Wednesday, 19 December 2018

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்... பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1853640471425004/

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்... பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?

https://www.toptamilnews.com/index.php/kt-ragavan-says-about-bjp-politics-tamilnadu
.

 MENU

அரசியல்

தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள்... பாஜகவின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்?BY VIKRAM MUTHU DECEMBER 20, 2018 0 1 VIEWS PRINT THIS POST

      

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் ஆட்டத்தை காண தயாராகுங்கள் என கே.டி.ராகவன் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன்  நமோ செயலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரம், வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் அதில் கலந்து கொண்டார்கள். காஞ்சிபுரம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது.

.

பிரதமர் மோடி பேசியதை அடுத்து பாஜக நிர்வாகிகளிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராகவன் பேசுகையில், தமிழகத்தில் இதுவரை ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் இருந்தார்கள். அந்த இரண்டு ஆளுமைகளும் தற்போது இல்லை. இதை பயன்படுத்தி கொள்ள கட்சியின் தலைமை தீர்மானித்துவிட்டது. ஜனவரியிலிருந்து பாஜகவின் ஆட்டத்தைக் காண நீங்கள் தயாராக இருங்கள் என்று பேசினார்.
.
அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் அதிமுகவை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்றையும் சாதிக்க முடியாது என நினைக்கும் டெல்லி, தனக்கு எதிராக தமிழகத்தில் உருவாகி இருக்கும் அதிருப்தியையும், கூட்டணியையும் சமாளிக்க அமமுகவையும், அதிமுகவையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் சமீபகாலமாக இணைப்பு படல பேச்சுக்கள் வெளிப்படுகிறது என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். 

மேலும், சிறையில் இருக்கும் சசிகலா கூடிய விரைவில் டெல்லி பரிந்துரையின் பேரில் விடுதலை ஆகலாம். விடுதலை ஆன பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகலாம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்தால் டிடிவி தினகரனின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தாலும், அதுகுறித்து தற்போது டெல்லி கவலைப்படவில்லை. சசிகலாவிடம் கட்சியை ஒப்படைத்த பிறகு டிடிவியையும் அதிமுகவில் இணைக்கும் விதமாக  \அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க பாஜக பரிந்துரை செய்யும் என்கிறார்கள் அவர்கள்

அதேசமயம், முதல்வர் கனவோடு வலம் வரும் டிடிவி தினகரன் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பது சந்தேகமே எனவும் டிடிவி வட்டாரம் கூறுகிறது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...