மறக்க முடியுமா திமுக வினரின் துரோகங்களை.?
கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணைகட்ட முற்படும்போது எடப்பாடி அரசு சட்டமன்றத்தை கூட்டி எதிர்த்து தீர்மானம் போடுகிறது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
ஆனால், கர்நாடக காங்கிரஸ் அரசு ஹேமாவதி அணைகட்டியபோது, அப்போதிருந்த கருணாநிதி அரசு என்ன செய்தது..? எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கர்நாடக அரசு கட்டிக் கொள்ளட்டும் என்று கூறி தமிழகத்துக்கு துரோகம் இழைத்தது.. பதவிக்காக கர்நாடக அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை வாபஸ் வாங்கியதும் கருணாநிதிதான்.
இன்றும் அதே திமுக தான் மேகதாது அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறது. அதே காங்கிரசுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது.
கருணாநிதி சிலை திறக்க தமிழகத்துக்கு வரும் சோனியாவிடம் காவிரியில் காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டினால், காங்கிரசுடன் கூட்டணிகிடையாது என்று ஸ்டாலின் கூறுவாரா..?
திமுக வினர் என்றுமே பதவிகளுக்காக தமிழகதின் அடிப்படை உரிமைகளை அடகு வைப்பவர்கள்தான். திமுக வினரின் துரோகங்களை மக்கள் என்றும் மறக்க முடியாது. .
No comments:
Post a Comment