20//08//2017
கொஞ்சம் உண்மையை பேசுவோமா ? தமிழ்நாட்டின் இன்றைய நிலை:
சிரமம் பார்க்காமல் முழுவதுமாக படிக்கவும் :
விவசாயிகள் போராட்டம் - காவேரி பிரச்னை - 50 வருஷமா தீரவில்லை - 40 MPs திராவிட இருந்தும் பிரயோஜனமில்லை - ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை முடக்கியது கெடயாது - 25 வருஷமா மத்திய அரசின் cabinet அமைச்சராக இருந்தார்கள்.. கூட்டணியில் இருந்து 2G ஊழல் செய்ய முடிந்தவர்களுக்கு காவேரி ஆணையம் அமைக்க முடியவில்லை.. குஜராத்தில் 1,66,082 தடுப்பணிகள் கட்டப்பட்டிருக்கு 10 வருஷத்தில்.. வெறும் உப்பு நிலமான kutch ல கூட இன்னிக்கி விவசாயம் செய்கிறார்கள்..தமிழ் நாட்டில்? ஏதோ பேருக்கு அங்கங்க கட்டி வச்சுருக்கானுங்க..350 CM மழை பெஞ்சு வெள்ளம் வரும்.. ஆனா 6 மாசத்துல தண்ணி இல்லைனு போராடுவோம்.. பக்கத்துல இருக்குற ஆந்திரால கிருஷ்ணாவயும் கோதாவரியையும் ஒரே வருஷத்துல இணைச்சுருக்காங்க (Limca book of records ).. ஆனால் உலகிலேயே முதன் முதலில் அணை கட்டிய கரிகால சோழனின் தமிழ்நாட்டில் ? 12 வருஷமா தூர் கூட வாரல..
விவசாய கடன் - இதே fasicst மத்திய அரசுதான் பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துச்சு.. பாலைவனமான ராஜஸ்தான் ல கூட 53 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்துல சேத்தது ராஜஸ்தான் மாநில அரசு.. காப்பீட்டு தொகை - 12000 கோடி.இங்க? 12 ஆயிரம் விவசாயிகளை மட்டுமே சேர்த்தது தமிழ்நாடு அரசு..காப்பீட்டு தொகை ? 242 கோடி. இப்போ விவசாயிகள் போராட்டத்துல கேக்குறது ? 40000 கோடி. தமிழ்நாட்டுக்கு இப்போ இவ்வளவு பெரிய தொகையை காப்பீடு இல்லாம குடுத்தா மத்த மாநிலக்காரன் எவனும் அடுத்து காப்பீடு பண்ண மாட்டான்.. திட்டமும் உடையும்.. 2008ல ஏற்கனேவே 38000 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி செய்தது மத்திய அரசு.. அனால் அது விவசாய தற்கொலையை தடுக்கவில்லை..ஆக, தடுப்பணைகள் கட்ட மாட்டோம், நதிகளை இணைக்க மாட்டடோம், விவசாயிகளுக்கு காப்பீடு பண்ண மாட்டோம்.. ஆனாலும் எங்களை செல்ல பிள்ளைகளை போல மத்திய அரசு இடுப்புல ஏத்தி வச்சு மூடு கண்ணன் வர்றான்னு சோறு ஊட்டணும்..
நெடுவாசல் போராட்டம் - கொஞ்சம் Geopolitics - OPEC னு சொல்ற கச்சா எண்ணெய் எடுக்குற நாடுகள் வச்சதுதான் இன்னிக்கி உலகம் முழுக்க சட்டம்.. அமெரிக்கால இப்போ shale gas எடுக்க ஆரம்பிச்சுட்டான்.. போக போக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்றத நிறுத்திக்குவான்.. போதாததுக்கு சோமாலியா ல எண்ணெய் இருக்குன்னு தெரிய வந்து அமெரிக்க ராணுவம் அங்க கால் வச்சாச்சு.. சீனா ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகள்ல எண்ணெய் எடுக்கிறதுக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டான்.. மிச்சம் இருக்குற பெரிய நாடு இந்தியா மட்டும்தான்.. போன வருஷம் மட்டும் 197 million டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செஞ்சிருக்கோம்.. நாளைக்கு கச்சா எண்ணெய் விலையை 100 டாலருக்கு OPEC நாடுகள் யேத்துச்சுன்னா 10 மடங்கு பாதிப்பு இந்தியாவுக்குதான்..அமெரிக்க intelligence நிறுவனமான CIA ஏற்கனவே பல முறை இந்தியாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் இதை வச்சு மிரட்டி காரியத்தை சாதிச்சிருக்கு.. ஈரான் pipeline விவகாரத்தில் தான் மும்பை தீவிரவாத தாக்குதலை பற்றி தெறிந்திருந்தும் இந்தியாவுக்கு சொல்லாமல் விட்டது.. டேவிட் ஹெட்லி CIA வின் பிடியில் இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததே..
