம்.

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு, '

குடும்பத்தில் சட்டி பானையோடு மல்லாடும் ஒரு குடும்பத் தலைவியின் பணிவான வணக்கங்கள்

The Top 10 World’s Most Powerful People ன்னு Forbes பத்திரிகை வருஷாவருஷம் ஒரு லிஸ்ட் வெளியிடும்.

அதில நீங்க 9 ஆவது இடத்தில் இருக்கீங்களாம்.

பிரிட்டிஷ் பிரதமர், ஃபிரெஞ்சு ஜனாதிபதி, ஆஸ்திரேலியப் பிரதமர்
கனடாவின் பிரதமர் எல்லாம் கூட இந்த லிஸ்ட்ல இல்லையாம். நீங்க இருக்கீங்க எங்களுக்குப் பெருமையாய்த்தான் இருக்கு.

நீங்கள் பதவி ஏற்கும் போது நிஃப்டி என்னும் பங்குச்
சந்தைக் குறியீட்டு எண் 7000 ஆக இருந்தது.ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன் 10800 ஐத் தொட்டு விட்டது. 54% க்கும் அதிகமான வளர்ச்சி.

நீங்கள் பதவி ஏற்கும் போது மும்பை சென்செக்ஸ் என்னும் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 23800 ஆக இருந்தது. ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன் 36800 ஐத் தொட்டு விட்டது. 54% க்கும் அதிகமான வளர்ச்சி.

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மையையும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் ஓர் நல்ல அளவு கோல் இந்த பங்குச் சந்தைக்கு குறியீட்டு எண்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6% க்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது.

இந்த 5 ஆண்டுகளில்தனிநபர் வருமானம் (Per Capita Income) 2013 ல் இருந்ததை விட 400 அமெரிக்க டாலர்கள் உயர்ந்திருக்கிறது

நீங்கள் பதவி ஏற்கும் போது பணவீக்கம் (மதிப்பு இழப்பு) (Rate of inflation) 9.4% ஆக இருந்தது இப்போது அதுவும் டீமானிடைசேஷனுக்குப் பிறகு உண்டான எதிர்மறைத் தாக்கத்துக்குப் பிறகும் 2018 ல் 4.64% ஆகக் குறைந்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளில் வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்த தொகை 60% உயர்ந்திருக்கிறது
GST யின் மூலம் அரசின் ஆண்டு வரிகள் மூலம் வரும் வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது.
வருமான வரி கட்டுகிறவர்களின் எண்ணிக்கை 50% க்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

காஷ்மீரில் தினமும் கலவரம்தான். குண்டு வெடிக்காம, பாதுகாப்புப் படை மேல கல் எறியாம ஒரு நாள் கூட விடிஞ்சதில்லை. இப்போ ஒரு ஒரு வருஷமா எல்லாம் மூடிக்கிட்டிருக்கான்.
வடக்குக் கோடியிலே இருந்து சத்தத்தையே காணோம்.

அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குக்கு அப்புறம் பாகிஸ்தான் வாலை ஆட்டுறதில்லை. இல்லைன்னா அந்த ராணுவ முகாம் மேல தாக்குதல் இந்த ராணுவ முகாம் மேல தாக்குதல் ன்னு டெய்லி ந்யூஸ் வரும். இப்ப அதையும் காணம்.

இந்த அஞ்சு வருஷத்துல எங்கயாவது இந்து முஸ்லீம் கலவரம் நடந்திருக்கா? கலவரம் பண்ற ரெண்டு பயலும் மூடிக்கிட்டிருக்கான்.

இதெல்லாம் கரண்டி பிடிக்கும் எனக்கே தெரியும் போது நம்ம அரசியல்/ பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா என்ன ?

ஆனாலும் மோடி ஓழிக தான்.

அதைப்பத்தி நீங்க கவலைப் படாதீங்க.

நீங்கள் நாட்டிற்காக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உழைக்கிறீர்களாம்.

நானும் தான்.

நீங்கள் இந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லையாம்.

நானும்தான்.

நீங்கள் இந்த நாட்டின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறீர்களாம். 24x365 நாட்டைப் பற்றியே யோசிக்கிறீர்களாம்.

நானும்தான்.

நாடு என்னுமிடங்களில் வீடு எனப் போட்டுக்கொள்ளலாம் என் விஷயத்தில்.

ஆனால் நான் செய்கிற சில விஷயங்களை நீங்கள் செய்வதில்லை.

அவை என்ன?

நான் என் கணவரிடம் ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு நான்கைந்து தடவையாவது I love you சொல்கிறேன்.

என் பிள்ளைகள் இருவருக்கும் தலா குறைந்தது ஒரு 20 முத்தம் கொடுக்கிறேன் I love you சொல்கிறேன்.

