Saturday, 17 November 2018

ஒட்டுமொத்த இந்து மக்களின் வெறுப்பிற்கு ஆளான திருப்தி தேசாயே .

பெண்ணியவாதிகள் என்ற போர்வையில்
சபரிமலை ஐயப்பனின் ஆகம விதிகளை மீறி  கோயிலுக்குள் நுழைந்தே தீருவேன் என்று கச்சை கட்டி

ஒட்டுமொத்த இந்து மக்களின் வெறுப்பிற்கு ஆளான
திருப்தி தேசாயே .

உன் போராட்டத்தை
பெண்கள் பாதித்து வரும் எத்தனையோ பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்க
அதில் நீ  கவனமெடுத்து
போராட்டம்  நடத்து.

அது பெண்ணியத்திற்கு‌ ஒரு சாதனை .

அதை விட்டு விட்டு காலங்காலமாய்
கடைபிடித்து வரும் சபரிமலை ஐயப்பனின் புனிதத்தை
கெடுக்கும் வகையில் நீ போர்க்கொடி தூக்குவது
உனக்கே அசிங்கமாக
தெரியவில்லையா ???

பெண் என்பவள் மதிக்கப்படுதலும்  மதித்தலையும் கடைபிடிக்க
வேண்டும்.

பெரும்பான்மை இந்துப் பெண்களே
சபரிமலை ஐயனின் வழிபாட்டு முறைகளை மதிக்கும் போது
உன்னைப் போன்ற பெண்ணியவாதிகள்  வரிந்து
கட்டிக் கொண்டு
பக்தியின் வழிபாட்டு முறைகளை
சம உரிமை , புரட்சி என்ற பெயரில்
களங்கப்படுத்தி  எதை சாதிக்கப்
போகிறீர்கள் ???

ஐயனின் மாண்பை கெடுத்தே
தீருவேன் என்று
தீர்ப்பை மையமாக வைத்து
உன்னைப் போன்ற பெண்கள்
சபரிமலைக்கு வருவது
பெண்ணியம் அல்ல !
திமிர்த்தனத்தின் உச்சகட்டத்தின்
அகங்காரம் இது .
அதிலும் நீ கன்வேட்டர்டு கிறிஸ்டியன்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்
சிறுபான்மை  மதங்களுக்கு ஆதரவாக  நின்று
இந்துமதத்தின் ஆகம கோட்பாடுகளை வேரோடு அறுத்தெரிய துணை நின்று
தரும்  தீர்ப்புகளை இந்தியாவின்
83 பர்செண்ட் இந்துமத மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் வருகிறார்கள்

மதசார்பற்ற நாட்டில்
இந்துமதத்தின்  பண்பாடுகளை
தகர்த்தெறியவும் ,
இந்துமதக் கோயில்களின்
புனிதங்களை  அசிங்கப்படுத்தவும்
வழக்கு போடும்  மாற்றுமத
வெறியர்களுக்கு துணை நின்று ,
நியாயங்களை மறந்து
தீர்ப்பு தருவது ஒட்டு மொத்த இந்துக்களுக்கு
சட்டத்தின் மீதும் , நீதிகளின் மீதும்
அவநம்பிக்கையின்மையையும்
வெறுப்பையும் , வேதனைகளையும்
தந்துள்ளது என்பதை
சமீபத்திய  தீர்ப்புகள்  உணர்த்துகின்றன.

நவ்சத் அகமத் கான் வழக்கிற்கு
செவிசாய்த்து
சபரிமலை தீர்ப்பு  வெளிவருகிறது
இந்துக்களுக்கு எதிராக .

இதையே காரணங்காட்டி
தொழுகை நடத்த
பெண்களை மசூதிக்குள்ளும்
அனுமதிக்க வேண்டும்
என்று இந்துமத ஆதரவாளர்கள்
போட்ட வழக்கு
உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது .

இதன்  என்ன  ஓரவஞ்சனை ?