அதை போலவே ஒரு விலை ஏற்றத்தைதான் இந்தியா 2012 - 2014 ல் சந்தித்தது.. பணவீக்கம் 13 சதவிகிதமாக எருவாதற்கும் அதுவே பொருளாதாரம் சரிவதற்கும் மத்திய அரசு மாறுவதற்கும் காரணமானது.. இதற்குப்பின்னர் தான் ONGC oil exploration ஐ தீவிரமாக்கியது.. முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 44 இடங்களில் hydrocarbon திட்டத்தை தொடங்கலாம் என்று அறிக்கை குடுத்தது.. பெரிய நாடுகளில் மிக மிக குறைவாக உள்நாட்டில் எண்ணெய் எடுக்கும் நாடு இந்தியா தான்.. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே பல committee க்கள் மத்திய அரசுகளை கேட்டு கொண்டும் பெரிய முண்டடேற்றம் இன்று வரை கிடையாது.. இப்படி ஒரு நிலையில் தான் 44 இடங்களில் hydrocarbon திட்டம் செயல் படுத்த ஆயத்தம் ஆனது.. குஜராத்தில் 5 இடங்கள், மஹாராஷ்ட்ரா வில் 5, தமிழ்நாட்டில் ஒன்றே 1 இடத்தில் மட்டும்தான்.. அது விவசாய நிலமாக அமைந்தது.. இதற்காக போராடுவதில் தவறொன்றும் இல்லை..ஆனால் திட்டம் என்னவோ செயல் படுத்த பட்டதை போலவும் விவசாயிகள் நிலங்களை மத்திய அரசு ஆக்கிரமிப்பு செய்து விட்டதை போலவும் குறிப்பாக தமிழ்நாட்டை குறி வைத்து தாக்குவது போலவும் வேறு மாநிலங்களில் இது போன்ற திட்டங்கள் இல்லவே இல்லை என்பது போலவும் propaganda செய்ய படுகிறது. உண்மை என்னவென்றால் தமிழத்தில் இதற்கு முன்பே 1950 களில் இருந்து ONGC செயல் பட்டு வருகிறது.. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசும் போது இந்த திட்டத்தை 44 இடங்களில் செயல் படுத்த ONGC பரிந்துரைத்துள்ளது.. தமிழ் நாட்டில் மட்டும் எதிர்ப்பு இருக்கிறது என்று தான் கூறினார்..
இதே போலத்தான் கூடங்குள அணு உழைக்கும் பிரச்சனை செய்தார்கள்.. இன்று தமிழகத்திற்கு 1200 MW மின்சாரம் அதிலிருந்துதான் கிடைக்கிறது.. 2012-2013 ல எத்தனை மணி நேரம் மின்சாரம் கிடைத்தது என்று நினைவிருக்கிறதா ? அன்று ரஷ்யா வை எதிர்க்க மற்ற மேலை நாடுகளில் இருந்து இவர்களுக்கு பண உதவி வந்தது.. இன்றும் அது போலத்தான்.. குஜராத்தின் நர்மதா நதி திட்டத்தை பிரபல சமூக ஆர்வலர் என்ற மேதா பாட்கர் எதிர்த்தார்.. இன்று அந்த திட்டம்தான் 1 கோடி மக்களுக்கு வாழ்வாதாரம்..அதன் நதி நீர் தான் 13 வருடங்களாக விவசாயம் 10 % வளர்ச்சியடைய உதவி செய்கிறது..
ஆனாலும் propaganda ஓய்ந்த பாடில்லை.. இதை வைத்து தனி நாடு, திராவிட நாடு என்றெல்லாம் கோஷம் போட்டாச்சு.. தனி நாடா போன மட்டும் கர்நாடகா தண்ணீர் குடுத்துருமா? இல்ல கேரளா தடுப்பணையை நிருத்தீடுமா? நம்ம அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் மக்களும் உறுப்பட்டால் ஒழிய எதையும் மாற்ற முடியாது.. ஆனா நமக்கென்ன வேணும் ? 12000 கோடிக்கு இலவசங்கள்.. டிவி, மிக்ஸிய வாங்கிட்டு வோட்டு போடறோம்.. என்னிக்காச்சும் டெல்லி ல பொய் போராட்டம் பண்ற மாதிரி சென்னைல பண்ணிருக்கோமா ? பண்ணது ஜல்லிக்கட்டுக்கு.. அன்று அதை போராடி விட்டு இன்று 6 மாசத்துக்குள்ள இருக்குற மாட்டை கொல்றதுக்கு விக்க கூடாதுன்னு சொல்ற சட்டத்தை மாட்டு வதை தடை னு பொய் சொல்லி சண்டை போடுறோம்.. போதா குறைக்கு தமிழன் காலங்காலமா மாட்டுக்கறி தின்கிற மாதிரியும் அத இப்போ நிறுத்த சொன்ன மாதிரியும் memes வேற.. புழல் உண்ணாமை னு ஒரு அதிகாரமே எழுதுன வள்ளுவன் தமிழன் இல்லையா ?பசு பாதுகாப்பை பாடுன இளங்கோவடிகள் தமிழன் இல்லையா ? இன்னிக்கும் 90 சதவிகித மாடு கேரளவுக்குதான் அடி மாடா போகுது.. தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள் கூட சில இடங்களில் தான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்..