என் அம்மா தான் வீட்டில் சமையல் முழுவதும். என்னைப் பொறுத்தவரை சமையல் கட்டில் என்னுடைய வேலை ருசி பார்த்துச் சொல்வது மட்டும்தான். நமக்கு நாக்கு கொஞ்சம் நீளம். அதனால டேஸ்ட் நல்லாப் பார்ப்பேன்.

டேஸ்ட் நல்லாருக்கோ இல்லியோ அம்மாகிட்ட, 'அம்மா! கலக்கீட்டம்மா இன்னைக்கு சமையல் சூப்பர்ன்னு ஒரு ரெண்டு மூணு தடவை சொல்லிடுவேன்.
(அம்மா FB க்கெல்லாம் வர்றதில்லைங்கிற தெனாவட்டு )

அம்மாவுக்கு சமையற்கட்டில் இந்தப் பொருள் இல்லை என்று எந்தப் பொருளுக்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வேன்.

நீங்கள் செய்யும் பெரிய பெரிய வேலைகளின் பலன்கள் பெரு முதலாளிகளைத் தான் போய்ச சேர்கின்றன. அதற்காக நானும் உங்களைப் பெரு முதலாளிகளின் பிரதமர் என்று சொல்ல மாட்டேன்.
பெரு முதலாளிகள் வளர்ந்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மூட்டை கட்டி வீட்டிலா வைப்பார்கள்?

வங்கிகளில் போடுவார்கள் இல்லாவிட்டால் புதிய தொழில்களில் முதலீடு செய்வார்கள் அல்லது தங்களது தொழிலை விரிவு படுத்துவார்கள். வங்கியில் போடப்பட்ட பணம் வங்கிகள் தொழில் வணிக வளர்ச்சிக்கு கடன் கொடுக்கப் பயன் படும். ஆக இந்த மூன்று செயல்பாடுகளினாலுமே நாட்டில் உற்பத்தி பெருகும் இன்னும் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும்.

பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவது முதலாளித்துவ, சந்தைப் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத விஷயம். (நம்ம ஊர் சோ கால்டு பொருளாதார மேதாவிகளுக்கு இது தெரியாது)

இந்த அறிவாளி ஜனங்க உங்களை முதலாளிகளின் பிரதமர்ன்னு சொல்றாங்க.

ஐயா ஒரு முதலாளி நல்லா இருந்தா ஆயிரம் பேருக்கு வேலை குடுப்பான்
ஆயிரம் குடும்பம், 3000-4000 ஜனங்கள் நல்லா இருக்கும்.

இது இந்த ஜனங்களுக்குப் புரியறதே இல்லை.

இதையெல்லாம் தமிழிசை அக்கா,அந்த ஓட்டை வாய் H ராஜா மாதிரி ஆளுங்க எடுத்துச் சொல்லணும்.

அந்தக்கா என்னடான்னா சமாதானம் சொல்றதிலேயே இருக்கு.

இந்த ஆள் என்னடான்னா சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கிட்டு ஆகாதது போகாததுக்கெல்லாம் எல்லார்கூடயும் சண்டைக்குப் போறாரு.

நீங்க செய்யிற நல்ல காரியங்களை, கரண்டி பிடிக்கிற நான் புரிஞ்சு, புரியவைக்கிற முயற்சியைக் கூட மைக் பிடிக்கிற ஒங்க பிரதிநிதிகள் பண்றது இல்லை.

எங்க ஊர்ல கருணாநிதின்னு ஒரு அரசியல் வாதி இருந்தாரு.

ஒரு ஊருக்குப் பேர் மாத்துறதுக்கு ரயில் வராத தண்டவாளத்தில் தலை வச்சிப் போராட்டம் பண்ணினாரு. (இதை நான் சொல்லலங்க. அவரோட அத்யந்த நண்பர் வனவாசம்ங்கிற தன்னோட சுயசரிதையில சொல்லியிருக்காரு)

எல்லா ஜனங்களுக்கும் அந்த டிராமாப் பிடிச்சுப் போயி அவரோட சிறந்த நடிப்பை பார்த்து அவருக்கு கலைஞர்ன்னே பட்டம் கொடுத்துட்டாங்க.

ஏழைங்களுக்கு ஒரு 20 வீடு கட்டி சமத்துவபுரம்ங்கிற பேர்ல வீடு கட்ட ஆன செலவை விட அதிகம் செலவு பண்ணி விளம்பரப் படுத்தவாரு.

காரியம் பண்றது பெரிசில்லை. ‘பண்ணினேன் பண்ணினேன்’னு தம்பட்டமும் அடிக்கணும். ஒங்க தொண்டரடிப்பொடிங்களுக்குச் சொல்லுங்க.

ஒங்க பிரச்சார பீரங்கி தீவிலித் துப்பாக்கியை விடக் கேவலமா இருக்கு. கொஞ்சம் அதையும் மராமத்துப்பாருங்க.

அப்புறம் இன்னொரு விஷயம் நான் என் பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். GK சொல்லிக் கொடுப்பேன்.

