Sunday, 25 November 2018

SP சுந்தர பாண்டியன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி:

நம்ம திருப்பூரில்,

S.P - ஆகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர்திரு .சுந்தர பாண்டியன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி:

நூதன திருட்டு...பொதுமக்களே உஷாரய்யா...உஷாரு... அதிகம் பகிரவும்.

முன்பெல்லாம் சிலர் போனில் நான் பேங்க் மேனேஜர் பேசுறேன். உங்க ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிடுச்சு புதுப்பிக்கனும்னு சொல்லி அக்கவுண்ட் நம்பர் வாங்கி பணத்தை ஆட்டய போட்டுட்டு இருந்தாய்ங்க..இப்போ அது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு அதனால் புது டிரெண்ட் மாத்திட்டானுங்க இப்போ...

நேற்று நம்ம நண்பர் ஒருவருக்கு போன் வந்திருக்கு எல்.ஐ.சி ல இருந்து பேசுறோம். உங்க பழைய பாலிசி ஒன்னு பணம் கட்டாம இருக்கீங்க அதை குளோஸ் பண்ணி ரூ.47000 அனுப்பினோம் நீங்க செக் வாங்கவில்லை அதனால் உங்க அக்கவுண்ட் நம்பர், ஆதார் நம்பர் கொடுங்க கிரெடிட் பண்றோம்னு சொல்லிருக்கானுங்க.. நண்பர் உடனே எனக்கு அழைத்து பேசிட்டு கான்பரன்ஸ் போட்டார் நான் அவனுங்க கிட்ட எங்கிருந்து பேசுறீங்கனு கேட்டேன். எல்.ஐ.சி சார்னு சொன்னான். எந்த பிராஞ்ச்னு கேட்டேன் சென்னை கே.கே. நகர்னு சொன்னான். என்ன விசயம்னு கேட்டேன் நாங்க அவருக்கு செக் அனுப்பினோம் வாங்கலனு சொன்னான். எதில அனுப்பினீங்க? என்று கேட்டதற்கு தபாலில் அனுப்பினோம்னு சொல்லிட்டு சரி இவ்வளவு கேட்கிறீங்க? நீங்க யாருங்கனு கேட்டான். டே விளக்கெண்ணெய் கருப்பா நீ இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தியே அந்த எல்.ஐ.சிக்கே நான் தாண்டா மேனேஜர்னு சொன்னதும் போன் கட் பண்ணிட்டான். இதுபோல ரூம் போட்டு யோசித்து பணத்தை ஆட்டய போடுறானுங்க.. அதனால் பொதுமக்கள் சூதானமா இருங்க இல்ல உங்க பணம் போயிடும். எனவே படித்து விட்டு இதை அதிகம் பகிரவும்...

பொதுமக்கள் நலன் கருதி..
சுந்தரபாண்டியன் எஸ்.பி
நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு..
தொடர்புக்கு : 94453 44410

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...