Wednesday, 14 November 2018

மனம் பதறுதையா! •°•°•°•°•°•°•°•°•°•°•°•° நேருவின் யோக்கியங்கள். ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

மனம் பதறுதையா!
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
நேருவின் யோக்கியங்கள்.
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

நேருவுக்கு முட்டு கொடுத்து
வக்காலத்து வாங்கும் வரலாறு
தெரியாத நவீனவாதிகள் கொஞ்சம் இதை படித்து பார்த்து
உண்மை உணர்ந்து கொள்ளட்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     எம் கே கே நாயர் என்னும் ஓய்வு பெற்ற, 1947 பேட்ச்,  இந்திய நிர்வாக சேவை (ஐ ஏ எஸ்) அதிகாரி, தான் எழுதியுள்ள, “ வித் நோ இல்ஃபீலிங் டு எனிபடி” என்னும் பத்தகத்தில் சொல்லியிருக்கும் சரித்திர சம்பவங்கள், தேசப் பற்று கொண்ட ஒவ்வோர் இந்தியனையும் பதற வைக்கும்.

     போன, அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லப் பாய் படேலின் 137-வது பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டதும், குஜராத், சர்தார் சரோவர் நீர்த்தேக்கத்தின் பக்கத்தில், நர்மதை நதியின் தீவு ஒன்றில்,  இந்தியாவின் முந்தைய துணை பிரதம மந்திரியும், உள்துறை அமைச்சருமான, வல்லப் பாய் படேலின் 600 அடி உருவ சிலை , பிரதமர் மோடிஜியால் திறக்கப் பட்டதும், நாம் அறிவோம்.

     நாயர் தன் புத்தகத்தில்,       அப்போதைய பிரதமர், ஜவஹர்லால் நேருவால், ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில்,

சர்தார் எப்படி அவமதிக்கப் பட்டார்; கீழ்ப்படுத்தப் பட்டார்; ஏமாற்றப் பட்டார், என்று விவரிக்கிறார்.

நிஜாமின் ரஜாக்கர் படைக்கு எதிராக, நம் ராணுவத்தை ஏவி விடுவதே உசிதம் என்று சொன்ன வல்லப் பாயை நோக்கி, “நீங்கள் ஒட்டு மொத்த மதவாதியாக இருக்கிறீர்கள்; உங்கள் ஆலோசனைகளுக்கும், திட்டங்களுக்கும் நான் ஒரு பங்காளியாக இருக்க மாட்டேன்” என்று  நேரு கத்தினாராம்.

அதிர்சிக்குள்ளான சர்தார், தன் முன்னிருந்த கோப்புகளை எடுத்துக் கொண்டு மௌனமாக அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு வெளியேறினாராம். அது தான் சர்தார் பங்கேற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டம். அது முதல், அவர் நேருவிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டாராம்.

     நாயருக்கு சர்தாரிடமும், உள்துறை செயலாளர், வி பி மேனனிடமும் நெருங்கிய தொடர்பு இருநதுள்ளது. 13-9-1948 அன்று,  ஹைத்திராபாதை நிஜாமின் ஆட்சியில் இருந்து  அகற்றுவதற்கான “போலோ நடவடிக்கை” த் திட்டம் , சர்தாரால், மேற்கொள்ளப் பட்டு, 18-ம் தேதி, முடிவடைந்தது.

சர்தார், கொடிய 2 லட்சம் ரஜாக்கர்களை, நம் ராணுவத்தை வைத்தே ஒடுக்க விரும்பினார்; ஆனால், நேருவோ, ஐக்கிய நாடுகள் சபை மூலமாக இதை செய்ய வேண்டும் என எண்ணினார். சர்தார் நடவடிக்கையால் தான் இன்று ஹைத்திராபாத் நம் வசம் இருக்கிறது.

     நேருவுக்கு, சர்தார் மீது இருந்த வெறுப்பு, சர்தார் மும்பையில் மரணமடைந்த 15-12-1950 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.

சர்தாரின் மரணம் பற்றியத் தகவல் வந்த உடனே நேரு, இரண்டு குறிப்புகளை, உள்துறை செயலாளராக இருந்த வி பி மேனனுக்கு எழுதி அனுப்பினார்.

முதல் குறிப்பில், சர்தார் உபயோகித்துக் கொண்டிருந்த கெடிலாக் காரை, உடனே கொண்டு செல்ல உத்தரவிட்டிருந்தார்.

இரண்டாவது குறிப்பில், எந்த அரசு அதிகாரியாவது, படேலின் இறுதிச் சடங்குக்குப் போக எண்ணினால், விடுப்பில் தான் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருந்தார். (என்ன வெறுப்பு பாருங்கள்!)

வி பி மேனன், சர்தாரின் இறுதி சடங்குக்குப் போக விழைந்த செயலாளர்களின் பெயரைக் குறித்துக் கொண்டு, அவர்களுக்குத் தன் செலவில் விமான டிக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார்.

நேருவின் குறிப்பைப் பற்றி யாரிடமும் சொல்லவே இல்லை.

     நாயர், ஹைத்திராபாதில், நம் ராணுவத்தின் “சிவில்” அதிகாரியாகப் பணியாற்றியபோது,  நிஜாம் இளவரசர்கள் , குடி போதையில், “சுதந்திரத்துக்குப் பின், ஹைத்திராபாதை நிஜாம் பாகிஸ்தானுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்தத் தகவலை, சர்தாருக்கு ரகசியமாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல், நிஜாமின் குடும்பத்தினரைத் தவிர, வெளியார் யாருக்கும், ஏன்,  பிரிட்டிஷ் ரகசிய சர்வீஸ் அதிகாரிகளுக்கும் கூடத் தெரியாதாம்.

     வடகிழக்கு எல்லை மாகாணம், வெளி விவகாரத் துறையின் கீழ் அமைக்கப் பட்டதற்கும், உள்துறையில் இருந்து ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எடுக்கப் பட்டதற்கும் காரணம், சர்தாரின் சிறகுகளை வெட்ட எண்ணிய நேருவின் திட்டம் தான் என்று நாயர் கூறுகிறார்.

இந்தப் பிரதேசங்களின் இன்றைய சீர்குலைவுக்கு இதுவே காரணம் என்றும் சொல்லுகிறார்.

ஜனாதிபதி ராஜேந்திர பிரசாதையே, படேலின் இறுதிச் சடங்குக்குப் போகக் கூடாது என்று நேரு சொன்னதாகவும், அதனை ராஜன் பாபு கேட்கவில்லை என்றும் தெரிகிறது.

பின்னால் நேருவே, இறுதிச் சடங்கில் கலந்து கொண்டாலும், இரங்கல் தீர்மானத்தை ராஜாஜி தான் படித்தாராம்.

     காங்கிரஸ் காரியக் கமிட்டியின் தீர்மானப்படி, சர்தார் பிரதமராக ஆகி இருந்தால், காந்திஜி குறுக்கிட்டு நேருவைப் பிரதமர் ஆக்காமல் இருந்திருந்தால், நம் நாட்டை பிடித்த பல “பீடைகள்” அன்றே மாயமாக மறைந்திருக்கும் என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

     இரும்பு மனிதர் என்றால் அது சர்தார் வல்லப் பாய் படேல் தான்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...