Tuesday, 27 November 2018

பாலைவனத்தில் மீண்டும் தாமரையை மலர வைக்கும் அமித்ஷா-

பாலைவனத்தில் மீண்டும் தாமரையை மலர வைக்கும் அமித்ஷா-

கடந்த வாரம் வரை பிஜேபியின் வட இந்திய
நண்பர்கள் ராஜஸ்தான் மாநில தேர்தல் பற்றிய
பார்வையில் பிஜேபி க்கு படு தோல்வி கிடைக்கும்
என்றே பதிவு செய்து வந்தார்கள். பிஜேபிக்கு
அதிகபட்சமாக 35 தொகுதிகள் கிடைக்கும் என்றும்
காங்கிரஸ் கட்சிக்கு 150 தொகுதிகளுக்கும் அதிக மாக கிடைக்கும் என்றே கூறி வந்தார்கள்.

ஆனால்  இப்பொழுது என்ன கூறுகிறார்கள் என்றால் கள நிலவரம் வெகுவாக மாறிக்கொண்டு
வருகிறது. பிஜேபிக்கு 85- 90 தொகுதிகளும் காங்கி ரஸ் கட்சிக்கு 100-105 தொகுதிகள் கிடைக்கும் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சிலர்
பிஜேபிக்கு 100-110 தொகுதிகள் கிடைக்கும் என்று
கூறுகிறார் கள்.கடைசியில் 50-50 என்கிற அளவில்
பிஜேபி காங்கிரஸ் வெற்றி விகிதம் இருப்பதாக
கூறுகிறார்கள்.

இப்பொழுது இப்படி கூறுபவர்கள் தான் இரண்டு
மாதங்களாக பிஜேபி ராஜஸ்தானில் படுதோல்வி
அடையும் என்று கூறி வந்தவர்கள். அதுவும் மாற்று
கட்சிக்காரர்கள் அல்ல அக்மார்க் பிஜேபி க்காரர்கள் தான்.ஆக ராஜஸ்தானில் பிஜேபி வெற்றி பெற்று மீண்டும்ஆட்சி அமைக்கும்  என்று மூன்று மாதங்க ளுக்கு முன்பாக வே நான் கூறி வந்த கூற்று மெய் ப்படும் என்றே தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 25 வருடங்களாக
ஒவ்வொரு தேர்தலுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம்
ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.1993 ல் பைரான் சிங் செகாவத் ஜிந்தா பாத் என்பார்கள். 1998 தேர்
தலில்  பைரான்சிங் கை படுதோல்வி அடைய வைத்து அசோக் கெலாட் டை முதல்வராக்கினார்
கள்.2003 தேர்தலில் ல் எந்த அசோக் கெலாட் டை தலையில்தூக்கி வைத்துக் கொண்டாடினார்களோ
அவரை யே மண்ணை கவ்வ வைத்து வசந்திரா ராஜே சிந்தியாவை முதல்வராக அமர்த்தி அழகு
பாரத்தார்கள்.

2008 ல் மீண்டும் அசோக் கெலாட்  2013 ல் மீண்டும்
வசந்திரா ராஜே  சிந்தியா என்று மாறி மாறி பிஜேபி
காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மக்கள் வாக்களி த்து வருகிறார்களே தவிர வசந்திரா ராஜே சிந்தியா
முதல்வராக  வரக்கூடாது  என்று கூறி ராஜஸ்தான்
மக்கள் பிஜேபிக்கு எதிராக இல்லை. அவர்களுக்கு
ஒவ்வொரு ஆட்சியின் பொழுதும் ஆளும் கட்சியின்
மீது கோபம் வருகிறது.அந்த கோபத்தினால் ஆட்சி
மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.

எனவே  ராஜஸ்தானில் ஆட்சிமாற்றம் உறுதி என்று
தெரிந்தும் அதை முறியடிப்பது எப்படி என்று தான்
மோடியும் அமித்ஷா வும் யோசித்தார்களே தவிர
சரி அடுத்த தடவை பார்த்துக்கொள்ள லாம் என்று
தோல்வியிடம் சரணடைய வில்லை. இந்த முயற்சி
தான் இப்பொழுது பிஜேபி யை வெற்றிக்குஅருகில்
கொண்டு வந்து நிறுத்தி யுள்ளது.

