Saturday, 17 November 2018

ஒரு மகத்தான யோசனை ஒன்று சிலை வடிவம் பெற்று நிற்கிறது. ஜாதி, மதம், உள்ளூர் கலவரங்கள் என்று 562 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை இணைத்தார் வல்லபாய் பட்டேல்.

எழுதியவர் மாயங்க் காந்தி, முன்னாள் ஆம் ஆத்மி உறுப்பினர் மற்றும் அபிஜித் கொத்வாலேயின் பெற்றோர்.

1. ஒரு மகத்தான யோசனை ஒன்று சிலை வடிவம் பெற்று நிற்கிறது.  ஜாதி, மதம், உள்ளூர் கலவரங்கள் என்று 562 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை இணைத்தார் வல்லபாய் பட்டேல்.  அவருக்கு மரியாதை செய்யப்படவேண்டும்தான். 

2. ஆண்டுக்கு மத்திய பட்ஜெட் 21.47 லட்சம் கோடி ரூபாய்.  குஜராத்தின் ஆண்டு பட்ஜெட் 1,81,945 லட்சம் கோடி ருபாய்.  அந்த சிலை குறைந்தது நூறாண்டுகள் வரும்.  பலருக்கு உத்வேகம் தரும்.  இதனால் குஜராத் செலவழிக்கப்போவது தன்னுடைய பட்ஜெட்டிலிருந்து 0.45% மட்டுமே. 

3. நர்மதையை சுற்றி உள்ள கிராமங்கள்தான் குஜாரத்திலேயே ஏழ்மையானவை.  நிதி ஆயோக் இதை உறுதி செய்கிறது.  Poorest districts in Gujarat with Narmada (72.45%), Dahod (71.75%), Dang(70.14%), Panchmahal (50.72%).  இவர்களதான் மிக மோசமான நிலையில் உள்ளார்கள்.  காடும், நிலத்தின் தன்மையும் விவசாயத்துக்கு உகந்ததாக இல்லை. 

4. ஏற்கனவே இந்த ஆதிவாசி பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர்கள் நிலையை உயர்த்த குஜராத் அரசு 13,278 கோடி ஒதுக்கியுள்ளது.  ஏதாவது சுற்றுலா தலமாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தார்கள்.  இது போன்ற மோசமான விளைச்சல் தரக்கூடிய பகுதிகளில் விளையும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி  ஆண்டுக்கு 850 கோடி செலவில் சுமார் 50 லட்சம் பேர் பயனடைய வைக்க போகிறார்கள். 

5. மொத்தமாக ஒரு சிலை, விவசாய ஆராய்ச்சி நிலையம், நீர் மேலாண்மை விழிப்புணர்வு, ஆதிவாசி பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம், ஒரு அருங்காட்சியகம், ஆடியோ வீடியோ காலரி, வந்து செல்லும் மக்களுக்கான சந்திக்கும் பகுதி, மூன்று நட்சத்திர ஹோட்டல்கள், கிராமத்திலேயே தாங்கும் டென்ட் கொட்டாய் இடங்கள், உயர் தர சாலைகள் என்று எல்லாம் ஏற்படுத்திவிட்டார்கள். 

6. சுதந்திர தேவி சிலை போல, பிரேசில் இயேசு சிலை போல, விவேகானந்தர் பாறை போல இதுவும் பெரும் சுற்றுலா தலமாகி நிறைய வேலை வாய்ப்பை பெருகும்.  வறுமையை போக்கும்.  சிலைக்கு வெறும் பராமரிப்பு செலவுதான்.  மற்றபடி எல்லாமே லாபம்தான். 

7  காங்கிரசுக்கு இந்த சிலையால் இருக்கும் ஒரே பிரச்சனை பட்டேல் காங்கிரஸ்காரர் என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது.  இவரை பாஜக ஏன் கொண்டாடுகிறது என்பதை கூறாமலும் இருக்க முடியாது. 

8  அக்கம்பக்கத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, கல்லூரி என்று எதுவுமே இல்லை.  இனி எல்லாம் வரும்.

