Monday, 5 November 2018

அலெக்ஸ்சாண்டர்.

தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கு இரையாக்கி அந்த நாட்டு மக்கள் பலரை கொன்று.

சரணடைந்தவர்களை கொத்தடிமைகளாக்கி கொடுமை படுத்திய கொடுங்கோலன் தான் மாவீரன் என்று சொல்லப்படும்  அலெக்ஸ்சாண்டர்.

அத்தகைய அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் தோற்று சரணடையாத ராஜா புருஷோத்தமனை எதுவும் செய்யாமல்.

உன் நாட்டை நீயே ஆண்டு கொள் என்று பெருந்தன்மையாக விட்டிருப்பானா?

அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவி, மக்கள் அனைவரை விட அலெக்சான்டர் அதிகம் நேசித்தது தான் வளர்த்த  Bucephalas என்னும் குதிரையை.

10 வயதில் அந்த குதிரையை அலெக்சான்டர் அடக்கியது முதல் மிக அதிக  அன்பையும், பாசத்தையும் அந்த குதிரையின் மீது கொட்டி, கொட்டி அலெக்சான்டர் வளர்த்தான்.

அத்தகைய குதிரையை ஈட்டி எரிந்து கொன்றதே ராஜா புருஷோத்தமன் தான்.

தன்னுடைய செல்ல குதிரையை கொன்ற ராஜா புருஷோத்தமனுக்கு அலெக்சான்டர் உயிர் பிச்சை கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை.

உண்மையில் தோற்றது புருஷோத்தமன் அல்ல அலெக்சான்டர்.

சோழ ராஜா புருஷோத்தமன் தான்  அலெக்ஸான்டருக்கு உயிர் பிச்சை கொடுத்தார்.

அதனால் தான் அலெக்சான்டர் பாதியிலேயே  இந்தியாவை விட்டு ஓடினான்.

அலெக்சான்டரின் படை வீரர்கள் போரில் மிகவும் களைத்து போய் விட்டார்களாம்.

அலெக்சான்டரின் படை வீரர்கள்  இனியும் போர் செய்ய முடியாது என்று சொன்னதால்

அலெக்ஸான்டர் வேறு வழியின்றி இந்தியாவில் இருந்து திரும்பி போனானாம்.

இது நம்பும் படியாகவா? இருக்கு. அலெக்ஸான்டர் காலத்தில் இந்தியாவை 56 மன்னர்கள் ஆண்டார்கள்.

அக்காலத்தில் இந்தியா கல்வி, செல்வம், வீரம் என அனைத்திலும் சிறந்து விளங்கியது.

அதுவும் அன்று இந்தியாவில் இருப்பதை போல் செல்வம் உலகின் வேறு எந்த பகுதியிலும்  இல்லை. 

இந்தியாவை முழுமையாக வெற்றி கொண்டால் இந்திய செல்வங்களை கொள்ளையடிக்கலாம்  என்னும் ஆசையில் தான் அலெக்சான்டரின் படை வீரர்கள் இருந்து இருப்பார்கள்.

ஏற்கனவே பல நாட்டு செல்வங்களை கொள்ளையடித்த அலெக்ஸாண்டரின் படை வீரர்கள்  ருசி கண்ட  பூனைகள்.  அவ்வாறு இருக்க.

அன்று உலகிலேயே செல்வ செழிப்பில் சிறந்த நாடாக  நமது பாரத தேசம் இருந்து இருக்கிறது.

அத்தகைய பாரத தேசத்தின் செல்வங்களை அலெக்ஸ்சாண்டரின் படை வீரர்கள் கொள்ளையடிக்காமல்.  இந்தியாவை நாங்கள் வெற்றி கொண்டு விட்டோம். புருஷோத்தமனை அலெக்ஸ்சான்டர்  வென்று விட்டார்.

ஆனாலும்    நாங்க ரொம்ப சோர்வு அடைந்து விட்டதால் இந்தியாவில் இருந்து பாதியிலேயே வெளியேறுகிறோம் என்று  அலெக்ஸ்சாண்டரின்  படை வீரர்கள் சொன்னாங்களாமாம்.

அதை நாங்க நம்பனுமாமாம்.

சோர்வு அடைந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிய அலெக்ஸ்சான்டரின் படை அவர்களின் நாடான கிரேக்கம் போகாமல் பாபிலோன் நாட்டை கைப்பற்ற எதனால்? போனார்கள்.

கேக்கறவன் கேனை பயலா இருந்தா சோனியா காந்தி கொண்டையில் சோனி டிவி தெரிகிறது என்று சொல்வார்கள்.

இது போன்ற வலராறுகளை நாம் சிறு வயதில் நம்பினால் தவறு இல்லை. ஆனால் பெரியவனாக வளர்ந்த பின்பும் இவற்றை நம்புதல் எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.

புருஷோத்தமனிடம் அலெக்ஸ்சாண்டர் மண்ணை கவ்வியது அலெக்ஸ்சாண்டரின் பிரதான தளபதி செலூசியஸ் நிக்கேடர் மனதில் ஒரு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. 

அலெக்ஸ்சாண்டர் பாபிலோனில் விஷ காய்ச்சலால் இறக்க. அதன் பின் ராஜா புருஷோத்தமன் அவர்களும்   வியோதிகத்தால்  காலம் அடைய.

இது இந்தியாவை பழி வாங்க வேண்டிய தருணம்  என்று  செலூசியஸ் நிக்கேடர் சுமார் 5 லக்ஷம் கிரேக்க வீரர்களோடு  இந்தியா மீது படை எடுத்து வர.

அவனின் அந்த படையை  தோற்கடித்தவர் தான் மாமன்னர் சந்திர குப்த மௌரியா.

பின்னர் சந்திர குப்த மௌரியா செலூசியஸ் நிக்கேடரின் மகளையும்  தனது வெற்றியின் பரிசாக பெற்றார்.

வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய மன்னர் சந்திர குப்த மௌரியா தான்.

சந்திர குப்த மௌரியாவின் அரசவையில் சாணக்கியர் என்கிற அறிவாளி இருந்ததால். 

வீரம் மிகு பீகாரிகள்  செலூசியஸ் நிக்கேடரின் கிரேக்க படையை வெற்றி கொண்ட வரலாறு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் சாணக்கியர் போன்ற ஒரு அறிவாளி ராஜா புருஷோத்தமன் அவர்களின் அரசவையில்  இல்லாததாலோ என்னவோ.

ராஜா புருஷோத்தமன் அலெக்ஸ்சாண்டரை வென்று.

அலெக்ஸ்சாண்டருக்கு  உயிர் பிச்சை கொடுத்த வரலாறு நமது நாட்டில் கல்வெட்டில் பதிவு செய்யப்படவில்லை.

நாம் நமது சுயத்தை இழக்க வேண்டும். மனதளவில் பலவீனம் அடைந்து

அதன் விளைவாக உடலளவிலும்  நாம் பலவீனம் அடைய வேண்டும் என்பதற்காகவே.

வெள்ளையர்கள் திட்டமிட்டு நம் வரலாறுகளை இருட்டடிப்பு  செய்து விட்டார்கள்.

நான் பெரிதும் மதிக்கும் மதன் போன்ற அறிவாளிகள் எதனால்? இது போன்ற உண்மைகளை எழுத மாட்டேன் என்கிறார்கள்.

2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த ஹிப்போ கிரேட்ஸ் என்கிற கிரேக்க மருத்துவர் பற்றி மதன் அவர்கள் எழுதி இருக்கிறார்.

ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் சர்ஜரி முதலான அறுவை சிகிச்சைகள் செய்த  இந்திய மருத்துவர் சுஷ்ருதா பற்றி மதன் அவர்கள் எழுதவில்லை. 

கிபி 740 இல் வெற்றி கொண்ட இந்திய மா மன்னர்  Bappa Rawal பற்றி மதன் அவர்கள் எழுதவில்லை.

சொந்த வரலாற்றை இழந்த ஒரு சமுதாயம் புதிய வரலாறை படைக்க முடியாது.

வீரமும், தீரமும், ஞானமும் இந்தியாவில்  உள்ள 125 கோடி மக்களின் மரபணுவிலும் ஊறி போன ஒன்று.

ஆனால் நமது மரபணு திறனை சூரியனை மறைக்கும் மேகம் போல். மெக்காலே கல்வி என்னும் மேகம்  நமது மரபணு திறனை மறைத்து கொண்டு இருக்கிறது.

இழந்த நமது மரபணு திறனை வெளியே கொண்டு வர வேண்டியது. இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இந்தியனின் கடமை, கடமை, கடமை.

ஜெய்ஹிந்த்

Rajeevi Nandhagopal

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...