ராஜஸ்தானில் 51,844 வாக்கு சாவடிமையங்கள்
இருக்கிறது. ஒவ்வொரு பூத்துக்கும் 21 பிஜேபி
தொண்டர்கள் உள்ள பூத் கமிட்டி அமைக்கப்பட்டு
ள்ளது. இதில் உள்ள ஒவ்வொருவரும் 10 வீட்டுக்கு
போய் அவர்களின் குறை நிறைகளை அறிந்து
அதை கட்சி தலைமைக்கு கொண்டு வந்து அதன்
அடிப்படை யில் செயல் பட்டு வருகிறார்கள்.

இந்த பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் அடிக்கடி
அமித்ஷா வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி
கள நிலவரங்களை கேட்டு அதன் படி ஆலோசனை
வழங்கி வருகிறார். அதனால் பிஜேபிக்கு தோல்வி
கிடைக்கும் என்று கனவு காண்பவர்கள் டிசம்பர்
11 ல் தேர்தல் முடிவுகள் வரும் பொழுது தலை
குப்புற விழுந்து மண்ணை கவ்வுவார்கள்..

ஆட்சிக்கு எதிராக ஆன்ட்டி இன்கம்பன்சி அதிகள வில் இருக்கிறது எனவே தோல்வி நிச்சயம்
இருந்தாலும்  தோல்வியின் அளவைக் குறைக்க
என்ன செய்யலாம் என்று யோசித்த அமித்ஷா
வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தினார்.

ராஜஸ்தானில் பிஜேபி வேட்பாளர் பட்டியல் வெளி
யான பிறகு ஜெயிக்க வாய்ப்புகள் உண்டா? என்று
யோசிக்க ஆரம்பித்த பிஜேபி அனுதாபிகள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு
ஜெயிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று ஏற்றுக்
கொண்டுள்ளார்கள்.

பிஜேபியின்  வேட்பாளர் தேர்வுக்கு ஒரு சின்ன
உதாரணம் தருகிறேன்..சோனாராம் தெரியுமா?
பார்மர் லோக்சபா தொகுதி யின் இப்போதைய
எம்பி.இந்த பார்மர் தொகுதியின் செல்லபிள்ளை பிஜேபியின் முன்னாள் மத்திய அமைச்சராக
இருந்த ஜஸ்வந்த்சிங். பார்மரில் வீழ்த்தவே முடியாத ஜஸ்வந்த் சிங் பிஜேபிக்கு எதிராக சுயேச்சையாக  கடந்த 2014 தேர்தலில்  போட்டியிட்ட பொழுது சுமார் 4 லட்சம் ஓட்டுக்களை பெற்றாலும் அவரை வீழ்த்தி
யவர் தான் சோனாராம்.

ஒட்டுமொத்த ராஜபுத்திரர்களும் பார்மர் தொகுதி யில் ஜஸ்வந்த் சிங் பின்னால் அணிவகுத்து நின்றாலும் ராஜபுத்திர கோட்டையான பார்மரில்
சோனாராம் ஜெயிக்க முக்கிய காரணம் அவருக்கு
பின்னால் நின்ற ஜாட்கள் தான். ஜாட் மக்களிடம்
செல்வாக்கு பெற்ற சோனாராம் எம்பியாக இருந் தாலும் இவரை பார்மர் சட்டமன்ற தொகுதி யில்  போட்டியிட  வைத்ததன் மூலமாக பார்மர்
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட  9 சட்டமன்ற
தொகுதிகளில்  பிஜேபிக்கு வெற்றி வாய்ப்பு அதிக ரித்துள்ளது.

ராஜஸ்தான் அரசியல் என்பது கட்சி, சின்னம் வேட்பாளர் இதையெல்லாம் தாண்டி சாதி அரசி யலை மையமாககொண்டது.ஜாட்கள் VS ராஜபுத்தி ரர்கள் மற்றும்மீனாக்கள் VS குஜ்ஜார்கள் என்கிற சாதி சமன்பாடு தான் ராஜஸ்தான் அரசியலை மாற்றி வருகிறது.

இதில் ஜாட்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். ராஜபுத் திரர்கள் பிஜேபி ஆதரவாளர்கள். அதே மாதிரி மீனாக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். குஜ்ஜார்கள்
பிஜேபி ஆதரவாளர்கள்.இப்போதைய பிஜேபி
ஆட்சியில் பத்மாவதி பட ரிலீசின் பொழுதும்ஆனந்த் பால் சிங் என்கிற ராவனா ராஜபுத்திர ரவுடி சுட்டுகொல்ல ப்பட்டபொழுதும் ராஜபுத்திரர்கள் ஆட்சிக்கு எதிராக வன்முறை போராட்டங்களை நடத்தினார்கள்..

