Saturday, 17 November 2018

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு என்னத்துக்கு சிலை ??? அதுவும் 3000கோடியில்??? உயிர் இல்லாத சிலைக்கு எதுக்குயா காச வீண் ஆக்குகிறார்கள்???? விவசாயிக்குக் கொடுக்க முடியல... {கேள்வி: இணையப் போராளிகள்}

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு என்னத்துக்கு சிலை ??? அதுவும் 3000கோடியில்??? உயிர் இல்லாத சிலைக்கு எதுக்குயா காச வீண் ஆக்குகிறார்கள்???? விவசாயிக்குக் கொடுக்க முடியல... {கேள்வி: இணையப் போராளிகள்}

முதலில் சிலை எப்படியாக உருவாக்கப்பட்டது
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்தச் சிலை மொத்த செலவில் முக்கியமானது இரும்பு. அந்த இரும்பை நாம் மொத்த சிலையின் மதிப்பில் சேர்த்து கொண்டுவிடுகிறோம். அதுவும் தவறு - இந்தச் சிலை திட்டமிட்டதும் நாடு முழுவதும் loha-campaign அறிவித்தார் மோடி. அதன் மூலம் நாட்டின் விவசாயிகளிடம் இருந்து இரும்புகளைப் பெற்றனர். அதுவே சார்த்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்குச் சரியானதாக இருக்கும் என்று நினைத்தனர். அதாவது விவசாயிகள் கொடுத்து ஒரு இரும்பு மனிதருக்கு இரும்பு சிலை கட்டுவதே கவுரவமான விசயமாகக் கருதி இந்த விதம் திட்டமிடப்பட்டது.

அதன் படி நாடுமுழுவதும் விவசாயிகள் கொடுத்த இரும்பின் அளவு மட்டும் 5000 டன். நன்கு புரிந்து கொள்ளுங்கள் மொத்த சிலை உருவாக்கத்தில் 5,700 டன் பயன்பாட்டில் 85% மேல் நம் நாட்டின் விவசாயிகள் கொடுத்த இருப்பு. இதையும் சேர்த்து தான் நீங்கள் சிலையின் மதிப்பைக் கணக்கிடுகிறீர். அடுத்து இந்தச் சிலையை வடிவமைக்க நாடு முழுவதும் நன்கொடைகளை வேண்டினார்கள். அதற்காக SVPRET (sardar vallabhbhai patel rashtriya ekta trust) உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் (CPSE) மற்றும் இதர வழிகளில் சுமார் 2,063 திரட்டத் திட்டமிட்டு வேலையைத் தொடங்கினர். {ஆனால் மொத்தம் 2,989கோடி தேவையானது. இந்த புராஜெட் எடுத்துச் செய்து முடித்த நிறுவனம் L&T முழு தகவல் வெளியிட்டால் தான் கூடுதல் செலவின் விவரம் புரியும். இதைக் கட்டி முடிக்க 3,400 ஊழியர்கள் பயன்படுத்த பட்டனர் அதையும் அவர்கள் செலவினத்தையும் கணக்கில் கொள்ளவும்.}

ஆக யாரும் கவலை கொள்ள வேண்டாம் இது முழுக்க முழுக்க மக்களின் துணையுடன் கட்டப்பட்ட சிலை. {நான் என் நண்பர்கள் எல்லோரும் நன்கொடை அனுப்பினோம். தமிழகத்தில் இருந்தும் இரும்பு சேகரித்து அனுப்பபட்டது.}

அடுத்து இந்தச் சிலை வடிவமைக்கு மட்டும் அல்ல - இதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள நினைவகங்கள் , வரலாற்று விவரங்களுடன் கூடிய கண்காட்சிகள் , பூந்தோட்டங்கள் என்று அந்தத் தீவை முழுவதும் சுற்றுலா தளத்திற்குத் தயார் செய்துள்ளனர். எனவே வெட்டி கூச்சல் வேண்டியது இல்லை.

{ஈ வே ராமசாமிக்குக் கருணாநிதி எம்ஜி ஆர் ஆதிக்கம் அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு அதை முறியடிக்க ஊர் ஊராகச் சிலை திறந்தாரே மக்கள் காசில் அது போல் அல்ல இது... ஈவே ராமசாமியே திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அளவுக்கு வெக்கம் கெட்ட செயலும் இல்லை. இதைச் செய்த திமுக எல்லாம் சிலையை பற்றிப் பேச அருகதை இல்லாத கட்சி.}
----------------------------------------------------
இது ஒரு வீண் செலவு ???