பிரதமரை கொல்ல திட்டமிட்ட  அர்பன் நக்சலைட்டுகளை 
காவல் துறையினர் ஆதாரத்தோடு கைது செய்தால்
அந்த நக்லைட்டுகளை சிறையில் அடைக்காமல் சொகுசு  அறைகளில் தங்கவைத்து  விசாரிக்க  வேண்டும்
என  உத்திரவிட்டு
ஆதாரங்கள்  பொய்யானதாக‌  இருந்தால்
கைது  செய்த  காவல்துறையினர்   கடுமையாக   தண்டிக்கப்படுவார்கள் என்று  அநீதியரசர்கள்  பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கின்றனர்.

நாட்டை காக்கும் பிரதமரின் உயிர்
காக்கும் பாதுகாப்பின்
காவல்துறையை நீதிமன்றமே
மிரட்டுகிறது .
கண்டிக்கிறது .

சபாஷ் நல்ல நீதி இது .
 
இதனால்
நீதிமன்றமே  தீவிரவாதிகளுக்கு  ஆதரவாக  குரல் கொடுக்கும் அநீதி
இந்தியாவில் தான் அரங்கேறி
நீதியே வெட்கிப்  போய்
தலை குனிந்து  நிற்கிறது .

கங்கை நதியை தூய்மை செய்வதாக
சொல்லிக் கொண்டு  25  வருடங்களாக  காங்கிரசு  அரசு  எதையுமே செய்யாமல்
பல ஆயிரம் கோடிகளை  சுருட்டியது.

கங்கை  நதி  தூய்மை  திட்டத்திற்கு
மோடி ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் வரைவு திட்டங்கள்
தீட்டப்பட்டது .

எங்கே மோடி இதை நிறைவேற்றி
விடுவாரோ என்று  பயந்த  காங்கிரசு
அவர்களின்  தயவால்  நியமித்த  நீதியரசர்கள்  மூலம் மறைமுக அழுத்தம்  தந்த காரணமாக
இப்படியே 25 வருடங்களாக  மத்திய அரசு கங்கை நதியை  தூய்மை
செய்வதாக  சொல்லி  இதுவரை எதையும் செய்யவில்லை என்று ஆண்ட  காங்கிரசை வன்மையாக கண்டிக்காமல் ,
ஆட்சிக்கு வந்த உடனே கங்கை நதி தூய்மைக்கான வரைவு திட்டங்களை ஏற்படுத்திய
மோடி அரசை 
நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை ,  
கங்கை நதி தூய்மை திட்டத்தை  ஷீல்  வைத்த கவரில் போட்டு மாலை ஐந்து மணிக்குள் நீதிமன்றத்தில்  ஒப்படைக்க வேண்டும் .
அதை தேசிய பசுமை தீர்ப்பாயம்
பார்த்துக் கொள்ளும் என்று மோடி அரசின் பணிகளை தடுத்து உத்திரவிட்டார்கள் .

செயல்படாத ஊழல் காங்கிரஸ் அரசை  கண்டிக்காத உச்சநீதிமன்றம்
செயல்பட்ட மோடி அரசை தலையில் தட்டி கண்டனங்களை தெரிவித்தது எந்த  வகையில் நியாயம் ???

சபரிமலை தீர்ப்பில்
ஜனவரி  22 ற்கு வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்
கார்த்திகை விரதம்
மகரஜோதிக்கு
சபரிமலையில் பக்தர்கள் நிம்மதியின்றி போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறதா ???
பத்து வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்கு உட்பட்ட  பெண்களை அனுமதிக்கக் கூடாதென என்று தானே சீராய்வு மனு போடப்பட்டது .

அதன் சாராம்சத்தை உணராத உச்சநீதி மன்றம் வழக்கை கார்த்திகை மகரஜோதிக்கு  பிறகு
விசாரிப்பதாக‌ ஏன் தள்ளி வைக்கிறது ?

அதுவரை பெண்கள் நுழைய
தடை விதித்து வழக்கை தள்ளி வைத்திருக்கலாமே .

இந்தியாவின் பெருன்பான்மை இந்துக்களின் மத உணர்வுகளை உச்ச நீதிமன்றமே புறக்கணித்து வேடிக்கை பார்க்கிறதா ???

இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்காத நீதியில்லாத மன்றத்தை மக்கள் எப்படி மதிப்பார்கள் ????

இது தான் செக்குலர் நாடா ?

