#மத்திய_கப்பல்_துறையின் #சரித்திர_சாதனை…
By Pranesh Rangan...
#திருப்பூர் #ஏற்றுமதியாளர்களுக்கு வரப்பிரசாதம்...
#தூத்துக்குடி #வ_உ_சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள், சிறிய கப்பல்கள் மூலம் முதலில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பெரிய சரக்கு கப்பல்கள் மூலமாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் ஏற்றுமதியாளர்களுக்குப் பணம் மற்றும் அதிக கால விரயம் ஏற்பட்டது. இந்த துறைமுகத்துக்கு வரும் இறக்குமதி சரக்குகளும் இதே வழியில் தூத்துக்குடிக்கு வந்தன. இதைத் தவிர்க்கும் வகையில், பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் துறைமுகத்தின் மிதவை ஆழம், 13.2 மீட்டரிலிருந்து, 14 மீட்டராக ஆழப்படுத்தப்பட்டது. இதன்பின், கடந்த அக்டோபர் மாதம் பெரிய நிலக்கரி கப்பல் கையாளப்பட்டது.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி, தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வர்த்தக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் முக்கியத்துவத்தை பலரும் அப்போது அறியவில்லை.
தைவானிய கப்பல் நிறுவனமான வான் ஹை லைன் லிமிடெட் நிறுவனத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. அந்த அறிவிப்பு தொடர்பாக உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டனர். துறைமுக அதிகாரிகளும் ஒப்புக்கொண்டு, டிசம்பர் 12 ஆம் தேதி வான் ஹை லைன் லிமிடெட் நிறுவனத்தினர் துறைமுகத்திற்கு வந்தனர். சாதாரணமாக ஒரு பெரிய கப்பல், 600 கண்டெய்னர்களை ஏற்றி சென்றால் நல்ல லாபம் கிடைக்கும். சில சமயங்களில் 400 முதல் 500 கண்டெய்னர்களை ஏற்றி செல்வதன் மூலமும் லாபம் கிடைக்கும். ஆனால், டிசம்பர் 12 ஆம் தேதி, வான் ஹை லைன் லிமிடெட் நிறுவனத்தினர் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திருந்த போது, தூத்துக்குடியில் இருந்து மேற்கு அமெரிக்கா செல்ல 974 கன்டெய்னர்கள் தயார் நிலையில் இருந்தன. இதை பார்த்து பிரமித்து போன வான் ஹை லைன் லிமிடெட் நிறுவனத்தினர், வாரம் ஒரு முறை மேற்கு அமெரிக்காவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் அனுப்புவதாக கப்பல் துறை அமைச்சகத்திடம் தெரிவித்தனர். இதை அமல்படுத்துவதன் மூலம் கிழக்கு பகுதி நாடுகளில் இருந்து அமெரிக்கா வரை உள்ள கப்பல் போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
நேரடி முக்கிய கப்பல் போக்குவரத்தின் மூலம் இப்பகுதியில்,குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்றுமதியாளர்களுக்கு போக்குவரத்து காலம் 11 நாட்கள் மிச்சமாகும். இதுவரை, ஒரு இந்திய துறைமுகத்திலிருந்து மேற்கத்திய நாட்டின் துறைமுகத்திற்குச் செல்ல, சுமார் 45 நாட்கள் ஆகும். தைவானிய பிரதான கப்பல் அறிமுகத்தின் மூலம் அது தற்போது 34 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் கொச்சி அல்லது வல்லர்ப்படாம் துறைமுகத்தை காட்டிலும் தூத்துக்குடிக்கு துறைமுகத்திற்கு தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றுமதியாளர்கள் செலவழிக்கும் தொகை குறையும். இரண்டாவது, ஏற்றுமதியாளர்கள் தூத்துக்குடிக்கு சரக்குகளை அனுப்புவதன் மூலம் குறைந்தது நான்கு மணி நேரத்தை மிச்சப்படுத்துவார்கள்.
உதாரணமாக கோயம்புத்தூரிலிருந்து தூத்துக்குடி வரை(360 கி.மீ) சரக்குகளை அனுப்ப எட்டு மணிநேரம் எடுக்கும். மறுபுறம் கோயம்புத்தூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி துறைமுகத்திற்கு 12 மணி நேரம் ஆகும். ஆகவே, கொங்கு மண்டல ஏற்றுமதியாளர்கள் அனைவரும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு தான் தற்போது முக்கியத்துவம் அளிப்பார்கள்.
தற்போது, தூத்துக்குடி துறை முகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டராக அதிகரிக்கப்பட்டு, முக்கிய வழித்தட கப்பல்கள் வர வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் 12 மீட்டர் மிதவை ஆழம் கூட கையாள முடியாத நிலை இருந்தது. இதன் மூலம் தூரகிழக்கு நாடுகளுக்கு சரக்கு பெட்டகங்களை நேரடியாக அனுப்ப முடியும். ஒரு பெட்டகத்துக்கு 50 டாலர் வரை செலவு மிச்சமாகும். கொழும்பு துறைமுகத்தில் பெரிய கப்பலுக்காக காத்திருக்கும் நேரமும் மிச்சமாகும். வருங்காலத்தில் மிதவை ஆழத்தை 16.5 மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சரக்கு பெட்டக பரி மாற்று மையமாக தூத்துக்குடி மாறும்.
மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் ₹1,500 கோடியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளது. திருப்பூர், கரூர் பகுதி ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.
தூத்துக்குடியிலிருந்து தூரக் கிழக்கு நாடுகளுக்கு நேரடியாகச் சரக்குப் பெட்டகங்கள் கையாளும் சேவை நேற்று துவங்கப்பட்டது. “தஷின் பாரத் சரக்குமுனைய”-த்திலிருந்து சரக்கு கப்பல் சேவையை #மத்திய_அமைச்சர்கள் #நிதின்கட்கரி, #பொன்ராதாகிருஷ்ணன், தமிழக #முதல்வர்_பழனிசாமி ஆகியோர் காணொலி மூலம் துவங்கி வைத்தனர்.
இது குறித்து மத்திய கப்பல் துறை இணையமைச்சர் திரு #பொன்_ராதாகிருஷ்ணன் கூறுகையில், “துறைமுக வரலாற்றில் திருப்புமுனையாக இவ்விழா அமைந்துள்ளது. சரக்கு பெட்டகங்களை கொழும்பு கொண்டு செல்லாமல் நேரடியாக எந்த நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்லலாம். தூத்துக்குடியிலிருந்து தூரக் கிழக்கு நாடுகளுக்குத் துவங்கப்பட்டுள்ள இந்த நேரடிச் சரக்கு சேவையால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு, ஒரு கண்டெய்னருக்கு, 50 அமெரிக்க டாலர்கள் வரை மிச்சமாகும். அதேபோல, கிழக்கு மேற்கு கடல் வணிக தடத்தின் அருகில் இருக்கும் இத்துறைமுகம், தென்னிந்தியாவின் முழுத் திறன் கொண்ட முக்கிய சரக்கு பெட்டக மாற்று முனையமாக மாறும்”, என்றார்.
காணொலி காட்சி மூலம் #முதல்வர் #கே_பழனிச்சாமி பேசுகையில், “தூர கிழக்கு நாடுகளுக்கு நேரடியாக சரக்கு பெட்டக கப்பல் போக்கு வரத்து தொடங்கியதன் மூலம் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி ஊக்கமடையும். தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதற்காக மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்கிறேன்”, என்றார்.
Based on Inputs from #Swarajya, #The_Hindu and #Vikatan
No comments:
Post a Comment