என்பது ஒரு தவறான வாதம். இன்ஜினியர்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். பொதுவாகச் சுற்றுலா தளங்களை ஈர்க்கவும் அதே நேரம் நாட்டின் தன்மையை பிரதிபலிக்கவும் சிலைகள் வைப்பது ஒன்றும் தவறே கிடையாது. சிலைகள் வைக்கும் போது அதனை நோக்கி சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வண்ணம் முறையான ஏற்பாடுகள் இருக்கவேண்டும் - அப்படி இருக்கும் என்றால் அதில் செலவு செய்யும் தொகை வீணாகாது. எனவே அதைச் செய்தார்களா என்று கேட்பது தான் சரியான கேள்வியாக இருக்க முடியுமே தவிர சிலைக்கு எதற்கு செலவு என்பது தவறான வாதம்.

எடுத்துக்காட்டுக்கு :

அமெரிக்காவில் உள்ள Statue of Liberty - இதில் மொத்தம் 150 ஊரியர்கள் வரை நேரடியாக வேலை செய்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 45,00,000பார்வையாளர்களை இது ஈர்க்கிறது. இதன் மூலம் நேரடியாக இந்தச் சுற்றுலா பயணிகள் மூலம் ஆண்டுக்கு 1923கோடி வரை பணப்புழக்கம் அந்தப் பகுதிகளில் நடக்கிறது அதன் மூலம் சுமார் 3500வேலைவாய்ப்பு சுற்றுலா தளத்தை நம்பி உருவாகியுள்ளது. ஆக மற்ற அனைத்து வகையிலும் பார்க்கும் போது ஆண்டுக்கு economic output மட்டும் சுமார் 2692கோடி வரை கிடைக்கிறது. ஆக முதலில் வீண் செலவு என்று கூறுவதை நிறுத்திவிட்டு எப்படி இதில் இருந்து சுற்றுலாத்துறை பயன்படுத்தப் போகிறது என்பது தான் முக்கியம்.

அடுத்து

தாஜ்மகாலுக்குத் தினமும் சுமார் 40,000பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். இங்கே வெறும் 10,000பார்வையாளர்கள் என்றாலும் கூட ஆண்டுக்கும் 36,50,000பார்வையாளர்களை ஈர்க்க முடியும். எளிமையாக 3000கோடியை எடுத்துவிட முடியும் அத்துடன் சுற்றுலா தளத்தினை வைத்து குறிப்பிட்ட அளவு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். {இதன் நுழைவு டிக்கெட் விலை 350ரூபாய் அதையும் நியாபத்தில் கொள்ளவும். பராமரிப்பு செலவுக்கு என்ன செய்ய போகிறார் மோடி என்று ஒரு கம்யுனிஸ்ட் கூட்டம் வழக்கம் கிண்டல் ஆரம்பித்துள்ளது.} எனவே இதன் மீதான செலவினம் எளிதில் 10 வருடத்தில் எடுத்துவிட முடியும். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. நாளை நீங்கள் இந்த விதமான புராஜெட் எடுத்தாலும் அதன் பிசினஸ் மாடல் இது தான்.

இது போல் புராஜெட் எல்லாம் ஒருபக்கம் நாட்டின் பெருமையை பிரதிபலிக்கத் திட்டமிட்டாலும் - இன்ஜினியர்கள் பொறுத்தவரை அதன் மீதான முதலீட்டை எப்படி வியாபாரம் ஆக்கிக் கொள்வது என்ற திட்டத்தையும் சேர்த்தே திட்டமிடுவர். {இதனால் தான் நான் அடிக்கடி கூறுவேன் தயவு கூர்ந்து வியாபார புத்தியை கொஞ்சம் வளர்த்துக்கொள் என்று}

------------------------------------------------------
சரி இப்போது எதற்கு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைக்கின்றனர்???

இது தாங்க முக்கியமான கேள்வி... நம் நாட்டைப் பொறுத்தவரை நேரு குடும்ப வரலாறு தான் இந்திய வரலாறு - திராவிட கட்சிகள் வரலாறு தான் தமிழக வரலாறு என்று ஆகிவிட்டது காரணம் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால். பல உண்மையான மனிதர்கள் வரலாறு அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் போனது. இந்திய நாட்டின் அனைவரும் உண்மையில் முதல் இடத்தில் வைத்து வணங்க வேண்டிய மனிதர்களில் சர்தார் அவர்கள் முதலிடம் உண்டு. ஏன்???

