Tuesday, 27 November 2018

மை லைப் பவுண்டேசன்

Fwded msg👇🏽

நண்பர்களே,  நான் மூன்று வாரங்களுக்கு முன்பு எனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் பயணம் செய்தேன். நாங்கள் பயணம் செய்த வாகனம் விழுப்புரத்திற்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. அந்த நேரத்தில் செய்வதறியாது தவித்து பொழுது காரில் பயணம் செய்து கொண்டிருந்த எனது நண்பர் விபத்துக்குள்ளான வாகனம் எனது வாகனம் என்பதை விசாரிக்க வந்தார். அவர், அவசர உதவிக்கு மை லைப் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபத்து நடந்த பகுதி மற்றும் விபத்தை பற்றி தெரிவித்தார் தொடர்பு கொண்ட சில நிமிடங்களில் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டிய உதவிகளை செய்தனர். சில நாட்கள் கழித்து என் நண்பரிடம் இந்த நிறுவனத்தை பற்றி கேட்ட பொழுது, தான் மை லைப் பவுண்டேசன்  உறுப்பினர் என்றும், இந்த நிறுவனம் ஓரு தொண்டு நிறுவனம் என்றும் சென்னையிலுருந்து கன்னியாகுமரி வரை நெடும்சாலையில் எந்த ஒரு பகுதியில் விபத்து நடந்தாலும் அவர்கள் அவர்களுடைய தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ ஊழியர்களை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு தார்மீக ஆதரவு மற்றும் உதவிகள் செய்வதாக கூறினார். இந்த நிறுவனத்தில் சந்தாதாரராக சேர்வதற்கு உறுப்பினர் கட்டணம் ஏதும் இல்லை என்றும் மற்றும் இந்த நிறுவனத்தின் மற்ற தகவல்களை அறிய  www.mydearlife.org  என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார் நம்மில் பலருக்கும் பயனளிக்கும் இந்த நல்ல செய்தியை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...