#புதிய_உச்சத்தை_அடைந்த_இந்தியா.!!!
அடேங்கப்பா 128,680,000,000,000 ரூபாய்...!!!
#One_india
20/08/2017
கடந்த சில வருடங்களாக, குறிப்பாக மோடி பிரதமர் ஆன பின்பு இந்திய சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சந்தையாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வரலாறு காணாத லாபத்தை அள்ளியுள்ளனர்.
"மோடி"தலைமையிலான அரசின் மேக் இன் இந்தியா, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுத் தடை, ஜிஎஸ்டி அடுத்தடுத்துத் திட்டங்கள் பன்னாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் கவர்ந்தது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் மதிப்பு அளவில் உயர்ந்து எலைட் கிளப் பட்டியலில் "முதல் முறையாக" நுழைந்துள்ளது.
#சீனாவுடன்_போட்டி
ஏற்கனவே எலைட் கிளப்-இல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்திய பங்குச்சந்தை இப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் சீனாவை அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. சீனாவை விட இந்தியாவிற்குத் தற்போது வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்தியா சீனாவுடன் நேரடியாகப் போட்டி போட்டு வருகிறது.
#பத்து_வருடம்
இந்திய சந்தை கடந்த 10 வருடத்தின் சராசரி அளவீடு 0.78 ஆகவும், அதிகப்படியாக 2007ஆம் ஆண்டு 1.48ஆகவும் உள்ளது.
மேலும் உள்நாட்டு நிறுவனங்கள் மீதான முதலீட்டில் ஜனவரி முதல் சுமார் 28 சதவீகம் வருமானத்தை அளித்துள்ளது. இதன் மூலம் 20 முன்னணி சந்தைகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
#இரண்டு_டிரில்லியன்_டாலர்
இன்று நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.34 ரூபாய்.
1 டிரில்லியன் டாலர் எனில் 1,00,000 கோடி டாலர். இதனை ரூபாய் மதிப்பில் மாற்றும் போது 66.34 லட்சம் கோடி ரூபாய்.
2 டிரில்லியன் எனில்.. அடேங்கப்பா.. 128,680,000,000,000 ரூபாய்.
இதுதான் இந்திய சந்தையின் மதிப்பு.!!
No comments:
Post a Comment