Tuesday, 27 November 2018

புனித ஜோசப் கல்லூரியில் சங்க இலக்கியங்களில் பெண்களை கேவலமாக நடத்தினார்கள் என்று கூறி ஆராய்ச்சி கட்டுரைகள் படிக்கிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்

விழித்துக்கொள்ளுங்கள் முதலாளிகளே, கொள்ளையன் வந்துள்ளான்  - கட்டிபோடப்பட்ட நாய் குலைக்கிறது.  மொத்த வேலையையும் நாயே செய்யாது.  முதலாளியும் ஏதாவது செய்யவேண்டும்.

# # புனித ஜோசப் கல்லூரியில் சங்க இலக்கியங்களில் பெண்களை கேவலமாக நடத்தினார்கள் என்று கூறி ஆராய்ச்சி கட்டுரைகள் படிக்கிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.  இது லேசுப்பட்ட விஷயமல்ல.  இத்தனை நாட்கள் தமிழின் உள்ளார்ந்த விஷயங்களை தமிழாற்றுப்படை என்று சொல்லி வைரமுத்துவை வைத்து பிழைப்பு நடத்த முயன்றார்கள்.  இப்போது தமிழ் இலக்கியங்கள் அசிங்கம் என்று கூறி ஏதாவது இரட்டை பொருள் தொனிக்கிறாற்போல இருக்கும் அல்லது காமரசம் சொட்டும் கவிதைகளும் இருக்கும்.  உடன்கட்டை, இளவயது விவாகம் மிக முக்கியம் என்றும் பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாக பிராமணர்கள் நடந்துகொண்டார்கள் என்று இவர்களே ஏதாவது இட்டு கட்டி விட்ட விஷயமும் வரும்.  வந்தே தீரும்.  எனக்கு ஐயமே இல்லை.  எவ்வளவு முயன்றாலும் பிரிவினை ஏற்படுத்தும் என்று நினைத்து ஏற்படுத்திய தமிழ் வெறியிலிருந்து இவர்களை மீட்கமுடியவில்லை.  எங்கு சுற்றினாலும் எல்லோரும் தமிழ் இலக்கியங்கள் என்று எடுத்துக்கொண்டால் கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள், திருப்புகழ், திவ்யப்ரபந்தம், பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் என்று தமிழ் இலக்கியங்களிலும் ஹிந்து மதமே உள்ளது.  அதனால் தமிழ் இலக்கியங்களை அசிங்கப்படுத்தி, பாசுரங்களில் உள்ள அர்த்தங்களை கேவலமாக சித்தரித்து, தமிழ் என்றாலே தலை குனிய வைக்க திட்டம். 

இறைவனையே காதலித்து அதில் திளைத்திருக்கும் ஒருத்தி தன் நிலையை விளக்கும் விஷயங்களில் காமரசம் சொட்டும்தான்.  அதை இன்றைய சினிமா கவிஞர்களின் அசிங்கம் பிடித்த வர்ணனை நிலையோடு ஒப்பிட்டு படு கேவலமாகத்தான் இது அரங்கேறப்போகிறது.  இதை அரசு தடுக்காது.  வழக்கம் போல ஹிந்து அமைப்புகள் கூச்சலிடும்.  நீதிமன்றம் எதை வைத்து தடை செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்கும்.  அத்தனை திட்டங்களையும் தயார் செய்துவிட்டுத்தான் களத்தில் இறங்குவான் கம்யூனிச கிறிஸ்தவன்.  இவன்தான் அடபாப்டிஸ்ட் எனும் படித்த, சிந்திக்க தெரிந்த, மதவெறி பிடித்த, நாத்தீகன் போர்வையில் இருக்கும் கம்யூனிஸ்ட்.

இதே போல வியாபாரிகள் சங்கத்தை ஹிந்து சிந்தனையாளர்கள் அன்று அணுகி ஹிந்து பண்டிகைகள் மீது கை வைக்கிறார்கள்.  நீங்கள் எல்லோரும் ஹிந்து என்ற குடையின் கீழே இணையுங்கள் என்று சொன்னபோது எங்களுக்கு முஸ்லீம் கிறிஸ்தவர் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.  அதெப்படி ஹிந்து என்று இணைவது என்றார்கள். 

இன்று தீபாவளி பட்டாசில் கைவைத்துவிட்டான்.  கோலோச்சிய சிவகாசி நிறுவனங்களும் அதை நம்பி இருந்த மக்களும் இன்று தெருவில்.  இப்போது இவனே சிவகாசி நிறுவனங்களுக்கான பிரார்த்தனை என்று அவர்களை மதம் மாற்ற முயற்சிக்கிறான்.  குடிசை தொழிலை நம்பி இருப்போர் என்னதான் செய்வார்கள்?

ஏற்கனவே சினிமாவில் கை வைத்துவிட்டான்.  எங்கு பார்த்தாலும் மட்டமாகவே எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். 

போராட்டங்களை ஊக்குவிக்கிறான்.  பல கொலைகளை நிகழ விடுகிறான்.  போராடும் தலைவர்களுக்கு கலவர தினத்தன்று விலகி நிற்கும் தகவல் போகிறது.  அந்த அளவுக்கு திட்டமிடுகிறான்.

சபரிமலையில் கை வைத்துவிட்டான்.  மத்திய அரசு தலையிட்டாலும், நீதிமன்றம் தலையிட்டாலும் போடா என்கிறான். 

