இந்த முக ஸ்டாலின் வைகோ கோஷ்டிக்கு மனநோய் முற்றியது போல் தெரிகின்றது
மோடி தமிழகம் வந்தால் கருப்புகொடி காட்டுவார்களாம், இதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம், பிடித்து ஜாமீன் இல்லாமல் உள்ளே போடவேண்டிய விஷயம்
மோடி இந்நாட்டு பிரதமர், அவர் இந்நாட்டில் எங்கும் செல்ல அவருக்கு உரிமை இருக்கின்றது, சிக்கலான நாலந்துலாவிற்கும், சியாச்சின் பனிமலைக்கும் அவரால் செல்லமுடிகின்றபொழுது தமிழ்நாட்டில் விடமாட்டார்களாம்
கேட்டால் தமிழர் துரோகமாம், எது? 2000களிலே மேகதாட்டு விவகாரத்தை பேசியது கன்னடம், ஆனால் அப்பொழுதெல்லாம் காங்கிரஸோடு மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக என்ன கிழித்தது?
ஒன்றுமில்லை சமத்தாக இருந்தார்கள்
ஆட்சியில் இருந்தால் அமைதி காப்பதும் , ஆட்சியில் இல்லாவிட்டால் குதிப்பதும் திமுகவின் அரசியல்
தனிபட்ட மோடி எனும் அரசியல்வாதியினை எதிர்கட்டும், ஆனால் பாரத பிரதமர் எனும் மோடிக்கு கருப்புகொடி காட்ட என்ன இருக்கின்றது? தேசிய அவமானம் இது
அதே மோடி கலைஞரை சந்திக்க வரலமாம், கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வரலமாம், ஆனால் அதை தாண்டி தமிழகம் வர கூடாதாம்
எப்படி இருக்கின்றது இந்த மோசடி
ஏதோ தமிழ்நாடு தங்கள்நாடு போலவும் அதற்குள் வருவதற்கு வைகோ, முக ஸ்டாலின் அனுமதி வேண்டும் என்பது போலவும் மாயைகள் உருவாக்கபடுவது தண்டிக்கபட வேண்டியது
என்ன கொள்கை இது?
முன்பு காங்கிரசை இப்படித்தான் கருவருப்போம் என்றார்கள், இந்திரா வரை தாக்கினார்கள் பின் காங்கிரஸ் கூட்டணி உருவான பின் சத்தமில்லை
அதே பாணியில் மோடியிடமும் வருகின்றார்கள், வருங்காலத்தில் அவரும் கூட்டணிக்கு வந்தால் பல்லிளிப்பார்கள்
அதாவது இங்கு நாங்கள் ஆள்வோம், தேசிய கட்சிகள் வளர கூடாது, எங்களிடம் கெஞ்சிகொண்டே இருக்க வேண்டும் எனும் மோசடி அரசியல் இது
மத்திய அரசு இதற்கெல்லாம் அஞ்ச கூடாது, மிக தைரியமான நடவடிக்கை எடுத்து கருப்புகொடி கும்பல்களை ராணுவ துணையோடு முடக்கி பிரதமரின் பயணத்திற்கு வழிவிட வேண்டும்
வைகோ என்பவர் தீ குளிப்பாராம், எந்த வைகோ? மோடியினை தமிழகம் அழைத்து வந்து அவர் கூட்டணியில் முதலில் துண்டு போட்டு இடம் பிடித்த வைகோ
ஏன்? அன்று திமுக காங்கிரஸ் கூட்டணியினை எதிர்த்தார், இன்று ஆதரிக்கின்றார் அவ்வளவுதான், ஒரு மாதிரியான அசிங்கம் இது
அதனால் அவர் தீ குளிக்கவாவது மோடி உடனே புறப்பட்டு தமிழகம் வரட்டும்.
இந்த மனநோயாளிகளுக்கு தக்க பாடம் புகட்டி, தமிழகம் ஒரு இந்திய மாநிலமே என செவிட்டில் அடித்து சொல்ல மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தமிழகம் இந்திய மண்ணே, இங்கு பாரதபிரதமர் வருவதற்கு யாரின் அனுமதி வேண்டும்?
அவ்வளவு மானஸ்தர்கள் தனி தமிழ்நாடு கேட்பார்களா என்றால் இல்லை, காரணம் கேட்டால் கட்சியும் இருக்காது அவர்களும் இருக்க மாட்டார்கள்
இந்திய தேசியத்திலும் சேரமாட்டோம், தனிநாடும் கேட்கமாட்டோம் ஆனால் கட்சி மட்டும் இந்திய எதிர்ப்பில் நடத்துவோம் என்பது எவ்வளவு பெரும் அயோக்கியதனம்? அல்லது கிறுக்குதனம்?
(இப்படியாக டெல்லியோடு விரோதிக்க வேண்டியது, நாங்கள் இந்தியர் இல்லை என சொல்ல வேண்டியது
பின் அணுவுலை முதல் காவேரிவரை டெல்லி பகைக்கின்றது என ஒப்பாரி வைக்க வேண்டியது
அதாவது வலிய அரசியல் அனாதைகளாக ஆகவேண்டியது, ஆனபின் தமிழனுக்கு துரோகம் என கத்தவேண்டியது)
No comments:
Post a Comment