ஆளுர் ஷா நவாஸை நம்பி நடுத்தெருவுக்கு வந்த திருமாவளவன் !
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிலைமை படுமோசமாக சென்று கொண்டுள்ளது .யாரை எதிர்த்து அரசியல் கட்சியை தொடங்கினாரோ இப்போது அவர்களிடமே போய் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளார் .
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பொம்ம நாயக்கன் பட்டியில் இஸ்லாமியர்கள் வாழும் தெரு வழியாக தலித் பெண்ணின் சடலத்தை கொண்டு செல்ல இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .பிறகு இது மிகப்பெரிய கலவரமாக மாறி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
ஆனால் தன் சொந்த சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டபோது கூட திருமாவளவன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.யாருக்காக கட்சி தொடங்கினாரோ அவர்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டபோதும் வாய்திறக்கவில்லை.தொடர்ந்து கண்டனங்கள் வரவே வேறு வழி இல்லாமல் பொம்ம நாயக்கன் பட்டிக்கு சென்று பார்வையிட்டார்.
ஆனால் அவர் முதலில் சென்றதோ இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் தான். இதனால் இவரது சமுதாயத்தை சேர்த்த மக்களே அவரை தலைவராக ஏற்று கொள்ள விரும்பவில்லை. மேலும் அவரது செயல்பாடுகள் அனைத்திற்கும் விடுதலை சிறுத்தை கட்சிகளில் உள்ள ஆளூர் ஷா நவாஸ் தான் காரணம் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள் .
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களே கோபப்படும் அளவிற்கு உள்ளது ஷா நவாஸ் பேச்சு அவர் எந்த விவாதத்தில் கலந்து கொண்டாலும் இந்து மதத்தை எதிர்த்தே பேசுகிறார். மேலும் விடுதலை சிறுத்தையில் உள்ளாரா இல்லை திமுகவில் உள்ளாரா என்பது கூட தெரியாமல் திமுகவிற்கு சொம்பு தூக்குகிறார். இவரை போன்றவர்களின் செயல்பாடுகளால் தான் திமுகவினர் திருமாவளவனை மதிப்பது கூட இல்லை என்கின்றனர் .
ஆக ,மொத்தத்தில் கடந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் ஓட்டு தங்களுக்கு விழுகும் என்று ஷா நவாஸ் கூறியதன் விளைவாகத்தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நின்றார். ஆனால் அவரது தோல்விக்கு காரணமாக இருந்ததே 87 இஸ்லாமிய வாக்குகள் தான் .ஒரு வாக்குகள் கூட அவர்க்கு கிடைக்கவில்லை .
மொத்தத்தில் திருமாவளவன் நிலை இன்று திமுகவிடம் விடுதலை சிறுத்தைளை அடகு வைக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
No comments:
Post a Comment