ஒன்றுபட்ட இந்தியா இஸ்லாமியருக்கு பாக்கிஸ்தான் - இந்துக்களுக்கு இந்திய என்று பிரிவினைக்கு நடந்து முடிகிறது. இதில் ஜின்னா அவர்கள் காட்டிய அவரசம் காரணமாக நாட்டின் பிரிவினை வேகமாகச் செய்து முடிக்க - இன்னொரு பக்கம் இந்த நாட்டின் குட்டி ஜமிந்தார்கள் , ராஜாக்கள் கையில் இருந்த சமஸ்தானங்கள் சம்மதம் பெறுவது இந்திய தலைவர்கள் பொறுப்பாக மாறியது. ஒன்று இரண்டு அல்ல சுமார் 562 ஒன்றிணைத்து இந்தியாவைக் கட்டமைத்தவர் இந்த இரும்பு மனிதர். சர்தார் வல்லபாய் பட்டேல் கையில் எடுத்த எந்த இடமும் எந்தச் சமஸ்தானமும் இன்று பிரச்சனை இல்லை. நேரு கையில் எடுத்த எந்தப் பிரச்சனையும் இன்றுவரை முடிந்தபாடு இல்லை காஷ்மீர் தொட்டு அருணாசல பிரதேசம் வரை.

நேரு அல்லாமல் சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக ஆகி இருக்க முடியும் என்றால் அனைத்திலும் ஒரு நிலையானதொரு தீர்வு கிடைத்திருக்கும்

எடுத்துக்காட்டிற்கு

1.திபத் நாட்டைச் சீனா ஆக்கிரமிப்பு செய்த போது இந்தியாவின் உதவியை நாடிய திபத் மக்களை நேரு வஞ்சித்துவிட்டர்.

சீனா திபெத் ஆக்கிரமிப்பு தவறு என்று அதைக் கண்டிக்க கூறி IFS officer, Sumul Sinha 1952களில் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இவர் தான் Lhasaவில் பணியாற்றிய இந்தியாவின் பிரதிநிதி.
ஆனால் இதற்கு நேரு கொடுத்த சிம்பிலான பதில் "திபெத் சீனாவின் ஒருபகுதி".

2.1950 முதல் 1958கள் வரை எல்லா நகர்வுகளும் கம்முனிஸ்ட் ஆதரவும் நேரு செய்த மிகப்பெரிய தவறு. சீனா மாவோ தங்கள் எல்லையை விரிவாக்கத் தீவிரம் காட்டினர் இந்திய எல்லையில் கொண்டுவந்து சீனாவை நிறுத்தியது நேருவின் தவறான கம்முனிச ஆதரவு கொள்கை. இன்றுவரை அருணாசலபிரதேசம் பிரச்சனைக்கு இதுவே முக்கிய காரணம்.

3.Southeast Asia Treaty Organization (SEATO) இனைய மறுத்தார் நேரு.. காரணம் அது வலதுசாரி நாடுகளின் கூட்டமைப்பு என்று. காரணம் கம்யூனிஸ்ட் சகவாசம்.

4.காஷ்மீர் விவகாரம் : நன்கு புரிந்து கொள்ளுங்கள் இன்றுவரை அதாவது 2017ல் வரை காஷ்மீரில் வந்து குடியேறிய அந்த ஹிந்துக்களுக்கு எந்த அங்கிகாரமும் தர காஷ்மீர் அரசு அப்பட்டமாக மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தினை நேரு வழங்கியது தான். அது இன்று வரை நமக்கு எமனாக நிற்கிறது. இப்படி ஓர் ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும் இன்று நாடு சந்திக்கும் அத்தனை பிரச்சனைக்கும் நேரு காட்டிய அந்த கம்யுனிஸ்ட் காதல் தான் என்று... நேரு குடும்பத்து சொத்து போல் இந்தியாவை நினைத்துக் கொண்டு அனைத்தையும் அவரும் கிருஷ்ணமேனும் செய்த செயலால் இன்று வரை பெரும் விலையைக் கொடுக்கிறோம்.

கிழக்காசிய நாடுகளின் அனைத்து நாடுகளும் சிதறிவிட்டன... இந்தியா மட்டும் இன்றும் இணைந்து பயணிக்கிறது காரணம் முழுக்க முழுக்க சர்தார் வல்லபாய் பட்டேல் தான். இந்த மனிதரை நாம் போற்றவில்லை என்றால் எவரைப் போற்றுவது???? நிம்மதியாக சுவாமசம் உண்டு என்றால் காரணம் இந்த மனிதர் அமைத்துக் கொடுத்த பாதை அது.

நாட்டின் ஒற்றுமையை தூக்கிப்பிடிக்க ஒவ்வொரு நாடுகளும் பல வழிகளைச் செய்கின்றன.. தங்கள் ஒற்றுமையை உலகத்திற்குக் காட்ட - அந்த வகையில் இந்தச் சிலை நிச்சயம் இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சிறந்த அடையாளமாக நிற்கும்.
---------------------------------------------------
இறுதியாக :

ஆரம்ச்சுட்டேங்களா... எந்த விவகாரம் என்றாலும் அதை விவசாயத்துடன் இணைத்து உணர்வைத் தூண்டிவிடும் முட்டாள்தனத்தை முதலில் இந்தச் சமூகம் நிறுத்த வேண்டும். அது ஒரு தனிதுறை.. அந்தத் துறையை அந்தத் துறை வளர்ச்சி அடைய அது வளர்ச்சி அடைந்த நாட்டில் எப்படி வெற்றிகரமாகச் செய்கிறார்கள் என்று ஒப்பிட்ட வேண்டுமே ஒழிய இங்கே உக்காந்து கொண்டு

செய்தி : இஸ்ரோ ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பியது

ராக்கெட் இப்போ முக்கியமா சோறு முக்கியமா??? ராக்கெட் பறக்குது விவசாயி வயிறு எரியுது....