சரிப்பா ராஜபுத்திரர்கள் தெரியும்.. அதென்னப்பா
ராவனா ராஜபுத்திரர்கள் என்று கேட்கிறீர்களா.
ராஜபுத்திர ஆண்களுக்கு ம் வேறு சாதி பெண்
களுக்கும் பிறந்தவர்கள்  தான் இந்த ராவனா ராஐ
புத்திரர் கள்.இவர்களை ஓபிசி லிஸ்டில் வைத்து
இருக்கிறார்கள். இவர்களும் ஒரிஜினல் ராஜபுத்தி ரர்களுக்கு உள்ள சமூக அந்தஸ்து  மாதிரியே எங்களுக்கு ம் வேண்டும் என்று கேட்டு  வருகிறார்
கள்.

ஆனால் அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம்
தெரிய வேண்டும் என்பதற்காக மாநில அரசு
ராவனா ராஜபுத்திரர்களை மட்டம் தட்டியே வைத்
துள்ளது.இந்த டுபாக்கூர்ராஜபுத்திரர்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்
உயர் சாதியினரான ஒரிஜனல் ராஜபுத்திரர்கள் என்றுமே பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்

அதே மாதிரி ஓபிசி பிரிவில் இருக்கும் குஜ்ஜார்கள்
தங்களை எஸ்டி பிரிவில் சேர்த்து ரிசர்வேசன்
கேட்டு போராடியதால் மாநிலம் முழுவதும் ஆட்சிக்கு
எதிராக மக்கள் இருக்கிறார் கள் என்கிற தோற்றத் தை  காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து உருவாக்கி னார்கள்.

காங்கிரஸ் கட்சி பிஜேபி ஆளும் மாநிலங்களில் சாதி ரீதியாக மக்களை பிரித்து அவர்களை மோத
விட்டு கேவலமான அரசியல் செய்து வருகிறது.
இந்துக்கள் சாதி ரீதியாக பிளவுபட்டு இருந்தால்
தான் தங்களால் அரசியல் செய்ய முடியும் என்பதால்
ஏதாவது பிரச்சினை யை உருவாக்கி கலவரங்களை
தூண்டி மாநிலத்தின் வளர்ச்சி யை அழித்து வரு
கிறார்கள்.

இப்படி ஒரு மாநிலத்தில் தொடந்து வன்முறை
பந்த் போராட்டம் துப்பாக்கி சூடு என்று நடை
பெற்றால் அந்த ஆட்சி மீது மக்களுக்கு எப்படி
நம்பிக்கை வரும்? இதனால் தான் ராஜஸ்தானில் ஆன்ட்டி இன்கம்பன்சி அதிகமாக இருக்கிறது
என்று மீடியாக்கள் கூறி ராஜஸ்தானில் பிஜேபி
அவுட் என்றே கூறுகின்றன.

ஆனால் ஒரு விசயத்தை மீடியாக்கள் மறந்து
விட்டன. பிஜேபி ஆட்சிக்கு எதிராக போராடியவர்
கள் அனைவரும் சாதி சார்ந்த அமைப்பு களே ்
ராஜபுத்திரர்கள் பிஜேபிக்கு எதிராக இருந்தால்
ராஜபுத்திர ர்களின் எதிரியான ஜாட்கள் பிஜேபி
பக்கம் வருவார்கள்.அதே மாதிரி குஜ்ஜார்கள்
பிஜேபி வேண்டாம் என்றா ல் இதுவரை காங்கிரஸ்
பக்கம் இருந்த மீனாக்கள் பிஜேபி பக்கம் வருவார்
கள்.

