மோடிக்கு வாக்களிக்காதீர்கள்
============================
கீழ்கண்ட சமாச்சாரங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் மோடிக்கு 2019 இல் வாக்களிக்காதீர்கள்.
ஊழல் செய்வது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. இந்த நாட்டில் யார் தான் செய்யவில்லை?
அவசரத்திற்கு செய்து கொடுக்கறாங்க. பிரியப்பட்டு அவங்களும் கொடுக்கறாங்க. இதை போய் லஞ்சம் கிஞ்சம்னு..
அவங்க கிட்ட காசு இருக்கு மெடிக்கல் சீட்டு வாங்குறாங்க. உங்க கிட்ட இருந்தால் நீங்களும் வாங்குங்களேன். நீட்டு கீட்டுனு , தரம் கொண்டு வர்றாங்களாம்.. தரம்
எங்கே சார் கறுப்பு பணம் இல்லை. என் வீடு விலையெல்லாம் இறங்கிப்போச்சு சார். பதினைஞ்சு லட்சம் அக்கவுண்ட்ல போடறேன்னு சொன்னாரே போட்டாரா சார்? அதை கேட்க மாட்டிங்கறீங்களே!!
நாடு முழுவதும் வர்த்தகத்தை எளிமையாக்க ஒரே வரியாம்.. டோல் கேட்ல லாரியை நாள் கணக்கில் மடக்கி துட்டு பார்த்துக்கிட்டுருப்போம். லாரியெல்லாம் நேரா நிக்காம போகுது..
பிசினெஸ் பண்ணினா வரி கட்டணுமாம். அதுக்கு பில் கொடுக்கணுமாம். இவ்ளோ டூப்ளிகேட் பில் வாங்கி வச்சிருக்கேனே. அதை வச்சுக்கிட்டு என்ன செய்ய? நாக்கை வழிக்கறதா? அயோக்கியத்தனமா இல்லையா?
சீனாக்காரனும் பாகிஸ்தான் காரனும் ஊடுருவினா நமக்கென்ன சார்?தமிழ்நாட்டிலே என்னிக்காவது போர் வந்துருக்குங்களா?
ட்ரம்ப் பாராட்டினா போதுமா சார், உலக வங்கி பாராட்டினா நமக்கென்ன சார் லாபம்?
புல்லெட் ட்ரைன் விட்டால் வளர்ச்சியா. மூவாயிரம் கோடி ரூபாய்க்கு சிலையாம். யார் சார் பட்டேலு? பேரறிஞர் அண்ணாவை விடவா நெம்ப பட்ச்சவரு?
நம்ம வரி பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கக்கூஸ் கட்டி கொடுக்கணும்னு சொல்றார் சார். கட்டினா கூட அதிலெல்லாம் அவங்களுக்கு போக தெரியாது சார். வெளியில பேண்டு பழகின பயக சார் இவிங்க..
ஸ்வச் பாரத்தாம். சுத்தம் கித்தம்னு. இதெல்லாம் நம்ம நாட்டுக்கு சரிப்பட்டு வருமா!! சும்மா பிலிம் காட்டுறாங்க சார்.
ஆதார் எண்ணை இணைப்பாங்களாம்.. அடித்தட்டு மக்களுக்கு வங்கி கணக்கு கோடிக்கணக்கில் தொடங்குவாங்களாம். எல்லா மானியமும் அவங்களுக்கு நேரா போயிடுமாம். நடுவுல நாங்க என்ன நாக்கை வழிக்கறதுக்கா இருக்கோம்? அவ்வளவு கேனையனா நாங்க?
மதமாற்றம் செய்யக்கூடாதாம். என் ஜி ஓ வழியா வெளிநாட்டுலேந்து இதற்காக பணம் அனுப்ப கூடாதாம். பிறகு என்னங்க மதச்சார்பின்மை?
