திரு கல்யாண சுந்தரம் அவர்கள் திரு மோடி அவர்களை பற்றி எழுதியது.
_பாரதத்தாயின்_தவப்புதல்வரே..!
ஈடு இணையற்ற எங்கள் தலைவரே. திரு மோடி அவர்களே.
உங்களுக்கு இத்தேசத்தின் ஓர் சாமான்யன் மிகுந்த வணக்கத்துடன் எழுதுவது...
சுனாமியாக பொங்கிய உங்களின் ஆக்ரோஷத்தில் அடித்துத் துரத்தப்பட்டு எங்கோ ஒரு அதலபாதாளத்தில் கிடந்த பலர் இன்று உங்களைப் எள்ளி நகையாடுவதை பார்கிறேன். சொல்ல வாய் கூசும் வார்த்தைகளால் நித்தமும் உங்களுக்கு வசவுகளால் அர்ச்சனை செய்பவர்கள் பலர்...
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே இருக்கையில் பலர் தங்களது ஓட்டுக்களைத் தக்கவைத்துக் கொள்ள பணத்தை வாறி இறைக்கத் தயங்கவே தயங்கமாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் உதவிப்பணம் மற்றும் ஓய்வூதியம் தருவது, ஆடு, மாடு, கழுதை, குதிரை, டிவி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின், கட்டில், பீரோ, நாற்காலி, மேஜை முதல், குடிப்பதற்கு குவார்ட்டர், திண்பதற்கு கோழிபிரியானி வரை இலவசமாக தருவதற்கும், விவசாயக் கடனை ரத்து செய்வது, வேலையில்லாப் பட்டதாரிக்குப் பணம் தருவதிலிருந்து சாப்பாட்டை வாயில் ஊட்டிவிடுவது, கால் கழுவி விடுவது வரைக்கும் இனி பலரும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தோல்வியுறும் பட்சத்தில் பல கட்சியின் மீதான ஊழல் வழக்குகள் தேங்கிப் போகும். அடுத்து ஆள்பவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற கலக்கத்தில் ஊழல் குற்றச் சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்படும்.
பல ஊழல் கறை உத்தமர்கள் ஏற்கனவே இதற்கான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்கள். எனவே எந்த அதிகாரியும் துணிந்து தற்போது ஊழல் விசாரணைகளில் சிக்கியுள்ளவர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றத்சாட்டுகளின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது சந்தேகம்தான்...
இதுபோல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஊழல் கட்சிகளுக்கும், அதன் களவாணிகளுக்கும், முக்கியமாக தாவூத் இப்ராஹிம் போன்ற ஹவாலா ஆசாமிகளுக்கும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், பாரதத்தை பிளவுபடுத்த நினைக்கும் உள்நாட்டு மாவோயிஸ்ட்களுக்கும், மதவெறியர்களுக்கும், அதையெல்லாம் விட பாகிஸ்தானுக்கும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஒரு வாழ்வா, சாவா என்கிற போராட்டத்தில் மீண்டும் நீங்கள் ஜெயித்து வந்தால் மேற்படியாளர்கள் அடையவிருக்கும் நஷ்டம் அளவில்லாதது.
