ஐயப்ப சரணம்.
சபரிமலையிலும் அதன் காரணமாக கேரளத்திலும் இத்தனை ரகளை நடக்கிறது. ஆனால் கவர்னர் இதுவரை எதுவும் செய்யவில்லை என்கிற கோபக்குரல்களைப் பார்க்கிறேன். முதலில் இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் சட்ட, ஒழுங்குப் பிரச்சினை. பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அந்த மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக அரசியல் சட்ட ரீதியாக மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்பதனைப் பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை.
அதிகபட்சம் அந்த மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் மட்டுமே மத்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதனைச் செய்வதற்கு பாரதிய ஜனதாக் கட்சி துணிவதில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா அரசு ஹிந்துக்களுக்கு எதிராக பேயாட்டம் ஆடியபோதும் மத்தியில் அதிகாரத்திலிருக்கும் பா.ஜ.க. அதனை வேடிக்கை பார்த்தே வந்திருக்கிறது. அதிகபட்சம் மோடியோ அல்லது அமித்ஷாவோ கண்டனக்குரல் எழுப்புவதுடன் மட்டுமே பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் இருந்து வந்திருக்கின்றன.
இதே சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி இருந்திருக்குமானால் பிணராயி அரசு கவிழ்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் மோடி எதனையும் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்கிற பிடிவாத மனப்பான்மையுடன் இருப்பவர். ஒருவேளை பிணராயி அரசு பதவி நீக்கப்பட்டாலும் அது மிகுந்த யோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரைமனதுடைய முடிவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். அது சரியான யோசனையா இல்லையா என்பதனை எதிர்காலமே சொல்லும்.
பிணராயி கவிழ்க்கப்பட்டால் கம்யூனிஸ்டுகள் கேரளத்தில் வன்முறையை அவிழ்த்துவிடத் தயங்கமாட்டார்கள். அதனால் ஏற்படும் அழிவு பெரியதாக இருக்கும் என்கிற தயக்கமும் மத்திய அரசுக்கு இருக்கக்கூடும். கம்யூனிஸ்டுகளும், DYFI போன்ற தீவிரவாத இயக்கங்களும், கிறிஸ்தவ அடிப்படைவாதமும் வேரோடிப் போயிருக்கும் கேரளத்தில் ரத்தக்களறியை மிக எளிதாக பிணராயியால் உருவாக்கமுடியும்.
கேரள கவர்னர் எதுவும் செய்யவில்லை என்பது சரியான குற்றச்சாட்டில்லை என்பதே என்னுடைய கருத்து. மத்திய அரசாங்கம் கேட்காமல் அவரால் பிணராயிக்கு எதிராக எதுவும் செய்ய இயலாது. அதிகபட்சம் ஒரு அறிக்கையை வேண்டுமானால் கேட்டு உள்துறைக்கு அனுப்பி வைக்கலாம். அதனைத் தாண்டி அவரால் வேறென்ன செய்ய இயலும் என்று எனக்குத் தெரியவில்லை.
மோடியும், அமித் ஷாவும் மவுனமாக நடப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். It says a lot. I think they are playing a strategy to finish the Communists from Kerela once for all. நடப்பதனைப் பார்த்து கேரள மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இதனை அரசியலாக்கிப் பார்க்காமல் பின்னனியிலிருந்து இயக்குவதுடன் தற்போதைக்கு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். Pinarayi is freaking out. He is making mistakes after mistakes. One can feel that he is literally scared. அதனால்தான் போலிசை ஏவிவிட்டு அப்பாவி பக்தர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார். It is not going to end up well for him. Pinarayi knows that. சொந்தக் கட்சிக்காரனே பிணராயியைத் தூக்கி எறியும் காலம் வந்து கொண்டிருக்கிறது.
மோடியின் அமைதி பினராயின் மனதில் பயத்தை விளைவித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்பாடுபட்டாவது பா.ஜ.க.வை இந்தப் பிரச்சினையில் இழுத்துவிட்டு அரசியலாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் பிணராயி. அப்படி நடந்தால் பிணராயி தப்பித்துக் கொள்வார். ஆனால் அது நடக்கப் போவதில்லை. மோடியும், அமித் ஷாவும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.
பிணராயின் காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடவே கேரள கம்யூனிஸ்ட்டுகளின் கொட்டமும்.
No comments:
Post a Comment