--  மாயங்க் காந்தி

9  இது ஒரு மகத்தான சிலை.  183 மீட்டர் என்றால் 52 மாடிகள் கொண்ட கட்டிட உயரம்.  விளக்கும்போது எப்படி கட்டினார்கள், பட்டேலின் வரலாறு என்ன என்று விளக்கிக்கொண்டே போகிறார்கள்.  ஏதோ வெளிநாட்டு சுற்றுலா தலம் போல இருக்கிறது.  முதலில் பார்த்தவுடன் திக்கென்று இருக்கிறது.  இவ்வளவு பெரியதா என்று.

10  டிக்கெட் விலை 500.  இன்னும் 30 ருபாய் தந்தால் AC பேருந்து வசதி உண்டு.  பட்டேலுக்கு கீழே அருங்காட்சியகம், தரையில் நகரும் ட்ராவெலெடர்கள், எஸ்கலேட்டர், மின்தூக்கி எல்லாம் பட்டேலின் சிலைக்குள் சுமார் 45 மாடி உயரம்வரை கொண்டு செல்லும்.    அங்கிருந்து பார்த்தால் சர்தார் சரோவர் அணையே எறும்பு போல தெரிகிறது.

11 எல்லாம் படு சுத்தமாக இருக்கிறது.  கழிப்பறைகள் பளிங்காக இருக்கிறது.  பிரம்மாண்டமான உணவகங்கள் உள்ளன. 

12  மேட்டரே இனிதான்.  வேலை பார்க்கும் எல்லோருமே பழங்குடி இனத்தவர்கள்.  எல்லா தொழில்களும் இந்த பழங்குடி இனத்தவர்கள்தான் நடத்தவேண்டும்.  இருக்கிற வசதிகள் முடிந்துவிடவில்லை.  இன்னும் வருகின்றன.  சீருடை அணிந்த பழங்குடியின ஆண்களும் பெண்களும் உலாவருகிறார்கள்.  இவர்கள்தான் வழிகாட்டி. குஜராத்தி மட்டும் தெரிந்திருந்தால் 25000 சம்பளம்.  ஹிந்தியும் கற்றுக்கொண்டால் 35000.  ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி மூன்றும் தெரிந்திருந்தால் 45000.  இனி அவர்கள் அரசாங்க ஊழியர்கள்.  இவர்களுக்கு சரியாக வழிகாட்ட இவர்களுக்கு சில மேலதிகாரிகள் இருக்கிறார்கள், இன்னும் வேலை கேட்டு வருவோருக்கு பயிற்சி தந்து சேர்த்துக்கொள்ள. 

13  'இதுவரை எங்களுக்கு வேலையே பெரிதாக இருந்ததில்லை.  சும்மா அப்படி உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்குவோம்.  இப்போது வேலை கிடைத்துள்ளது, பயிற்சி தரப்படுகிறது.  இனி எங்கள் பார்வையும், எங்கள் மீதுள்ள பார்வையும் முற்றிலுமாக மாறுபடும்' என்று வாயார, மனதார புகழ்கிறார்கள்.  பட்டேலை புகழ சொன்னால், மோடியை புகழ்கிறார்கள்.  அவர்களது வாகன ஓட்டுநர் யாருக்கோ சொல்கிறாராம். உடனடியாக இங்கு வேலைக்கு விண்ணப்பம் செய்.  தாமதிக்காதே என்று. 

14  எடுத்துக்கொள்ளப்பட்ட நிலத்துக்கு ஈடாக வேறு நிலம் தரப்பட்டுள்ளது.  மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட்டு, வீடு கட்டி தரப்பட்டுள்ளது.  இரவில் லேசர் ஷோக்கள் இருக்கின்றன. 

15  செல்லவேண்டும் என்றால் இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யலாம்.  வரிசையில் நிற்கவேண்டியதில்லை.  குறைந்த காலத்தில் மாபெரும் சுற்றுலா தலம் உருவாக்கப்பட்டு பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது. 

கட்டுரை தந்தது CAP GEMINI இயக்குனர் அபிஜித் கொத்வாலேயின் பெற்றோர்.

நன்றி ; jai hind

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...