Wednesday, 21 November 2018

பெரிய பாதை ( 48 மைல்

பல முறை சபரிமலை  சென்றிருக்கிறேன்

பெரும்பாலும் பெரிய பாதை ( 48 மைல்)

42 வருடங்களுக்கு  முன் துவங்கியது சி ல இடங்களில்  செங்குத்தான உயரம்

கீழே பார்க்கவும் முடியாது பக்கவாட்டில் பெரும் பள்ளதாக்கு

பலமுறை சென்றாலும் ஒவ்வொரு  முறையும் கைகால் நடுங்கும்

பகலில் சட்டை போட முடியாது வியர்வை ஆறாக ஓடும்

செங்குத்தான  பாறைகளில் ஏறும்போது இரு புறமும் மற்ற பக்தர்கள்  நின்று துண்டுகளால் வீசுவார்

தென்றலை தீண்டிய ஒரு பெரு மகிழ்ச்சி

அந்த சுகம் அப்பப்பா அப்படி ஒரு குளிர் வீச்சு

ஆங்காங்கே  நிற்பவர்கள் நம் வாயில் குளூகோஸ் ஆரஞ்சு மிட்டாய் களை போடுவார்கள்

இரண்டு காலும் இல்லாத சிலர் ஊர்ந்தே வருவார்கள்

எதற்காக இப்படி கஷ்டப்படுகிறார்கள் என ஒருவரை கேட்டேன்

எனக்கு எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தாலும் இறைவன் என்னை இந்த பிறவியில் இரு கால் இல்லாமல் படைத்து விட்டான் அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவி வேண்டும்  என்பதற்காக என்று
சொல்லி ஊர்ந்து போனார்

வெறும் குச்சியை மட்டுமே ஊன்றி செல்லும் தாய்மார்கள்  தாயை தோளில் சுமந்தவாறே தூக்கி செல்லும்  பிள்ளைகள்

இதெல்லாம்  seen to be believed

ஆங்காங்கே  இருக்கும் விரிகளில் தங்கி செல்வோம்

கடைசியாக சந்நிதானம் நெருங்கும் போது வயதானவர்கள் ஊனமுற்றவர் சிறிது கீழே அமர்ந்து ஓய்வு எடுத்து செல்வார்கள்

இப்போது யாரும் வழியில் உட்கார முடியாதபடி தண்ணீர் பீய்ச்சப்படுகிறது

அதுவும் இரவு நேரம் என்றால் கடும் குளிர்

பினராயின் எண்ணம் யாரும் கோயிலுக்கு  செல்ல விடாதபடி செய்வது

வரும் நாட்கள் சோதனையான காலம்

இப்போது கேரளாவில் நடப்பது ஒரு யுத்தம்

சாகப்போவது யாரென தெரியவில்லை

உங்களில் எத்தனை பேர்" ஷிண்டலர்ஸ் லிஸ்ட்"  என்ற படத்தை பார்த்து  இருப்பீர்கள்  என தெரியவில்லை

கிட்டதட்ட 60 லட்சம் யூதர்கள் வதை முகாம்களில்  கொல்லப்பட்டனர்

அந்த படத்தில் ஒரு காட்சி
போலந்தில் இருந்து  டிரெய்னில் வரும் யூதர்கள் கீழே இறக்கப்பட்டு அவர்களை ஆண் பெண் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவர் கையிலும் சோப்பு துண்டு கொடுக்கப்பட்டு மறைவான
பகுதியில் குளிக்க சொல்வார்கள் நாஜிக்கள்

குளிக்க செல்லும் ஆர்வத்தில் அனைவரும் சந்தோஷமாக ஒடி பாத் ஷவரை திறக்க அங்கிருந்து விஷவாயு வெளியேறும் யூதர்கள்  கொத்தாக இறந்து போவார்கள்

இந்த படத்தை பார்க்கும்போது ஏனோ ஷிண்டலர்ஸ் லிஸ்ட்  படம் நினைவுக்கு  வந்தது

நிச்சயம் ஒரு நாள் பினராயின்  முடிவு ஹிட்லர் போலாகிவிடுமோ என அச்சப்படுகின்றேன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...