இப்படி உண்மைகள் ஒரு புறம் இருக்க கடந்த 2 வருடங்களாக மட்டும் எதற்கு இவ்வளவு போராட்டங்கள்? இதற்கு முன்பு மத்திய அரசால் பாலரும் தேனாறும் ஓடியதா?2G, Aircel - Maxis , BSNL, சிதம்பரத்தின் பினாமி scam என்று ஊழல் மேல் ஊழல்களாக திராவிட காட்சிகள் செய்யும்போது பண்ணாத போராட்டம், நாடே சிரிக்கும் படியாக நடந்து கொண்ட அதிமுக வின் பதவி சண்டை இதை எல்லாம் பார்த்து வராத கோவம் திடீர் என்று எங்கிருந்து வந்தது? இதற்கெல்லாம் பின்னால் யார் இருக்கிறார்கள்? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாட்களை பார்த்தவர்களுக்கு தெரியும் உண்மை. உணமையாக போராடியவர்கள் சில ஏமாற்று வேலைக்காரர்கள் உள்ளே நுழைந்து விட்டதாகவும் இவர்கள் செயல்கள் அபாயமானது என்றும் சொல்லி வெளியில் வந்தார்கள்.. அதே கூட்டம்தான் இன்று தமிழகத்தை போராட்ட களமாக மாற்றி வருகிறது.
மூலக்காரணமான சமூக வலை தளங்கள்: தமிழ்நாட்டின் அணைத்து பிரச்சனைக்கும் மத்திய அரசுதான் காரணம் - corporate கம்பனிகளும் தான் காரணம்.. இப்படிதான் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது சமூக வலை தளங்களில்.தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்கமானவங்க.. ஒன்னும் தெரியாத பாப்பாக்கள் (2G, Aircel, ப. சிதம்பரம் னு இந்தியா ல நடந்த எந்த ஊழல்லயும் தமிழ்நாட்டை சேர்ந்தவங்களுக்கு பங்கே கெடயாது).. எல்லாத்துக்கும் கடந்த 3 வருஷமா இருக்குற மத்திய அரசுதான் காரணம்.. மோடி ஒரு கார்பொரேட் கைக்கூலி.. இப்படித்தான் ஒரு 10 கம்யூனிஸ்ட் குரூப் சேந்துட்டு பொய் propaganda பண்ணி தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள்.. விவசாயிகள் காப்பீட்டு திட்டங்களோ LPG சிலிண்டர்களை விநியோகம் செய்வதோ MUDRA வங்கி திட்டமோ கார்பொரேட் கைக்கூலிகல் செய்வது இல்லை.. விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் சேராமல் தமிழக விவசாயிகளை நிற்க விட்டது தமிழக அரசு. அவர்களை கார்பொரேட் கைக்கூலி என்று கூறலாமா? இதையெல்லாம் மறைத்து memes போடுற பாதி குரூப்கள் இந்தியாவிலேயே இல்லை.. அவர்களுக்கு வரும் பண உதவியும் வெளி நாட்டில் இருந்தே வருகிறது.. Breaking India என்ற புத்தகத்தை படித்து பாருங்கள்.. இது போன்ற சக்திகளின் உண்மை என்ன என்று தெரியும்..
தமிழ் கலாச்சாரத்திலோ இந்திய கலாச்சாரத்திலோ இல்லாத கோட்பாடுகளை தமிழர்களுக்கு வாழைப்பழத்தில் ஊசி போடுவது போல் 100 வருடங்களாக ஏற்றி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை நம்பாதீர்.. உலகத்துல 100 million பேரை கொன்றும் இன்னும் ரத்த வெறி அடங்காத காட்டேரிகள் இந்த கம்யூனிஸ்ட்கள்.
