கோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள்.
மன்னர் காலத்தில் வடிவமைக்க பட்ட சில கோவில்களில் உள்ள மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாமல் இன்றளவும் விஞ்சானிகளும் விழி பிதுங்கி நிற்கிறார்கள் என்றே கூற வேண்டும் அந்த வகையில் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளது.
10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்ட பட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளில் மூன்று விதமான மர்ம நிழல்கள் உள்ளன.
1 ) லிங்க கருவறை I :
இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலைமுதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை.
2 ) பிரம்மா கருவறை
இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
3 ) லிங்க கருவறை I I
இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.
சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோயிலிற்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர்வந்துள்ளது. நிழலை வைத்து பல மர்மங்களோடு இந்த கோவிலை கட்டியுள்ளதால், இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment