Thursday, 6 December 2018

உடான் திட்டத்தில் இனி குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் பயணிக்க முடியும்! அசத்தும் மத்திய மோடி சர்க்கார்

உடான் திட்டத்தில் இனி குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் பயணிக்க முடியும்! அசத்தும் மத்திய மோடி சர்க்கார் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள வசதியாக உடான் எனும் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னை டூ சேலம் போன்ற விமான சேவைகள் இந்த திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பரக்க வழிவகை செய்துள்ளது. விரைவில் சென்னை டூ தூத்துக்குடி சேவையும் துவங்க இருக்கிறது. இத்திட்டம் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும், இதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகக் கூடும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அஸ்ஸாம் தலைநகர் குவகாத்தியில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதற்காக கடந்த அக்டோபர் மாதம் விமானப் போக்குவரத்து ஆணையம் சில குறிப்பிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இனி குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்ற ஏழை மக்களின் கனவு நனவாக இருக்கிறது பிரதமர் மோடியால்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...