கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா 31-அக்-2018 19:56
எதற்கு சிலை?
பிரெஞ்சு புரட்சியில் ஐஃபில் கோபுரம் பிறந்தபோது கேட்டாயா இந்த கேள்வியை? புரட்சிதானே ஏற்பட்டது? தட்டுக்கு சோறா வந்தது என்றாயா? வயிற்றுக்கு சோறு வராதபோது, இயந்திரங்கள் உருளாதபோது, பயிர் விளையாதபோது கோபுரம் எதற்கு என்றாயா? இறுமாப்பு கொண்டு, தேசத்தின் மானம் பெரிதென காட்டிய உழைப்பாளன் கட்டிய போது ஃபிரெஞ்சுக்காரனுக்கு வந்த பெருமிதம் உனக்கெங்கே வரப்போகிறது அடிமையே. பல்லுயிர் ஈந்து சுதந்திர காற்றை சுவாசித்தோமென்று சுதந்திர தேவி சிலை கையால் தீவட்டி கொண்டு வானை சுட்டானே அமெரிக்கா, அன்று கேட்டாயா சுதந்திர தேவிக்கு சிலை எதற்கு என்று? அந்நிய சர்ச்சுகளை இடித்து தன்னாட்டு சர்ச்சுகளை இடித்த இடத்திலேயே கட்டினானே ஸ்பெயின், அவனிடம் கேட்டாயா சர்ச்சை இடித்து சர்ச்சை கட்டி ஏன் சர்ச்சையென்று? அடிமைப்படுத்திய ஐந்தாம் ஜார்ஜ மன்னனையும் ராணியையும் வரவேற்க இந்தியாவின் வாசலென்று மும்பையில் கட்டினானே, அன்று கேட்டாயா கடலுக்கு ஏதடா வாசலென்று? சிவாலயம் பெயர்த்து குதுப் மினார் கட்டியதை கண்டு பொங்காத நீ, மைத்துனன் மனைவி கவர்ந்து, பிணம் புதைத்து சிவஸ்தலத்தை அவஸ்தலமாக மாற்றியும் மதியிழந்து தாஜ்மஹாலென கொண்டாடும் நீ கேட்கிறாய் தேசபக்தனுக்கு சிலை எதற்கென்று. முகாலனை விரட்டிய பாப்பா ராவலின் ஜயஸ்தம்பம் எதற்கென தெரியாத நீ, சுமத்திரா தீவு கண்ட கங்கைகொண்டானின் ஜலஸ்தம்பமான ஜயஸ்தம்பம் எதற்கென தெரியாத நீ, தேசப்பிரிவினை தெரியாத நீ, அந்நியனின் சூது தெரியாத நீ, இடித்த கோவில்களின் கணக்கு தெரியாத நீ, இறந்த மக்களின் எண்ணிக்கை தெரியாத நீ, மதம் மாறியவர்கள் கணக்கு தெரியாத நீ, மதம் மாற்றுவோரின் எண்ணம் தெரியாத நீ, சோமநாதனுக்காக உயிர் தந்தவர்கள் தெரியாத நீ, வரலாறு தெரியாத நீ சோமாநாதர் ஆலயத்தை மீட்டு, பாகிஸ்தானை வென்று, ஹைதராபாத்தை இணைத்து, பலநூறாக இருந்த சமஸ்தானத்தை இணைத்து ஒரு தேசமாக்கி, எந்த வரலாற்று நாயகனும் செய்யாததை செய்ததை செய்தவனுக்கு சிலை எதற்கென கேட்கிறாய். தேசத்தை இணைத்தவனுக்கு சிலை வைக்காமல், தாயென்றும் பாராமல் தேசத்தை பிளந்தவனுக்கா சிலை கேட்பாய்? இது சிலையல்ல, சாமி. கும்பிட்டுவிட்டு போ. இந்த தேசம் நிமிர்ந்தது என்று கூற, மாவீரனை தலைதூக்கி பார்க்க, கர்ம பூமி காத்தவனை கண்ணார காண, வரலாற்று நாயகர்களை நினைவு கூர எங்கள் வரலாற்றில் இந்நாளை பதிக்க நாங்கள் கண்டோம் ஒரு சிலை. வைக்கப்படுவது பாரதத்தாயின் தவப்புதல்வனுக்கு. வைப்பது பாரதத்தாயின் தவப்புதல்வன்
Dinamalar
No comments:
Post a Comment