அப்பப்ப ஒரு சாக்லேட்டுக் கொடுப்பேன் ஒரு கிண்டர் ஜாய் வாங்கிக்கொடுப்பேன். அடிக்கடிசின்னச் சின்ன பொம்மை வாங்கி குடுப்பேன்.

நீங்க என்னதான் நல்ல சாப்பாடு குடுத்தாலும், நல்ல படிப்புச் சொல்லிக்கொடுத்தாலும் அதுங்களுக்காகச் சேமிச்சு வச்சாலும் அந்தப் பிள்ளைங்களுக்கு நான் குடுக்கிற சாக்லேட்டும் கிண்டர்ஜாயும் பொம்மைகளும்தான் பெரிசாத் தெரியும். பிடிக்கும்.

இந்த ஜனங்களும் குழந்தைகளை மாதிரிதான். இதுங்க விலையில்லாத டிவி பொட்டி, விலையில்லாத மிக்சி, ஃபேன், சைக்கிள், மடிக்கணினின்னு இந்த சின்னச் சின்ன சாக்லேட்டுக்கும் கிண்டர் ஜாய்க்கும் பொம்மைகளுக்கும் பழகிப் போன கூட்டம்.

நீங்களும் கொஞ்சம் வெகுஜனப் பிரியமான திட்டங்களை அறிமுகப் படுத்துங்க.

இலவசமா சோளப்பொரி கொடுத்தாலும் போதும்.நீங்க குடுக்கிற ஹார்லிக்ஸ் கலந்த பாலை விட இந்த சோளப்பொரிக்கு வேல்யூ ஜாஸ்தி.

வேலைக்காரங்களையே எடுத்துக்கங்க நாம 12 மாசமும் குடுக்கிற சம்பளம் பெரிசாத் தெரியாது. தீபாவளிக்கு நாம குடுக்கிற ஸ்வீட் பாக்ஸும் ஒரு செட் ட்ரெஸ்ஸும் தீபாவளி இனாமாக கொடுக்கிற 500 ரூபாயும்தான் பெரிசாத் தெரியும்.

இதெல்லாம் அடிப்படை மனோதத்துவ ரீதியான வெகுஜனப் பிரியமான திட்டங்கள்.

இந்த மான்யம்ன்னு ஒரு தொகை கேஸ் பயனாளிகளுக்குக் கிடைக்குமே அது இப்போ ஒழுங்கா அக்கவுன்ட்ல கிரெடிட் ஆகிறதில்லை. அதே மாதிரி மத்த எதிலயம் பண்ணலைன்னாலும் இந்த கேஸ்க்கான மான்யத் தொகையைக் கொஞ்சம் கூட்டி நீங்களும் ஒரு சின்ன கமர்கட் குடுங்க.

நம்ம ஜனங்க இந்த ஓசிச் சோறு ஓசிக் காசு இதில ஏமாறுகிற ஜனங்க. நீங்க நியாயமானவரா இருக்கலாம் ஆனா அநியாயத்துக்கு நேர்மையா இருக்க வேணாம். இந்த மாதிரி சின்ன சின்ன பல்லி மிட்டாயெல்லாம் கொடுங்க. நம்ம ஜனங்க இது இல்லைங்கிறதைத்தான் பெரிசாப் பேசும்.

சம்பளம் / வருமானம் இந்த 5 வருஷத்திலே 30% கூடியிருக்கிறதைப் பத்தி ஒருத்தனும் யோசிக்க மாட்டான். வீட்டுக்காரம்மாவுக்குச் சொன்னாத்தானே தெரியும். அதைச் சொல்ல மாட்டான் ஆனா மோடி ஒழிக மட்டும் நீட்டி முழக்கிச் சொல்வான்.கொஞ்சம் ஹ்யூமன் சைக்காலஜியும் படிங்க PM .
புரிஞ்சுக்கங்க.

நீங்க மேக்ரோ லெவல்ல நிறைய பண்ணியிருக்கீங்க. ஒங்க கிட்ட அவகாசம் நிறைய இல்லை. சீக்கிரமா மைக்ரோ லெவல்லயும் இந்த மாதிரி சில சாக்லேட் குடுங்க.

அடுத்த தடவை பிரதமரா நீங்க வரணுங்கிற ஆசை உங்களுக்கு இருக்கோ இல்லியோ எங்களுக்கு இருக்கு.

நீங்க வரணும்.

நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற.

உங்களின் நலம் நாடும்

உங்கள்மூலம் இந்த நாட்டின் நலம் நாடும்

கோதை நாச்சியார் என்னும் வீட்டு வேலையே பார்க்காத குடும்பத்தலைவி

பி கு (N B) ஒங்களைப் பத்தி நெகட்டிவா கமென்ட் அடிக்கிற எல்லா ஆளுங்களுமே என்னை மாதிரி வேலையத்ததுங்கதான்.

எனக்கு என்ன தகுதி இருக்கு ஒங்களுக்கு அட்வைஸ் பண்ண?. பண்றேனா இல்லையா?
அதே மாதிரிதான்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...