நேற்றும் இன்றும் அனைத்து நாளிதழ்களும் ஊடகங்களும் ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு குறித்த நிகழ்வை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது
இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது தினசரி நாளிதழ் வாசிப்பாளர்கள் பலர் மனதில் எழும் கேள்வி
இரண்டு மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் சந்திப்பது செய்தியாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த சந்திப்பு ஆளும் மோடி அரசுக்கு ஏதோ பெரிய ஆபத்து ஏற்பட்டது போல தலைப்பு செய்தியாக சித்தரிக்கப்படுவது தான் வேடிக்கையானது.
கடந்த சில மாதம் முன்பு வரை மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சந்திரபாபுவின் தெலுங்குதேசம் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது ஆனால் அது எந்த தாக்கத்தையும் தேசிய அளவிலோ ஏன் ஆந்திரா மாநில அளவில் கூட ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இதில் ஏமாற்றமடைந்த சந்திரபாபு அதை ஈடு செய்ய டெல்லியில் ராகுலை சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாய் பேசப்பட்டாலும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் இதை தான் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒரு சம்பிரதாயமாகி போனது.
தற்போது பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து கட்சிகளை ஒருங்கிணைக்க போவதாக சந்திரபாபு கிளம்பி ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக ஏற்கெனவே பா.ஜ.க வுக்கு எதிராக காங்கிரஸ் முகாமில் கூட்டணியாக உள்ளது.
ஏற்கெனவே பா.ஜ.க எதிர்முகாமில் உள்ள திமுக ஸ்டாலினை, சந்திரபாபு சந்திப்பதால் எதிரணிக்கு எப்படி பலம் கூடும்.
தற்போது பா.ஜ.க ஆதரவு நிலையில் உள்ள கட்சிகளை சந்தித்து சந்திரபாபு பேசினால் அது பலம் என கருதமுடியும்
தமிழகத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு புள்ளி 1 சதவீதம் ஓட்டு கூட கிடையாது. அதே போல ஸ்டாலினின் திமுக வுக்கு ஆந்திராவில் .புள்ளி 1/2 சதவீதம் ஓட்டு கூட கிடையாது. இவர்கள் சந்திப்பு என்ன மாற்றத்தை உருவாக்கிவிட முடியும்
தற்போது கூட்டணியோடு தமிழகத்தில் 98 MLAக்களை கைவசம் வைத்து கொண்டு, அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் கூட தமிழகத்திலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத ஸ்டாலின்
மக்களவையில் தற்போது திமுக வுக்கு ஒரு MP கூட இல்லாத நிலையில் பா.ஜ.க அரசை வீட்டுக்கு அனுப்புவோம்னு சொல்வதை மக்கள் சிறந்த நகைச்சுவையாகவே கருதுகின்றனர்.
பின்பு ஏன் இந்த நிகழ்வு இவ்வளவு பெரியதாக்கப்படுகிறது என்றால் இவற்றை எல்லாம் உற்றுநோக்கும் தினசரி நாளிதழ் வாசிப்பாளர்களுக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும் தெரியும். இது மோடிக்கு எதிரான மாய பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் ஏதோ பா.ஜ.க மோடிக்கு எதிராக இருப்பது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கும் முயற்சியே என்பது.
- *கற்பூரம்* -
No comments:
Post a Comment