இந்த சாதி சமன்பாடு தான் ராஜஸ்தானில் பிஜேபி
வெற்றியை உறுதி செய்யும். ஏனென்றால் 6 சதவீத
ராஜபுத்திரர்கள் பிஜேபி யை விட்டு விலகினால்
15 சதவீத ஜாட்கள் பிஜேபிக்கு ஆதரவாக வர
வாய்ப்புண்டு. அதே மாதிரி 8 சதவீத குஜ்ஜார்கள்
பிஜேபிக்கு எதிராக இருந்தாலும் 12 சதவீதம்
இருக்கும் மீனாக்கள் பிஜேபி பக்கம் வருவார் கள்

இது முழு அளவினாள இடப்பெயர்ச்சி இல்லை
என்றாலும் பிஜேபி இழக்கும் ஆதரவு ஓட்டுக்களை
நிரப்பி விடும். அதனால் பிஜேபிக்கு பெரிய
அளவில் தோல்வி வராது. அது மட்டுமல்லாது
மீனா என்கிற பழங்குடி மக்களின் நம்பிக்கை
நாயகன் என்று கூறப்படும் கிரோடிலால் மீனா
மீண்டும்  பிஜேபிக்கு வந்து விட்டார்.

கடந்த 2013 சட்டமன்ற தேர்தலில் இவர் என்பிபி
மூலமாக போட்டியிட்டு சுமார் 5 சதவீத வாக்குகளை
பெற்று இருந்தார். கடந்த தேர்தலில் இவரால்
தான் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண் டிய மீனா மக்களின் ஓட்டுக்கள் பிரிந்து காங்கிரஸ் கட்சி
படு தோல்வி யை சந்தித்தது.

கடந்த தேர்தல் மாதிரியே இந்த தேர்தலில் ஹனுமன்
பெனிவால் என்கிற முன்னாள் பிஜேபி க்கார்ரை
ராஷ்டிரிய லோக்தந்திரிக் பார்ட்டி என்கிற ஒரு
கட்சியை ஆரம்பித்து ள்ளார்.இவரோடு இன்னொரு
பிஜேபி முன்னாள் அமைச்சர் கன்ஸ்யாம் திவாரி
என்பவரும்  பாரத் வாஹினி பார்ட்டி என்று கட்சி
ஆரம்பித்து பிஜேபிக்கு எதிராக களத்தில் நிற்கி
னார்கள்.

ஹனுமன் பெனிவால் ஜாட் மக்களின் செல்ல பிள்ளை .இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாக
செல்லும் ஜாட் ஓட்டுக்களை பிரித்து விடுவார்.
அதோடு வசந்திரா ராஜே சிந்தியா மீது கோபத்தில்
இருக்கும் பிஜேபி அனுதாபிகள் மற்றும் பிஜேபி
ஆட்சிக்கு எதிராக இருக்கும் நடுநிலை யாளர்
களின் ஓட்டுக்களை ஹனுமன் பெனிவால் கூட்டணி
ஓரளவு பெற்று விட வாய்ப்புகள் இருக்கிறது.

ஹனுமன் பெனிவால் கூட்டணி  பிரிக்கும் வாக்கு
களை வைத்து தான் ராஜஸ்தானில் பிஜேபிக்கு
வெற்றியா இல்லை மாபெரும் வெற்றி யா என்று
தீர்மானமாகும்.கடந்த 2016 தமிழக சட்டமன்ற
தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடுமையான
ஆன்ட்டி இன்கம்பன்சி இருந்தது.

அனைத்து ஊடகங்களும் ஜெயலலிதா தோற்கிறார்
தமிழகத்தில் திமுக ஆட்சி என்றே கூறி வந்தன. காமெடி என்னவென்றால் எக்சிட் போலில் கூட
திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறினார்
கள். கடைசியில் என்னவாயிற்று? அதிமுக தானே
ஜெயித்தது .இது எப்படி நடைபெற்றது?

இதற்கு காரணம் மக்கள் நலக்கூட்டணி. இந்த கூட்
டணி பெற்ற 6 சதவீத வாக்குகள் தான் அதிமுக வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது.மக்கள்
நலக்கூட்டணி 10 சதவீத வாக்குகளுக்கு அதிகமாக
பெற்று இருந்தால் திமுக படுதோல்வி அடைந்து
இருக்கும்.அதே மாதிரி மக்கள் நலக்கூட்டணி 3 சத
வீத வாக்குகளை பெற்று இருந்தால் கூட அதிமுக
தோற்று இருக்கும். ஏனெனில் கடந்த 2016 சட்ட
மன்ற தேர்தலில் அதிமுகவுக்கும் திமுக கூட்டணி
க்கும் உள்ள வித்தியாசம் ஜஸ்ட்  1 சதவீதம் தான்.

