மனிபென் படேல் ஒரு சகாப்தம்.!
இங்கே உள்ள திராவிட திருட்டு தீய சக்திகளுக்கு இந்த உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை.
சொத்து சேர்ப்பதையே வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்படும் திராவிட அரசியல்வாதிகளுக்கு இந்த உன்னதமான அர்ப்பணிப்பு தெரிய வாய்ப்பில்லை.
இங்கே உள்ள ஜாதி சங்க தலைவர்களையும்., கோமாளி நடிகர்களையும்., அரசியல்வாதிகளையும் அவர்களின் அரசியல் வாரிசுகளையும் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் மகளின் வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
வாருங்கள் நம் தேசத்துக்காக தனது குடும்பத்தையே அற்பணித்த சர்தார் வல்லபாய் பட்டேலின் மகள் மணி பென் படேல் அவர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்வை பார்ப்போம்.
மனிபென் படேல் #சர்தார்_வல்லபாய்_படேலின் மகள். அவருக்கு நிழலாக நின்று உதவியவர். படேலுக்கு கிடைக்கவேண்டிய பிரதமர் பதவியை தட்டி பறித்த நேரு, அவரது மகள் இந்திரா ஆகியோரை மனக்கண் முன் கொணர்ந்து ஒப்புநோக்கினால் மணி பென்னின் வலியை நன்றாக உணர முடியும். வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட Dr. வர்கீஸ் குரியனின் சுய சரிதையில் மணிபென் பற்றி எழுதி உள்ளார்.
“மணிபென் அளப்பரிய நேர்மையும் விசுவாசமும் உள்ள ஒரு உயர்ந்த பெண்மணி. தந்தை சர்தார் படேலுக்காக தன வாழ்நாளை அர்ப்பணித்தவர். படேல் இறந்த பிறகு அவர் கூறியபடி ஒரு நோட்டுப் புத்தகத்தையும் ஒரு பையையும் நேருவிடம் ஒப்படைத்தார். அதை வாங்கி வைத்துக்கொண்ட நேரு எதுவும் கேட்கவில்லை. சற்று தயங்கிவிட்டு மணிபென் வெளியேறினார். அந்த நோட்டு காங்கிரசின் வரவு செலவு கணக்கு புத்தகம். அந்தப்ப பையில் முப்பத்தைந்து லட்ச ருபாய் இருந்தது. தாய் தந்தை இல்லாத மணிபென் எங்கு தங்கப்போகிறார்; ஏதும் உதவி தேவையா என்றெல்லாம் நேரு கேட்கவில்லை.
இது படேல் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பின் ஒரு முகம். மணிபென் என்ன ஆனார் என்று தில்லி காங்கிரஸ் தலைவர்கள் எவருமே அக்கறை காட்டவில்லை. பிர்லா அவரை அழைத்து பிர்லா மாளிகையில் தங்க வைத்தார். அந்த ஏற்பாடும் பிடிக்காமல் அகமதாபாத்தில் ஒரு உறவினருடன் தங்கினார். காசில்லாமல் பஸ்ஸிலும் மூன்றாம் வகுப்பு ரயிலிலும் பயணம் செய்தார். பின்னாளில் திருபுவன்தாஸ் என்ற குஜராத் காங்கிரஸ் தலைவரின் #சிபாரிசால் லோக்சபா உறுப்பினரானார். குஜராத் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் தயவில் மூன்று முறை லோக் சபாவுக்கும் ஒரு முறை ராஜ்ய சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் வகுப்பு பாஸ் இருந்தாலும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தார். தானே நூற்ற நூலில் நெய்யப்பட்ட கதர் புடவையையே அணிந்தார். இறுதிவரை எங்கு சென்றாலும் கை ராட்டையை கூட எடுத்து செல்லும் பழக்கம் உண்டு.
நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த படேலின் மகளை இந்த தேசம் கண்டுகொள்ளவில்லை. பின்னாளில் கண் பார்வை குறைந்த மணிபென் அகமதாபாத்தில் தனி ஆக வாழ்ந்தார். சில தேவைகளுக்காக வெளியே செல்ல நேர்ந்தபோது அஹமதாபாத் தெருக்களில் அடிக்கடி தடுக்கி விழுவாராம். யாரென்று தெரியாமலே அவரை வழிப்போக்கர்கள் தூக்கிவிடுவார்களாம். அவரது எளிய வாழ்க்கையில் சிறு உதவிகள் கிடைத்திருந்தால் அவர் கடைசி நாட்களை அமைதியாக கழித்திருப்பார். படுத்த படுக்கை ஆக இருந்த அவரை இறுதி நாட்களில் புகைப்படக்காரருடன் வந்து பார்த்தார் முதல்வர் சிமன் பாய் படேல்.அடுத்த நாள் அது எல்லா நாளிதழ்களிலும் புகைப்படத்துடன் செய்தியாக வந்தது".
பணம்., சொத்து., தனது குடும்பம் என்று மட்டுமே வாழும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி ஒரு உன்னதமான தலைவர் இந்த தரணியில் வாழ்ந்தார் என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றது.
இப்படியொரு உன்னதமான தியாகத்தை அர்ப்பணிப்பை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் அவரை போற்றி வணங்க வேண்டும் என்பதே இந்த அடியேனுடைய வேண்டுகோள்.
No comments:
Post a Comment