பட்டேலுக்கு 600 அடியில் அல்ல 1000 அடியில் கூட
சிலை வைக்கலாம்-
இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் நவீன இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேலின் பிறந்த
நாள். இன்று குஜராத் நர்மதா நதிக்கரையில்
600 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான
சிலையை நிறுவி படேலை பெருமை படுத்தி
உள்ளார் மோடி.. பட்டேல் இல்லை என்றால் இன்றைய இல்லை. எனவே 600 அடியில் அல்ல
1000 அடியில் கூட படேலுக்கு சிலை வைக்கலாம்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, இங்கு 562 சுதேச அரசுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கண்மூடி கண்திறப்பதற்குள் இந்தியாவோடு இணைத்த படேலுக்குகாஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள்
மட்டும் தண்ணி காட்டி வந்தன.
பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கு என்று தனியாக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் கொண்டு இந்தியாவின் நம்பர் 1 சுதேச அரசாக இருந்தது.அது மட்டுமல்லாது
பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு
என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கு
இருந்தது.
.ஹைதராபாத். அரசின் பரப்பளவு எவ்வ ளவு தெரியுமா? இங்கிலாந்தையும் ஸ்காட்லாந் தையும் ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு இந்தியாவிலேயே சர்வ வல்லமை கொண்டு இருந்தது ஹைதராபாத் .
அதாவது பாக்ய நகர். எந்த நேரத்தில் பாக்ய நகர் என்று யார்.வைத்தார் களோ தெரியவில்லை. இன்றையதெலுங்கானாவின் தலைநகரான ஹை தராபாத்தன்னுடைய பெயரான பாக்யநகரை மட்டு மல்லாதுசகல பாக்யங்களையும் இழந்து தவித்து வருகிறது.
அப்போதைய ஹைதராபாத்தின் நிஜாமாக இருந் தவர் மீர் உஸ்மான் அலிகான் பகதூர். இவர் இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு
அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு
இணைய விரும்புவதாக அறிவித்தார்.இதை இந்தி யா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்கு. தயாரானது
இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண் டும். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ஹைதராபாத் இந்தியாவோடு தான் இணைய வேண்டும் என்று அங்கிருந்த இந்துக்கள் சுவாமி ராமானந்த தீர்த்தர் என்கிற துறவி தலைமை யில் போராட ஆரம்பித்தார்கள்.அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக நின்ற ரசாக்கர்கள என்கிற கூலிப் படை கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தலைவனாக காசிம் ரிஸ்வி என்கிற வக்கீல் இருந்து வந்தார்
இவர் வேறு யாருமல்ல.. இப்பொழுது ஹைதராபாத்
தை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கும் அசாதுதீன்
உவைசியின் குரு என்றே கூறலாம். உவைசியின்
மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப் பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம்
ரிஸ்வி.இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத்
நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பு ஆகும்.இது
துவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய
நாடாக அறிவிக்கப்பட்டது.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தை் கொண்டு வந்த
ஹைதராபாத் நிஜாம் கல்விகற்க வரும் இந்து
மாணவர்களுக்கு உருது கற்பிக்க வைத்துதெலுங்கு மொழியை அழித்து மாணவர்களை முழு அளவில் மதம் மாற்றும் வேலைகளை செய்து கொண்டு
இருந்தார். உடன் படாத இந்துக்களை நிஜாமின் கூலிப் படையான ரசாக்கர்கள் அடித்து கொன்றும்
ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டு
இருந்தார்கள்.
.
ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் ஆயிரக் கணக்கான இந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார் கள். ஆனால் அதே நேரத்தில் . வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும் நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது.
இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத் தில் குடியே றிய முஸ்லிம்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் இருக்கும்
ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவா ல்அடக்கி ஆள முடியாது என்கிற முஸ்லிம் களின் கோசமே ஹைதராபாத் முழுவதும் எதிரொலிக்க
ஆரம்பித்தது.
இதனால் கடுப்பான படேல் நேருவிடம் ஹைதரா பாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆக வேண் டும் என்று உறுதியாக நின்றார். ஆனால் நம்ம
செக்யூலர் சிகாமணி நேருவோ அவசரம். வேண்டாம் பொறுமை காப்போம். என்று படேலின் கைகளை
கட்டிப்போட்டார்.
சுமார் 2 மாதம் பொறுமை காத்து வந்த படேல்
கடைசியில் வேறு வழியின்றி,1948 ம்.ஆண்டு செப்டம்பர் 13 ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத்
தை கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பினார்
இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் போலோ' என்று . இந்திய ராணுவ ம் பெயர் வைத்ததுற.இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு
.அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக் கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில் தான் இருந்தது. நிஜாம்களுக்கு போலோ விளையாட்டு என்றால் இங்கிலாந்து
கணவான்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பது
மாதிரி.
நிஜாம்கள் பொழுது போக்குவதற்கு 17 போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில்
மட்டும் இருந்தது.என்றால் பார்த்து கொள்ளுங்கள்
அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என்று மேலை நாடுகள் அழைத்து வந்தன
ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷன் போலோ நடவடிக்கையில், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கூலிப்படை யான ரஜாக்கர்கள் சுமார் 1500 பேர்
கொல்லப்பட்டார்கள்.அது மட்டுமல்லாது ஹைத ராபாத் அரசின் தரப்பில சுமார 1300 பாதுகாவல களும் உயிரிழந்தார்கள்.
இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீரர்கள் உயிரி ழந்ததாகவும் 97 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா
காலமாகி விட்டதால் ஹைதராபாத் தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழு
அளவிலான போர் நிகழாமல் போய் விட்டது என்றே
நான் நினைக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
இந்தியாவிலும் காந்தி இல்லாமல் போய் விட்டார்
இருந்து இருந்தால் இதை நடைபெறாமல் செய்ய
ஹைதராபாத் நிஜாமின் அரண்மனை யிலேயே
காந்தி உண்ணாவிரதம் இருந்து இருப்பார். படேலும்
போய் தொலையுங்கள் என்று காந்திக்காக ஹைத ராபாத் தைகண்டு கொள்ளாது விட்டு இருப்பார்.
அந்த வகையில் கோட்சேவுக்கு தான் ஹைதராபாத்
இந்துக்கள் நன்றி கூற வேண்டும். இன்னொரு
விஷயம் இருக்கிறது. ஹைதராபாத் தை இந்திய
ராணுவம் கைப்பற்றி யதும் வீறு கொண்டு எழுந்த
இந்துக்கள் ரசாக்கர்கள் அப்பாவி முஸ்லிம்கள் என்று பிரித்து பார்க்காமல் போட்டு தாக்கியதில்
சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்க லாம்
என்றும் கூறுகிறார்கள்.கூடவே இருக்கலாம்..
இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ம் தேதி வந்தது. ஹைதராபாத்
ராணுவ தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்திய
படைக்கு தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோ வை நடத்தி ஹைதராபாத் தை கைப்பற்றி ய
மேஜர் சவுத்ரியிடம் சரணடைந்தார்.
ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வந்தவுடன் ரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்ட து காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப விட்டுக் காவலில் வைத்து அழகு பாரத்தது.
காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறைக்குள் தள்ள
வேண்டும் என்கிற பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை.ஆனால்
மக்கள் விட வில்லை.காசிம் ரிஸ்வியை கொலை
செய்ய முயற்சி த்ததால் வேறு வழியின்றி அவனை சிறையில் அடைத்து வைத்து ஒரு நல்ல நாள் பார் த்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் நேரு.
இந்த ஹைதராபாத்தை மீட்கும் ஆப்பரேசன்
போலோ நடவடிக்கை கூட நேருவின் விருப்பம்
இன்றியே படேல் மேற்கொண்டார் என்றும் கூறப்
படுவதுண்டு.இந்த ஆப்பரேசன் போலோ நடைபெ றும் பொழுது காஷ்மீர்க்காக இந்தியாவும் பாகிஸ் தானும் காஸமீரில் சண்டை போட்டுக் கொண்டு
இருந்தார்கள்.
இதனால் பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவதற்கு ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகானிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது. நிஜாமும்
பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்து
காத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத்
சமஸ்தானத்தையே கைப்பற்றி இந்தியா வோடு
இணைத்த பட்டேல் இல்லை என்றால் நவீன
இந்தியாவே இல்லை என்று கூறலாம்.
இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம்
இருக்கிறார்கள்.. முடிந்தால் வாருங்கள் மோதி பார்
ப்போம் என்று இந்தியா விடம் சவால் விட்ட நிஜாம்
உஸ்மான் அலிகானின் சவாலை ஏற்று எண்ணி
100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களை ரஸ்க்கு
களாக பாரசல் செய்த இந்திய ராணுவத்திற்கு தலை
வணங்கி சல்யூட்.
இந்த ஆப்பரேசன் முடிந்த பிறகு ஹைதராபாத்துக்கு
சென்ற படேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி இருக்கிறதே. பதிலுக்கு . படேல் வெற்றி புன்னகையோடு நிஜாமை பாரத்த
கம்பீரம் இருக்கிறதே..
இதற்காகவே.. 600 அடியில் அல்ல 1000 அடியில்
கூட படேலுக்கு சிலை வைக்கலாம்..
.
No comments:
Post a Comment