அதிமுக பெற்றது 41 சதவீத வாக்குகள் திமுக
கூட்டணி பெற்றது 40 சதவீத வாக்குகள். இந்த
1 சதவீத வாக்குகள் தான் அதிமுகவுக்கு 38 தொகு
திகளை அதிகமாக கொடுத்து ஆட்சிக்கட்டிலில்
அமர்த்தியது..

இதே மாதிரி 2014 லோக்சபா தேர்தலில் திமுக ஒரு
தொகுதியில் கூட ஜெயிக்க முடியாமல் போக என்ன
காரணம்? அப்பொழுது பிஜேபி பாமக தேமுதிக
மதிமுக கட்சிகள் பிஜேபி தலைமையில்  கூட்டணி
அமைத்து போட்டியிட்டு 18 சதவீத வாக்குகளை பெற்றதால் தான் அதிமுகவுக்கு 37 தொகுதிகளும் திமுகவுக்கு முட்டையும் கிடைத்தது.

ஆக தேர்தலில் ஓரளவு வலிமையானமூன்றாவது
அணிஒன்று போட்டியிட்டால் அதுஆளும் கட்சிக்கே சாதகமாகும் என்கிறது அரசியல் கணக்குகள்.இதே
கணக்கை அடிப்படை யாக வைத்து தான் ராஜஸ் தான் தேர்தலை பிஜேபி எதிர் கொள்கிறது.

சரிப்பா ஹனுமன் பெனிவால் கூட்டணி எந்த
அளவிற்கு பிஜேபிக்கு எதிரான வாக்குகளை
பிரிக்கும்? என்று நீங்கள் கேட்கலாம்.இப்போதைக்கு
வரும் தகவலின் படி சுமார் 25 தொகுதிகளில் காங்
கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை ஹனுமன்
பெனிவால் காலி செய்கிறார் என்கின்றன ராஜஸ் தான் தேர்தல் களநிலவரங்கள்.

ஹனுமன் பெனிவால் ஒரு மிகப்பெரிய ஜாட்
லீடர். ராஜஸ்தானில்  சுமார் 15 சதவீதம் வாக்குகளை
வைத்து இருக்கும் ஜாட் மக்கள் தான் சுமார் 50
சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை
தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்கள். வழக்கமாக
காங்கிரஸ்க்கு ஆதரவாக இருக்கும் ஜாட்கள் இந்த
முறை சாதி அடிப்படையில் ஹனுமன் பெனிவாலின்
கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

அதனால் ஹனுமன் பெனிவால் அமைந்துள்ள
மூன்றாவது அணி 5-10 சதவீத வாக்குகளை பெற
வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமல்லாது சுமார்
40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக
காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கிடைக்காதவர்
கள் போட்டியிடுகிறார்கள்.இதனாலும் காங்கிரஸ்
ஓட்டுக்கள் பிரிகிறது.

இதனால் பிஜேபிக்கு எதிராக இருக்கும் ஆன்ட்டி
இன்கம்பன்சி சிதைவதால் பிஜேபிக்கு முன்னிலை
கிடைத்து விடும். இன்னொரு முக்கியமான விசயம்
என்னவென்றால் தமிழகத்தில் எப்படி திமுகவை
விட அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் அதிகம் அதே
மாதிரி ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை விட
பிஜேபிக்கு தான் அதிக வாக்கு சதவீதம் உள்ளது.

அதனால் ஹனுமன்  பெனிவால் கூட்டணி சுமார்
5-7 சதவீத வாக்குகளை பெற்று இருந்தால் பிஜேபி க்கு 100-110 தொகுதிகள் கிடைக்கும். ராஜஸ்தான்
கள நிலவரம் இப்போதைக்கு இந்த நிலைமையில்
தான் இருக்கிறது .ஒரு வேளை ஹனுமன் பெனிவால் கூட்டணி 10 சதவீத வாக்குகளை பெற்று
விட்டால் பிஜேபிக்கு 125 -135 தொகுதிகள் கிடைத்து
விடும்.

சரிப்பா.. முடிவாக ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா..
ராஜஸ்தானில் பிஜேபிக்கு கிடைக்க இருப்பது வெற்றியா? இல்லை மாபெரும் வெற்றியா? இது
தான் ராஜஸ்தானில் உள்ள இப்போதைய நிலை
இதற்கான விடை  டிசம்பர் 11 ல் தெரிந்து விடும்.
அதுவரை வெயிட் & ஸீ....

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...