செய்தி : ராணுவத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு இவ்வளவு கோடி???

விவசாயி காசு இல்ல... ராணுவத்திற்கு எதற்கு எவ்வளவு செலவு...

செய்தி : அம்பானி நிறுவனம் 20,000 கோடி லாபம்..

நாசமா போக... இங்கே விவசாயி கஷ்ட படுகிறான் இவ்வளவு காச வச்சு என்னடா பண்ண போறேங்க...

செய்தி : 200 கோடியில் பாகுபலி படம் வெளியீடு..

டேங்க் (ஒரு கெட்ட வார்த்தை)........... படமாடா நாட்ட காப்பாத்தும் விவசாயி தாண்டா உங்களுக்கு சோறு போடனும்...

செய்தி : 5000 கோடியில் கார் தயாரிக்கும் நிறுவனம் வருவதற்கு ஒப்பந்தம்...

கார் செய்து அதையாட அவிச்சு சாப்பிட போறேங்க... விவசாயத்தை காப்பாற்ற வக்கு இல்லை...

இப்படி அனைத்துத் துறைகளையும் விவசாயத்துடன் கோர்த்துவிட்ட மீம்ஸ் செய்து அனுப்புவது எல்லாம் சுத்த முட்டாள் தனம்.. இதை முதலில் நிறுத்துங்கள்..

அடுத்துக் குறை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் ஒப்பிட்டுக் குறை சொல்ல முடியும்...

நீங்கள் தீபாவளிக்கு கறி விருந்து சாப்பிடும் புகைப்படத்தை நான் வெளியிட்டு - " பாருங்கள் நாட்டில் குழந்தை பிச்சை எடுக்கிறது. இவனுகளுக்கு கறி விருந்து கேட்கிறது.. அந்தச் செலவை குறைத்து விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாமே???" - இப்படி உங்கள் புகைப்படத்தையும் - ஒரு பிச்சை எடுக்கும் குழந்தையின் புகைப்படத்தையும் கூட ஒப்பிட்டுப் போட முடியும். அதுவும் மீமிஸ் பார்க்கும் போது சரி தானே என்றும் கூட தோன்றும். ஆனால் நடைமுறை சிக்கல் வேறு .

எனவே ஒப்பிடும் போது துறை விட்டு வேறு துறையில் ஒப்பிடுவதும் தவறு - ஒரு திட்டத்தை அவமானம் செய்ய வேறு திட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதும் தவறு..

இந்தச் சிலை கட்ட 4 வருடங்கள் 3500 வேலையாட்கள் வருமானம், தவிர்த்து 22500Mton சிமிண்ட் பயன்பாடு கட்டாயம் சிமிண்ட் உற்பத்தியாளர்களுக்கு வருமானம் இப்படி ஸ்டீல் ஆரம்பித்து அனைத்தையும் அதன் பணியாளர்கள் உழைப்பையும் கொஞ்சம் சேர்த்துச் சிந்திக்கவும்... தவிர இதை அப்படியே விவசாயத்துடன் ஒப்பிடுவது முறையாகாது.. அப்படி ஒப்பிட வேண்டும் என்றால் எதையும் அவமானப் படுத்த முடியும்.

"பாருங்கள் ACல போறானுக... இங்கே அவன் அவன் 2மணி வெயிலில் விவசாயம் பார்த்து கஷ்டபடுறான் இவனுக்கு AC கார் , AC ரயில்..." இப்படியா பேசுவது??? இதை முதலில் நிறுத்துங்கள்.. மீண்டும் கூறுகிறேன் விவசாயத்தை அந்த துறையுடன் மட்டுமே ஒப்பிட வேண்டும் முடியும் அதுவே சரி.
--------------------------------------------------------------------------------

வேற்றுமை விதைப்பதும் - பிரிவினை பேசுவதும் எளிது.. ஒற்றுமை வேண்டுவதுவே கடினம்...

ஒற்றுமையே எமது நாட்டின் பலம் , ஒற்றுமையே எமது நாட்டின் அடையாளம்.. அதுவே statueofunity.

#Nnsindia
#Nnsdharma
#Nnssastha
-மாரிதாஸ்

படித்துவிட்டு பகிருங்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...