நாடுன்னு இருந்தால் மதக்கலவரங்கள் இருக்கவேண்டாமா? ஜாதிபூசல்கள் இருக்கவேண்டாமா?. யாரையும் யாரும் தாஜா பண்ணகூடாதாம். அவரவர் மதம் அவரவருக்காம். அறுபது வருஷமா குல்லா போட்டு கஞ்சி குடிச்சு சிறுபான்மையினரை ஏழையாக்கி வளராமல் பார்த்து கொண்டிருந்தோம். திடீர்னு இப்ப அவங்க முன்னுக்கு வரணும்னு பேசினால் இது என்ன நியாயம்?
அரசாங்க ஊழியரை பத்து மணிக்கு ஆபீஸ் வர சொல்றான்யா.. கை ரேகையை வச்சு அட்டெண்டன்ஸ் எடுக்கறான்யா? வேலை செய்ய சொல்றான்யா ... இதைவிட ஒரு அரசாங்க ஊழியரை அவமானப்படுத்த முடியுமா சொல்லு?. ஜிந்தா பாத் ஜிந்தா பாத் தொழிற்சங்க ஒற்றுமை ஜிந்தாபாத்!!
என்னது, நாளைய தலைமுறை நல்லா இருக்கணுமா? நம்ம செத்து போன பிறகு நமக்கு என்னய்யா தெரியப்போகுது?. நாளையாம், தலைமுறையினராம்!!. லூசாயா நீ?
கிராமங்களுக்கு 100 சதவிகித மின் வசதியாம்.. ரொம்ப முக்கியம் பாரு. அதனாலதான்யா நமக்கு இங்கே பவர் கட் ஆகுது.
அறுபது வருஷமா ஓட்டிக்கிட்டுருந்த மாதிரி காவிரி பிரச்னையை வச்சு பிழைப்பை நடத்தலாம்னா பொசுக்குன்னு வாரியம் அமைச்சு கெஜட்ல பதிவு பண்ண்ணிட்டாருயா ..அதனால கர்நாடகாகாரன் தண்ணி விட்டுருவானா?
ஏழைக்கெல்லாம் அஞ்சு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடாம்!!. அவனுக்கு நோய் வந்தால் சாகட்டும், அவன் தலையெழுத்து.. எல்லாம் அம்பானியும் அதானியும் கார்ப்பரேட்காரனும் சம்பாதிக்க போட்ட திட்டம் சார்..
பருப்பு விலையும் எண்ணை விலையும் மற்ற பொருட்கள் விலையெல்லாம் குறைஞ்சிருக்காம். ஒரு பீர் பாட்டில் தொன்னூறு ரூபாய் விக்குதுய்யா?
இலவசமா வந்த டி வி ல வாத்யார் படத்தை பாத்தோமா, மிக்சி , கிரைண்டர் வாங்கினோமா, டாஸ்மாக்ல ஒரு கட்டிங் போட்டு மப்புல கவுந்தடிச்சு படுத்தமா, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்துல சும்மா கையெழுத்து போட்டு சம்பாரிச்சோமா, கட்டப்பஞ்சாயத்து பண்ணி லைப்ல செட்டில் ஆனோமான்னு இல்லாம படிக்கணுமாம், வளர்ச்சியாம், மேக் இன் இந்தியாவாம், டிஜிட்டல் புரட்சி செய்யணுமாம்.யோவ் உழைக்கணுமாம்யா. இன்னா பேச்சு இது. இத்த தட்டி கேட்டா நாம் அர்பன் நக்சலாம்!!!
வேலை வாய்ப்பாம், டிபன்ஸ் காரிடாராம்!! கறுப்பு பலூன் விட்டோம்ல!! ஆப்பு வச்சோம்ல வட இந்தியாவுல!!.
எங்க சூலி புள்ள வரும் பாரு. மதுர பக்கம் வாடி, தாடி வச்ச மோடி....
No comments:
Post a Comment