கள்ள நோட்டடித்தும், ஹவாலா பணத்தை வைத்தும் இதுவரை தாக்குப் பிடித்துவந்த பாகிஸ்தான் உங்களின் டிமானிடைசேஷனினால் ஏறக்குறைய திவாலாகும் நிலைக்கு வந்திருக்கிறது. காஷ்மீரில் கல்லெறி சம்பவங்களும் பயங்கரவாத செயல்களும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உங்களது வெற்றி பாகிஸ்தானைச் சிதறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மீண்டும் நீங்கள் பிரதமரானால், கண்டெய்னர்களிலும், கொடவுன்களிலும், ரகசிய இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தூக்கியெறிவதனைத் தவிர ஊழல் கட்சிகளுக்கும், ஹவாலா அயோக்கியர்களுக்கும் வேறு வழியில்லை. எனவே எப்பாடு பட்டேனும் நீங்கள் ஜெயிப்பதனைத் தடுக்கவே முயல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் பிரதமராகாவிட்டால் அடுத்து வரும் முதல் சட்டமே செல்லாத பழைய நோட்டுக்கள் மீண்டும் செல்லும் என்பதாகவும் இருக்குமோ என அச்சமாக இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பல லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவெங்கும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
நீங்கள் தவறு செய்த ஊழல் திருடர்களின் மீது கடும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்ராயம். ஒரு குறைந்தபட்ச நடவடிக்கை அவர்கள் மீது எடுத்திருந்தால் கூட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
அதேநேரத்தில் நீங்கள் உங்களால் இயன்றதைச் செய்தீர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மனித உரிமையாளர்களால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் நீங்கள் கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்களும், நீதிமன்றங்களால் ஊழல்வாதிகளுக் கெதிராக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் என பல முட்டுக்கட்டைகள் ஒருபுறமும், ஊடகங்களின் வாயிலாக உங்களுக்கெதிராக பரப்பப்படும் பொய்ப்பிரச்சார செய்திகள் ஒருபுறமும், உடன் இருக்கும் ஊழல்வாதிகள் மற்றும் திறமையற்ற அதிகாரிகள் இன்னொருபுறமும், இவர்களை வைத்துக் கொண்டு நீங்களால் இதுவரை சாதித்ததே பெரிய சாதனைதான். இதைவிட வேறு என்ன பெரிதாக செய்திருக்க முடியும்?
தேர்தலில் தோற்றால் துண்டை உதறி தோளில் போட்டுப் போய்க்கொண்டே இருங்கள். இனி நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்த ஏழைதேசம் இழப்பது அதிகமாயிருக்கும். உங்களைப் போன்ற ஒருவர் இனி பிறந்துவர எத்தனை நூற்றாண்டுகளாகுமோ, யாருக்குத் தெரியும்?
இந்த தேசத்து பிரஜைகளின் முட்டாள் தனத்தால், மூடத்தனத்தால், சுயநலத்தால், மதிமயங்கிய தன்மையால் கிடைப்பதற்கரிய ஒரு மாணிக்கத்தை இழந்தால், அதனால் உங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. போய்க்கொண்டே இருங்கள், அப்துல்கலாம் போல. ஏற்கனவே நாங்கள் காமராஜ், இராஜாஜி, கக்கன் என பல ரத்தினங்களை இழந்து, இன்றுவரை மீட்டெடுக்க இயலாதவர்களாய் உள்ள பெருமையுடையவர்கள்..!
கடந்த ஆண்டு உங்கள் பிறந்தநாளில் உங்களுக்கு நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்...
உங்கள் உத்வேகமான உரைகளை கேட்டு எழுச்சி கொள்கிறோம்....
உங்கள் சுறுசுறுப்பான செயல்பாடுகளை கண்டு ஆச்சர்யமடைகிறோம்...
உங்கள் ஊழலற்ற, வேகமான ஆட்சி நிர்வாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்....
நாட்டின் முன்னேற்றத்துக்காக நீங்கள் மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள உங்க துணிவை கண்டு வியக்கிறோம்.....
பெரும்பாண்மை மதமக்களை மதித்து செயல்படும் முதல் ஆட்சியாளரான உங்களை கண்டு பெருமிதம் கொள்கிறோம்..
சிறுபாண்மையினருக்கு உண்மையில் தற்போது என்ன தேவை என்பதை அறிந்து அதற்காக மெனக்கெடும் உங்கள் அக்கறையை பாராட்டுகிறோம்....
உலக அளவில் இந்தியாவின் மதிப்பை விண்ணுயர உயரச் செய்த உங்கள் சாதனையை கண்டு குதூகலிக்கிறோம்...
உங்கள்மேல் அறிவிலிகளால் தவறாக வைக்கப்படும் விமர்சனங்களை பெருந்தண்மையோடு வரவேற்கும் உங்கள் சகிப்புத் தன்மையை கண்டு பேராச்சர்யம் கொள்கிறோம்...
இந்த நாட்டின் நிர்வாகத் தலைவராக இருந்து கொண்டு நாட்டுக்காக குடும்பத்தையும் மறந்து அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் உங்களை வணங்குகிறோம்..
அப்படி உங்களை வணங்குவதில் பெருமை கொள்கிறோம்...
ஜெய்ஹிந்த்.
No comments:
Post a Comment