இந்துக்களுக்கு மட்டும் நீதி மறுக்கப்படுவது தான்
மதசார்பற்ற நாட்டின் நியாயங்களா ??

அதற்கு நீதிமன்றமே துணை நிற்பதா???

நடு இரவில் உப்பு சப்பில்லாத
ஒரு வழக்கிற்கு
காங்கிரசிற்கு  மட்டும் தான் உச்சநீதிமன்றம்
கதவுகளை திறக்குமா ???

போபர்ஸ் ஊழலை மீண்டும் விசாரிக்க போட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

கோத்ரா சம்பவத்தில்
குற்றமற்றவர் மோடி என்ற  தீர்ப்பு வந்த பிறகும் ஜாவ்சிரியா என்ற பெண்மூலம்‌
இந்த கைலாலாத காங்கிரஸ் மோடியை தேர்தலில் நிற்க விடக்கூடாது என்று குள்ளநரி வேலை செய்து உச்சநீதி மன்றத்தில் வழக்கை
போட வைத்துள்ளது .

அதுவும் வரும் 19 தேதியே அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு
விசாரணைக்கு வருகிறது .

இதை விசாரிக்க ஒத்துக்
கொண்ட நீதிமன்றம்
போபர்ஸ் ஊழலை  விசாரிக்கும் மனுவை மட்டும் ஏன் தள்ளுபடி செய்கிறது ??

கார்த்திக்  சிதம்பரம்
வெளிநாடுகளில் சொத்து சேர்த்த வழக்கையும் தள்ளுபடி செய்கிறது.

காவிகள் நீதிமன்றம்
(Saffron Court )
என்று அலறிய கபோதிகள் அனைவரும்
இப்போது வாயை எங்கே அடைத்து வைத்து இருக்கிறார்கள் ???

காங்கிரஸ் கோர்ட் என்று
இப்போது  காவிகள்‌ சொன்னால்
ஏற்றுக் கொள்வார்களா அந்தக் எட்டப்பர்கள் ..

பிரதமர் மோடியை எப்படியாவது
தேர்தலில் நிற்க விடாமல் செய்ய கிறுத்துவக் காங்கிரஸ்
தலைக் கீழாய் சட்டத்தின் துணையோடு
காய் நகர்த்தி விளையாடுகிறது.

அதற்கு தகுந்தாற்போல்
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் காங்கிரசிற்கே சாதகமாய் இருப்பதை பார்த்தால்
நீதித்துறையில்
காங்கிரசின் ஆதிக்கம் எந்தளவு ஊடுருவி உள்ளது என்பதை புத்திசாலி மக்கள் புரிந்து கொள்வார்கள் .

நீதித்துறையே அநீதியை விதைக்கிறது .
இதை தட்டிக் கேட்டால்
கோர்ட் அவமதிப்பு
( Condempt of court )
என்ற பேரில் வழக்கு பாய்கிறது.

தர்மங்கள் இருக்கிறதா ??
நீதி கிடைக்குமா  ???
என்று ஒவ்வொரு மனசாட்சி உள்ள இந்துக்களின்
தேசப்பற்றாளர்களின்
மனதில் இந்தக் கேள்விகள் பதிலை தேடி நிற்கிறது .
நீதிக்காக  போராடுகிறது .

மனுநீதி சோழன் வாழ்ந்த  இந்த புண்ணிய பூமியில்
மனுதர்மத்தை நீதிமன்றங்கள்
மறந்து விட்டதா ??

தர்மத்தின்  வேள்விகளுக்கு
இது சத்திய சோதனைகளா ??

கிறுத்துவக்  காங்கிரசின்
இத்தனை சூழ்ச்சிகளையும்
இந்தியாவின் மனசாட்சி உள்ள
இந்து மக்கள்  புரிந்து  கொண்டு
நம்மை காப்பாற்ற மோடியை தவிர
யாருக்கும் தகுதியோ துணிச்சலோ இல்லை என்பதை உணர்ந்து
அந்த நல்லவனை  மாபெரும் வெற்றியில் மீண்டும் நாடாள வைத்து
துணை நின்று இந்தியாவின்
இறையாண்மையை காப்பாற்றுங்கள் .

ஜெய்ஹிந்த் !

விஜயலஷ்மி காளிதாஸ் .

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...