Wednesday, 14 November 2018

வரலாற்றை படிக்காத இனம் வாழாது*

*வரலாற்றை படிக்காத இனம் வாழாது*

சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.*

ஆனால், *ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.*

*வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.*
இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது.

*உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.*

மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.*

கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும்? அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான்? இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. *இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.*

*இன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது.*

ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டான்.

மாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், *‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் ராஜேந்திரசோழன்’* என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல்.

நாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் ஏன் அவுரங்கசீப்பை படிக்கணும்? நான் ஏன் அக்பரை படிக்கணும்? நான் ஏன் அசோகரைப் படிக்கணும்?

தமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை.

*இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.*

அப்படி இருக்கும்போது *நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும்?*
அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்?
பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக *இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர்.* *வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை.* அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்?

*உலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை.* இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன.

இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.
அவர்களாவது, உண்மையான வரலாற்றை படிக்கட்டும்,
வரலாற்றை படைக்கட்டும்,
வரலாற்றில் வாழட்டும்.

🐅💪🏿💪🏿💪🏿🐅

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...