குபேர கிரிவலம் என்றால் என்ன?
அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்;அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அண்ணாமலையாரின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்;
பல நூற்றாண்டுகளாக மறைவாக இருந்த இந்த ரகசியமானது 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வாழ்ந்து வந்த ஜோதிட பேராசியர் பி.எஸ்.பி. ஐயா அவர்களால் ஜோதிட மாத இதழ்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது;
கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் குபேரன்,வான் உலகில் இருந்து அண்ணாமலைக்கு வருகிறார்;வந்து தாம் ஸ்தாபித்த குபேரலிங்கத்திற்கு ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்;பிறகு அங்கிருந்து கிரிவலம் புறப்படுகிறார்;
(தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளையே தேய்பிறை சிவராத்திரி என்று நாம் பல கோடி ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்)
இந்த வருடம் 5.12.2018 புதன்கிழமை மதியம் 12.47 முதல் 6.12.2018 வியாழக்கிழமை மதியம் 12.41 வரை அமைந்திருக்கின்றது;
5.12.2018 புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அண்ணாமலை குபேரலிங்கத்திற்கு குபேரன் பூஜை செய்வார்;
மாலை 5 மணி முதல் 5.30 க்குள் அங்கிருந்து கிரிவலம் புறப்படுவார்;
நாமும் 5.12.2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்குள் குபேரலிங்கம் இருக்கும் இடத்தில் இருந்து 1 சதுர கி மீ பரப்பளவுக்குள் இருக்க வேண்டும்;அந்த ஒரு மணி நேரம் வரை குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து நமது கோரிக்கைகளை நினைத்து குபேரலிங்கத்திடம் வேண்டிக்கொள்ள வேண்டும்;மாலை 5 முதல் 5.30க்குள் அங்கிருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;
கிரிவலத்தை குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்ய வேண்டும்;பிறகு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து நமது தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும்;குபேரலிங்கத்தில் நிறைவு செய்யும் போது,இரவு 11 முதல் 12 மணி ஆகியிருக்கும்;
விடிந்ததும்,வேறு எங்கும் (உறவினர் வீடு,வேறு ஆலயங்கள்) செல்லாமல் நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;அப்படி சென்றால் மட்டுமே குபேர கிரிவலம் சென்றமைக்கான முழுப்பலனும் நமக்குக் கிட்டும்;
ஏதாவது ஒரு காரணத்தினால் மேலே கூறிய நேரத்திற்குள் வர இயலாதவர்கள்,6.12.2018 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து வேண்டிக் கொள்ளலாம்;காலை 7 மணி முதல் 7.30க்குள் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.41க்குள் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;
கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்குக்கூட பலவிதமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன;
புதன் கிழமையாக இருப்பதால் பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு வருவது நன்று;
மறுநாள் வியாழக்கிழமை கிரிவலம் வருபவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு வரலாம்;
மழை மற்றும் புயல் காலமாக இருப்பதால்,தகுந்த முன் ஏற்பாடுகளுடன் வருவது நன்று;
வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு நிரந்தரவேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;
பலருக்கு தொழிலில் அமோக வளர்ச்சி கிடைத்திருக்கிறது;
பலர் தமது சக்திக்கு மீறிய கடன் வாங்கி பல ஆண்டுகளாக திண்டாடியிருப்பர்;அவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தனை கடனும் தீருமளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது;
பூர்வ புண்ணியம் மிகுந்த ஆத்மாக்கள் வெகு சிலருக்கு குபேரனின் தரிசனமும் கிடைத்திருக்கிறது;அதனாலேயே.அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கின்றனர்;
இன்றைய கால கட்டத்தில் நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் பணம் நமக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது;கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது;
நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்:
அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்;
ஓம் அகத்தீசாய நமஹ!
ஓம் அருணாச்சலாய நமஹ!!!
No comments:
Post a Comment