Saturday, 17 November 2018

நீதிபதி உத்தரவைத் திரும்பப் பெற்றதோடு, சும்மா ஒரு வழிகாட்டுதலுக்குதான் அந்த உத்தரவைப் போட்டேன்

பீகார் மாநிலம், கிஷன் கஞ்ச் மாவட்ட நீதிமன்றம் ஒரு உத்தரவைப் போட்டது! மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்! அவ்வளவுதான்!

நீதிபதி உத்தரவைத் திரும்பப் பெற்றதோடு, சும்மா ஒரு வழிகாட்டுதலுக்குதான் அந்த உத்தரவைப் போட்டேன்

என்று கூறி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்!!

அவர், அப்படி என்ன உத்தரவு போட்டார் என்று கேட்கிறீர்களா? 'நீதிமன்றத்திற்குள் வருபவர்கள் முறையான ஆடை அணிந்துவர வேண்டும், லுங்கி அணிந்து வரக்கூடாது' என்று உத்தரவுப் போட்டிருந்தார். அந்த மாவட்டத்திலோ, 78% பேர் முஸ்லீம்கள். லுங்கி அணிவது எங்கள் பாரம்பரியம், அதில் நீதிபதி தலையிடக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி ஒரு சமூக ஆர்வலரோ, போராளியோ, செக்குலர்வாதியோ, அரசியல்-பத்திரிக்கை வியாபாரிகளோ, ஓசிச்சோற்று பேர்வழிகளோ, விவாதம், கண்டனம், அறிக்கை, போராட்டம் என்று எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இந்துக்கள் ஏதேனும் செய்தால்தான் செய்தி, பரபரப்பு, மண்ணாங்கட்டி எல்லாம்!!

நாளையே, ஒருவர் மேல் சட்டை அணியாமல் நீதிமன்றத்திற்கு வந்தால், நீதிபதி அவரை கண்டிக்க முடியுமா? அப்படி செய்தால், 'போய்யா உன் வேலையை பார்த்துட்டு! சட்டை போடாத பாரம்பர்யம் எங்களது!" என்று பதிலளித்தால் செக்குலர் வியாதிகள் கண்டிக்காமல் சும்மா இருப்பார்களா?

ஒரு மாவட்டத்தில் 78% இருக்கும் ஒரு சமூகம், நீதிமன்ற உத்தரவை திரும்பப்பெற வைக்க முடியும் என்றால், நாட்டில் 82% இருக்கும் நாம் ஏன் நமக்கு எதிரான தீர்ப்புகளை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுந்தால், உன் உணவிலும் உப்பிருக்கிறது என்றுதான் பொருள்!!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...