Sunday, 25 November 2018

பிரதமரின் உரை!

பிரதமரின் உரை!

 

     பதவியேற்ற போது தன்னை ஒரு “பிரதம சேவகன்” என்று அறிமுகம் செய்துகொண்ட பிரதமர், இப்போது ஒரு இந்தியச்சேவகனாக அரசு என்ன செய்திருக்கிறது என்பதைத் தனது சுதந்திர தின உரையில் பட்டியலிட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தத் தெளிவும், நேர்மையும், பணிவும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!

     ஒரு மன்னனின் முதல் பணி மக்களை சுரண்டுவோரைத் தண்டித்து அவர்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான்! அதைத் தைரியத்தோடு செய்து முடித்துள்ளார் பிரதமர். கள்ளப்பணம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையும், வரி ஏய்ப்பு செய்வோரை வழிக்குக் கொண்டுவரும் ஜி.எஸ்.டி நடவடிக்கையும் மக்களைச் சுரண்டுவோர் மீது மோடியால் விடுக்கப்பட்ட அஸ்திரங்கள் ஆகும்.

     ஜி.எஸ்.டி யால் விலைவாசி குறைந்திருக்கிறது, மருந்து மாத்திரைகளின் விலை குறைந்திருக்கிறது, நிலம் மற்றும் கட்டிடங்களின் விலை குறைந்திருக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக இன்னொன்று இருக்கிறது. அது என்னவென்றால், ஜி.எஸ்.டி வந்ததின் காரணமாக ஏற்கெனவே வரி ஏய்ப்பு செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது முறையாக வரி கட்டத் துவங்கியுள்ளனர். வியாபாரிகள் மக்களிடமிருந்து வாங்கும் வரியினையும், வருமானத்திற்கான வரியினையும் அரசுக்குக் கட்டித்தான் ஆகவேண்டும் என்னும் நிர்ப்பந்தம் ஜி.எஸ்.டி யால் உருவாகியுள்ளது!  

     மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்போர் மீது நடவடிக்கை மேற்கொண்டதால் விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளது . மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்! இந்த நிலையில், தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமரின் பேருரையை நாம் வரி வரியாகப் பார்க்கலாம்!

 

     “நாட்டு மக்களையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் இன்று நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. ரூபாய் நோட்டு வாபசிற்குப் பின் ரூ. 3லட்சம் கோடி ரூபாய் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது அரசு சொல்லவில்லை, நிபுணர்கள் கூறுகின்றனர்.

     ரூ. 2 லட்சம் கோடி அளவுக்குக் கறுப்புப் பணம் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளது. தற்போது, கறுப்புப்பணம் டிபாசிட் செய்தவர்கள், அதற்கான விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும். 

     அரசின் நடவடிக்கையால் கறுப்புப்பணம் பதுக்குபவர்களுக்கு செக் வைக்கப்பட்டது.

 

     வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. கடந்த வருடத்தைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும். கறுப்புப்பணத்திற்கு எதிரான நடவடிக்கையின் பலன்.

            18 லட்சம் பேர் வருமானத்திற்கு எதிராக , அதிகளவு வருமானம் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும். 

     கடந்த 3 வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பபுப்பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

     3 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 400 நிறுவனங்கள் ஒரே முகவரியில் செயல்படுகிறது. 

 

     ஜிஎஸ்டியால் செக் போஸ்ட்கள் அகற்றப்பட்டன. இதனால், 30 சதவீத பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள் 30 சதவீத நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. வரி காரணமாக ஆயிரக்கணக்கிலான கோடி மற்றும் நேரம் ஆகியவை சேமிக்கப்பட்டுள்ளன.

     தொழில் செய்யும் திறன் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வெற்றிக்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், அதிக பலன் பெறலாம் என்பதற்கு இந்த வரி உதாரணம். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், தொழில் செய்வது எளிதாகியுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் தோளோடு தோள் சேர்ந்து பாடுபட்டன. அரசு எடுத்த நடவடிக்கைகள் நாட்டிற்குப் பலன் அளிக்கும். ஜிஎஸ்டி நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும். 

 

       ஒரு காலத்தில் மண்ணெண்ணெய் மற்றும் யூரியா ஒதுக்கீட்டுக்காக மத்திய மாநில அரசுகள் இடையே கடும் மோதல் ஏற்படும். மத்திய அரசு பெரியண்ணன் போல் செயல்படும். ஆனால், கடந்த 3 வருடங்களில் யூரியா உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய்க்கு மாற்றாக சமையல் காஸ் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு மண்ணெண்ணெய் தேவை குறைக்கப்பட்டது.

     நானும் மாநில முதல்வராக இருந்துள்ளதால், நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு முக்கியம் என்பதை அறிவேன். முதல்வர்கள் மற்றும் மாநில அரசுகளின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளேன். இதனால் தான் நாங்கள் ஒருங்கிணைந்து கூட்டாட்சி தத்துவத்திலும், தற்போது, துடிப்புமிக்க கூட்டாட்சி தத்துவத்திலும் கவனம்செலுத்தினோம். தற்போது அனைத்து முடிவுகளையும் ஒன்றாக எடுக்கிறோம்.

 

      ஆதார் அட்டையால் ஊழல் ஒழியும். காஷ்மீர் மாநிலம் மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றப்படும். கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவத்தால் நாடே மன வேதனையில் உள்ளது.

 

      ரூ.8000 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது.”

 

      இராணுவ வீரர்களின் சாதனைகளைத் தெரியப்படுத்த புதிய இணையதளம் உருவாக்கப்படும். ''

 

 

       பிரதமரின் இந்த வார்த்தைகள் மிக மிக அருமை! 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஊறிக்கிடந்த ஊழலை ஒழித்துவிட்டு, செய்ததைச் சொல்கிறார் பிரதமர்! ஆனால் இங்கு அரசை எதிர்த்து அரசியல் செய்வோர் பதுங்கி தாக்கும் எதிர்ப்பாளர்களைப் போல செயல்படுகிறார்கள்! சாதனைகளைப் பாராட்டமாட்டார்கள்! விமர்சிக்கவும் மாட்டார்கள், பதுங்குவார்கள். பத்துநாள் கழித்து எதுவுமே செய்யவில்லை என்று பொய் சொல்வார்கள்.

    எதிர்க்கட்சியினரின் இத்தகைய செயல் பாதகச்செயலாகும்! பாதகம் செய்வோரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! என்று பாரதி சொல்லியுள்ளார்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...