அன்பு தம்பி ஸ்டாலினுக்கு,
இன்று எனது சிலை திறப்பு விழா என நீ தினமும் என் சமாதியில் வைக்கும் முரசொலி மூலம் அறிந்தேன்...என் சிலை திறப்பு விழாவில் நான் இல்லையே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் இந்த விழாவுக்கு “லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் சாவுக்கு காரணமாக இருந்த” என தமிழகமே ஓலமிட்ட, நான் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த சோனியாவை வைத்து என் சிலையை திறப்பது மெத்த மகிழ்ச்சி...
நம்மை ஆட்சி கட்டிலில் அமரவிடாத சோற்றலடித்த பிண்டங்களாகிய தமிழக மக்களுக்கு ஈழம், தமிழர் படுகொலை என்பதெல்லாம் நிச்சயம் மறந்து போயிருக்கும்...மறதி திராவிட வியாதி அல்லவா...பழையதை தமிழகம் நினைவு வைத்திருந்தால் கழகம் எப்படி மறுபடி மறுபடி ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கும்...
நிற்க..
உனக்கு துண்டு சீட்டில் எழுதி தந்ததை மட்டுமே படிக்கவும்.. நீ மேடைகளில் பேசும் போது சொந்தமாக பேசுகிறேன் என்ற அவாவில் ஆக என்பதை தவிர மற்றவற்றை தப்பும் தவறுமாக பேசுகிறாயாம்...பழமொழிகளை முற்றிலும் தவிர்ககவும்...உனக்கு தெரியாததை பேசாதே..உனக்கு எதுவுமே தெரியாது என்பதையும் அறிந்தவன் நான் ..அதறக்கு தான் அன்பு தம்பி வைகோ இருக்கிறானே.. அவன் பேசட்டும் ..அதற்க்காக அவனுக்கு டீ மட்டும் வாங்கி கொடு...அது போதும்..
அடுத்து, நீ வைத்த சிலையில் கை பெரியதாக இருப்பதாக தகவல்கள் கண்டேன்...காற்றிலும் காசு பார்த்த நமக்கு சட்டை பையையும் பெரியதாக வைத்திருக்கலாம்...அடுத்து இனி சிலைகள் வைக்கும் போது மறக்காமல் பையை பெரிதாக வைக்கவும்...
செந்தில் பாலாஜி, வைகோ திருமா போன்றவர்கள் உன்னை துணை பிரதமராக அமர வைக்க உள்ளதாக அறிந்தேன்...இவர்களை வைத்து கொண்டு முதல்வர் பின்பு இந்திய துணை கண்டத்தின் துணை பிரதமர் ஆக முயலும் உன் ராஜதந்திரம் அறிந்து மெச்சினேன்..” குட்டி பதினாறு” என நீ நிருபிப்பதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன்...தேர்தல் காலங்களில் இவர்களுக்கு இதயத்தில் இடம் தந்து சிறப்பிப்பேன் ..அதையே நீயும் செய்து விடு....
கழக உடன்பிறப்புகளே..
இந்த சிலை திறப்பு விழாவுக்கு நான் உங்களுக்கு விடுக்கும் செய்தி....
கடும் சவால்கள் உன் முன் உள்ளது..மூன்றாம் கலைஞர் உதயநிதியை அடுத்த தலைமுறை தலைவராகவும், நான்காம் கலைஞர் உதயநிதி மகனை அடுத்த தலைவராக உயர்ததவும், கனிக்கு மத்திய மந்திரி பதவியும் பெற்று தர வேண்டிய பெரும் பொறுப்பு உன் முன் உள்ளது..பெரியார், அண்ணா தந்த கொள்கைகளை தாங்கி உள்ள உடன்பிறப்புகளே... கழகமே குடும்பம், குடும்பமே கழம் என்பதை மனதில் கொண்டு, கடமை கண்ணியம், கட்டுப்பாட்டுடன் தந்த பணி செய்து முடித்து, பெரும் பகை தீர்த்து என்னிடம் உள்ள அண்ணாவின் இரவல் இதயம் மகிழ கழக பணி ஆற்றுவாயாக...
அன்புடன்
மு.க ..
No comments:
Post a Comment