.சர்வாதிகாரத்தை மட்டும் தான் இவனால் குடுக்க முடியும். அதனால் தான் cuba , north korea தவிர இவனுங்களுக்கு எங்கயும் மதிப்பில்லை.. ரஷ்யா உட்பட.. ஆனால் இந்தியாவில் இவர்கள் மாவோயிஸ்ட் மூலமாகவும் தென்னிந்தியாவில் தமிழ் நாடு மற்றும் கேரளா மூலமாகவும் பிரிவினையை உண்டு பண்ணி அதில் குளிர் காய நினைக்கிறார்கள்..
கார்பொரேட் கம்பெனியை எதிர்க்கிறோம் என்ற பேரில் இனவாதமும் பிரிவினைவாதமும் ஊட்டப்படுகிறது.
.அவனை எதிர்க்க வேண்டும்தான்.. ஆனால் அதற்கு இதுதான் வழியா? நியூட்ரினோ என்ற திட்டம் முழுக்க முழுக்க அறிவியலுக்காக அறிவிக்கப்பட்டது.. அத்திட்டம் செயல் பட ஆரம்பித்து வெற்றியடைந்தால் ஸ்விட்ஸ்ர்லாந்தில் உள்ள CERN போல பெரிய ஆராய்ச்சி கூடமாக வாய்ப்புள்ளது.. இது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.. ஆனால் இதை கூட விட்டு வைக்கவில்லை இந்த சமூக விரோத கும்பல்.. அது அணு உலையை போன்றது என்றும் அதன் மூலம் கதிர்வீச்சு வரும் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன.. Neutrino என்பது அன்றாடம் நம்மை சுற்றி அமைந்துள்ள ஒரு particle .. அதன் மூலம் கதிர்வீச்சு என்று சொன்னால் சிரிக்கத்தான் முடியும்..
உலகத்தில் தனது பிரச்னைக்கு அடுத்தவன் தான் காரணம் என்று பல பேர் பல நேரங்களில் பிரச்சாரம் செய்து வண்டி வண்டியாக மக்களை கொன்று குவித்த வரலாறுதான் அதிகம் .. ஹிட்லர், ஸ்டாலின், மாவோ உட்பட.. இன்று அதே கொள்கைகள் வலுப்பெறுத்து வருகின்றன.. அமெரிக்காவில் டிரம்ப் , பிரான்சில் 'ல பெண்', துருக்கியில் எர்டோகன் போன்றோர் இது போன்ற வெறுப்பை மக்களுக்குள் திணித்து மாற்றினத்தையோ வெளி நாட்டவர் என்றோ சொல்லி பிரிவினை ஏற்படுத்தி வருகின்றனர்.. இதை போலவே தமிழ்நாட்டிலும் இனவாதம், மொழி அரசியல் புகுத்த பட்டு கொண்டிருக்கிறது.. இன்றும் தமிழ் நாட்டில் 20 சதவிகிதம் பேருக்கு தமிழ் தாய் மொழி கிடையாது.. வேற்று மொழிக்காரர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வரும் மாநிலம்.. காவேரி பிரச்னையில் தமிழர்கள் கர்நாடகாவில் அடி வாங்கும் வீடியோ போடும் இந்த சமூக ஊடகங்கள் தமிழ் நாட்டில் கன்னடர்கள் அடி வாங்கியதை போடுவதில்லை.. நாம்தான் பாதிக்க படுகிறோம், மற்றவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் உண்டாக்க படுகிறது..
இந்தியாவில் 30 மாநிலத்தில் ஒரு மாநிலம் மட்டும் எல்லா திட்டங்களையும் எதிர்க்கிறது என்றால் நம்மிடம் அவ்வளவு உண்மை இருக்க வேண்டும். இருக்கிறதா ? இந்த வருடம் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்படி போராடும் நாம் எத்தனை தடுப்பணைகளை கட்டி ஏரிகளையும் தூர் வாரி வைத்திருக்கிறோம்? காவேரி நீர் இந்த முறை வந்து விட்டால் அதை முறையாக சேர்த்து வைத்து பயன்படுத்த வசதி இருக்கிறதா ? இதை எல்லாம் கேட்க வேண்டிய மாநில அரசையும் மாநில அரசியல் வாதிகளையும் கேட்க போகிறோமா இல்லை இன்னும் 2 வருஷத்துக்கு மத்திய அரசை குறை சொல்லி கொண்டே காமெடி piece ஆக facebook போராளிகளாகி இன வெறியையும் மொழி வெறியையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க போகிறோமா? விழித்து கொண்டால் முன்னேறலாம்.. இல்லை என்றால் இப்படியே போராளிகள் என்ற பேரில் ஏமாற்றப்பட்டு பின்னுக்கு தள்ளப்படுவோம்.. எது வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்...
No comments:
Post a Comment