*ஆபாசம் ஒழிக்கப்படுகிறது - அடுத்து மத்திய அரசு தொடரும் அதிரடி நடவடிக்கை..!*
http://www.kathirnews.com/2018/11/25/05/
சமீபத்தில் பாலுறவை வெளிப்படையாகச் சித்தரிக்கும் 827 ஆபாசதளங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கெனவே இத்தகைய தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 827 தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு இத்தகைய தளங்களை கட்டணம் செலுத்தி பார்ப்பவர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. ட்விட்டரில் #pornban என்ற ஹேஷ்டேக் மூலம் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் தளங்களையும், பாலுறவை வன்முறையுடன் கூடியதாக சித்தரிக்கும் தளங்களை தடை செய்யும் அதே சமயம், வயது வந்தோருக்கான தளங்களை தடை செய்யக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆபத்தான பல சிறிய ஆபாச தளங்களை விட்டுவிட்டு, உலக அளவில் புகழ்பெற்ற, பெரிய அளவிலான வயது வந்தோருக்கான தளங்களை மட்டும் அரசு தடைசெய்திருப்பதாக சம்மந்தப்பட்ட தளங்களின் நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.
இருந்தாலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக நின்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச வீடியோக்களை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது. தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15-வது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும்.
பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும் இதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் கன்டன்ட்டுகள் வந்தால் அதை அழித்துவிடவோ புகார் அளிக்கவோ தவறினால் அபராதம் விதிக்கப்படும். போக்சோ சட்டத்தின் 15-வது பிரிவில் செய்யப்பட உள்ள இந்த திருத்தங்கள் சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அடுத்த வாரத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.kathirnews.com/2018/11/25/05/
No comments:
Post a Comment