நமக்கு தெரியாமல் போன இன்னொரு விஷயம் நாய்கள் பற்றியது.  வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து, நாட்டு நாய்களை தெரு நாயாக்கினான்.  அந்த ஊர் சீதோஷ்ண நிலையில் பிறந்து வளர்ந்து பழகிய நாயை, யாரை கேட்டு இறக்குமதி செய்தீர்கள் என்று ஒரு வழக்கு போடவில்லை நாம்.  ஆனால், PETA இறங்கி வேலை செய்கிறது.

45 நாட்களில் இறைச்சிக்காக கொல்லப்படவேண்டும் என்ற நிலையில் இருக்கும் ப்ராய்லர் கோழிக்கு எதிராக யாரும் எதுவும் பேசுவதில்லை.  நாட்டு கோழி வளர்ப்பு அழிந்தது.  நாட்டு முட்டை என்ற விஷயமே இல்லை.  வெறும் வெள்ளை முட்டைதான். 

ஜல்லிக்கட்டில் தலையிட்டு மாடுகளை அழிக்க முயன்றான்.  இப்போதைக்கு நின்றுள்ளது.  அது ஏதோ அதிர்ஷ்டவசமாக தமிழ், தமிழன் என்ற போர்வையில் சிக்கிக்கொள்ள அந்த சொற்றொடர் அவனுக்கு எதிராக வேலை செய்தது.  அதனால்தான் இந்த மாற்றுத்திட்டம். 

இப்போது அந்த தமிழ் என்ற திமிரை அசிங்கப்படுத்தினால்?  நீ எதுவமே இல்லையடா, ஈனப்பிறவியே என்று தலை குனிய வைத்தால்?  நமக்குத்தான் எது சங்க இலக்கியம், என்ன இடம், பொருள், ஏவலில் அது எழுதப்பட்டது என்று எதையுமே விசாரிக்கும் பழக்கம் கிடையாதே.  எடுத்த உடனேயே ஆயுத எழுத்து, விவாத மேடை என்று ஊடக விவாதத்துக்கு போய் விடுவோமே.  அதை எல்லாம் உண்மை என்று நம்பிவிடுவோமே.  ஆழ ஆராய்ச்சி செய்யும் மனப்பக்குவத்தை, எதையும் தானே படித்தறிந்து உண்மை எதுவென விசாரிக்கும், படிக்கும் மனோபாவத்தை நம்மிடமிருந்து வேரடி மண்ணோடு நீக்கிவிட்டானே.  இனி அவன் என்ன சொன்னாலும் நம்புவோமே. 

நம்மை பொறுத்தவரை தூங்கி எழுவதிலிருந்து, பல் துலக்குவதிலிருந்து, கழிப்பறைக்கு செல்வத்திலிருந்து, காமம், சாப்பாடு, பூஜை, வேலை, தொழில், வீட்டை சுத்தம் செய்வது என்று எல்லாமே இறை உணர்வோடு செய்யப்படவேண்டும், அவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற மனோபாவத்தில் இருக்கிறோம் என்று நம்மவர்களுக்கு புரிய வைப்பதற்குள் மொத்த அழிவையும் ஏற்படுத்திவிடுவான். 

இது ஆராய்ச்சி கட்டுரைக்கான அழைப்பு நிகழ்வு அல்ல.  வேண்டாத வம்பு செய்யும் திட்டம்.  அடுத்த கட்டத்தை நோக்கி அவன் நகர்ந்துவிட்டான்.  கிறிஸ்தவத்தில் திருப்பாவைக்கு இசை வடிவம் தந்து பார்த்தான்.  துவஜஸ்தம்பம் நட்டான்.  ஆயுத பூஜை செய்தான்.  கர்நாடக சங்கீதத்தை காப்பி அடித்தான்.  சங்கீத வித்வான்களை  விலைக்கு வாங்கினான். இயேசு வேதம், இயேசு சஹஸ்ரநாமம், இயேசு சந்தியாவந்தனம் என்றான்.  பிராமணர்களை விலைக்கு வாங்கினான்.  திருக்குறளை வள்ளுவர் இயேசுவின் உபதேசத்தால் எழுதினர் என்றான்.  ஈசனே இயேசு.  இயேசு என்ற சொல்லிலிருந்துதான் ஈசன் என்ற சொல் வந்தது என்றான்.  இன்னும் பொய்களாக சொல்லிக்கொண்டே போனான், போகிறான், போவான்.  இதையும் நம்ப ஒரு கூட்டம் வரும்.  மாறும். 

இத்தனை செய்தானே, மாறினோமா பார்த்தாயா என்பார்கள்.  ஒரு கட்டிடத்தை இடிக்க வேண்டுமென்றால் யாரும் நட்ட நடுவில் உள்ள தூண்களை சாய்க்கமாட்டார்கள்.  முதலில் சுற்று சுவர், பின் மேல் தளத்தில் உள்ள சுவர்கள், பின் மேல் தளத்தில் உள்ள தூண்கள் என்று இறங்கிக்கொண்டே வருவார்கள்.  அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

கட்டிபோடப்பட்ட நாய் குலைக்கிறது.  ஏன் குலைக்கிறது, என்ன விஷயம் என்றாவது பாருங்கள்.  இது ஓய்வு அல்ல.  மரணத்துக்கான வாசல்.  விழித்துக்கொள்ளுங்கள். 

உறங்குகின்ற கும்பகன்ன
உங்கள்மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்றது இன்றுகாண்
எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய் என்று அன்று கம்பன் கும்பகர்ணனுக்காக பாடினான்.  இன்று ஹிந்து சமுதாயத்துக்காக படுவான். 

என்னவென்று கூறி இவற்கெங்குணர்த்துவேன் என் உள்ளம் எரிவதை.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...