Wednesday, 19 December 2018

உலகப்புகழ் பெறும் மதுரை

🍇💐🍇💐🍇💐🍇💐🍇
இதுவரை இந்தியாவில் '8' எய்ம்ஸ் மருத்துவமனைகள்   செயல்பட்டு வருகின்றன!
1) டில்லி
2)ஜோத்பூர்
3)போபால்
4)புவனேஸ்வர்
5)ரிஷிகேஷ்
6)பாட்னா
7)ராய்ப்பூர்
8)ரெபரேலி
9வது இடமாக "மதுரை" தேர்வு செய்யப்பட்டு இருப்பது  நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்😁😁😁😁
45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1268 கோடி செலவில் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது!
இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் 10முதல் 15 கி.மீட்டருக்கு பிளாட்--நிலத்தின் விலை பலமடங்கு உயரும்; ரயில்--பேருந்து-விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்; கேரளா--கர்நாடகா--ஆந்திரா--புதுச்சேரி-சென்னை-மும்பை--கோவா முதலான அண்டை மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது; மிக மிகக் குறைவான செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்;  தோப்பூரைச் சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்கள் கரடிக்கல்--வேடர் புளியங்குளம்-வடபழஞ்சி-தென்பழஞ்சி முதலான ஊர்கள் புதுப் பொலிவு பெறும்; சாலைகள் நன்கு செப்பனிடப்படும்; விமான நிலையத்தில் இருந்து தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனியாகச் சாலை வசதி செய்யப்படும்; எய்ம்ஸ் அருகில் மிகப்பெரிய பேருந்து நிலையம்--தனியார் லாட்ஜ்கள்--தீயணைப்பு நிலையங்கள்--வங்கிகள்--ஏடிஎம் கள்--பெட்ரோல் பங்க்--உணவு விடுதிகள்--காவல் நிலையம்--மருத்துவர் குடியிருப்பு--டீன் குடியிருப்பு--காம்ப்ளக்ஸ் முதலானவை களை கட்ட உள்ளன! ✅💯🍒💯🍒
மொத்தத்தில் மதுரை, உலகப்புகழ் பெற்று தலைநிமிர்ந்து மிளிர உள்ளது! இந்தியா ஒளிர்கிறது; மதுரை மிளிர்கிறது! 👍மகிழ்வுடன்👍மாணிக்கம்👍

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...