https://www.facebook.com/groups/501237920234030/permalink/760481184309701/
கேஸ் இணைப்புக்கான மானியம் வரவில்லை என்றால்
👉 உங்களது மெபைலில் இருந்து www.mylpg.in என்ற இணையதளத்தில் செல்லவும்.
👉 இணையத்தில் வலதுபக்கம் உங்களது 17 இலக்க LPG id டைப் செய்யவும்.
👉 LPG id தெரியாதவர்கள் அதன் மேலே காணும் Click here எனும் லிங்கை கிளிக் பண்ணவும்.
👉 அதன் பிறகு வரும் கட்டத்தில் நீங்கள் எந்த கம்பெனி இணைப்பை பெற்று இருக்கிறீர்கள் என்பதை கொடுக்கவும்.
👉 பிறகு வரும் திரையில் உங்களது Consumer எண்ணை அல்லது உங்களது பதிவு செய்யபட்ட மெபைல் எண்ணை டைப் செய்யவும், பிறகு தோன்றும் திரையில் காணும் கோட்டினை கீழே உள்ள பாக்சில் டைப் செய்து Proceed பட்டனை அமுக்கவும்.
👉 இப்போது உங்களது 17 இலக்க LPG id கிடைக்கும். இந்த Id யை முன்னர் கூறிய பாக்சில் டைப் செய்து Submit பட்டணை அமுக்கவும்.
👉 இப்போது தோன்றும் திரையில் உங்களது கேஸ் இணைப்பு மானியத்துக்கான முழுவிவரங்களும் கிடைக்கும். உங்களது கணக்கின் மீத தொகை, எவ்வளவு மானியம் வந்துள்ளது போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
👉 உங்களுக்கு மானியதொகை எதுவும் அதில் தெரியவில்லை எனில் அந்த இணையத்தில் Feedback பட்டனை அமுக்கி புகாரினை பதிவு செய்யலாம்.
👉 அது மட்டும் இல்லாமல் இலவச அழைப்பான 18002333555 என்ற எண்ணில் அழைத்து சரியான தகவல்களை கொடுத்து புகாரினை பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment