இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது……FOR EASE OF DOING BUSINESS …
எது எல்லாம் சாதகம்….. தற்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைப்பது, எளிதில் கடன் கிடைப்பது, தொழில்களில் முதலீடு செய்பவர்களை பாதுகாப்பது, தொழிற்துறை மேம்பாடு மற்றும் கொள்கைகள் தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு சாதகமாக, அதிக பணி இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்களில் உலகின் டாப் 25 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
Distance to Frontier ஒரு பொருளையோ அல்லது சேவையை, எந்த முறையில் மிக சிறப்பாக உற்பத்தி செய்யலாம், சேவைகளை வழங்கப்படலாம் என்று பல்வேறு நாட்டின் முறைகளைக் கண்டு மதிப்பிடும். உலகிலேயே சிறந்த முறைக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். அவர்களைத் தொடர்ந்து அடுத்த அடுத்த நாடுகளின் உற்பத்தி முறை மற்ரும் சேவை வழங்கும் முறைகளை வைத்து 100க்கு எவ்வலவு என்று மதிப்பெண் இடும். இதில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.47 மதிப்பெண் அதிகம் பெற்று 67.23 மதிப்பெண்களைக் பெற்று இருக்கிறது.
2014 கால கட்டத்தில் ஒரு தொழில் தொடங்க இருப்பவர் மின்சாரத்துக்காக விண்ணப்பித்தால், மின் இணைப்பு வழங்க சராசரியாக 105 நாட்கள் ஆயின. தற்போது 55 நாட்களில் வழங்கப்படுகிறதாம். இந்தியாவில் கடன் பிரச்னைகளை எதிர் கொள்ள Insolvency and Bankruptcy Code அறிமுகப்படுத்தியது, மிகப் பெரிய கார்ப்பரேட் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்யாமல் வட்டியைக் குறைத்து அசலைப் பெறுவதை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் பலன் அளித்திருக்கின்றன.
இந்தியாவின் இடம் தற்போது உலக வங்கி அக்டோபர் 31, 2018-ல் அறிவித்த பட்டியல் படி, இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த 2017-ல் இந்தியாவுக்கு 100-வது இடமே வழங்கப்பட்டது. தற்போது கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் இடத்திலும், BRICS - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
முன்னேறிட்டீங்கப்பா உலக நாடுகளில் அதிக முனைப்போடு செயல்பட்டு, மதிப்பீட்டில் அதிகம் முன்னேறிய நாடாக இந்தியாவை பாராட்டி வருகிறது உலக வங்கி.2017-ம் ஆண்டிலும் அதிகம் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment