Saturday, 15 December 2018

Rafale விவகாரம் எழுந்த உடனேயே நான் இந்த Rafale விமானம் மீதான புகார்கள் போலியானவை.

Rafale விவகாரம் எழுந்த உடனேயே நான் இந்த Rafale விமானம் மீதான புகார்கள் போலியானவை.


. அரசியல் உள்நோக்கத்துக்காகவும், சில எதிரிநாடுகளின் கைக்கூலிகளாலும் பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டு.. இது உண்மையான ஊழல் இல்லை, ஒரு ஜோடிக்கப்பட்ட ஊழல் புகார் என்று எழுந்தியிருந்தேன்.. அன்று யாரும் என்னை முழுமையாக நம்ப தயாராகவில்லை.. பக்தாள் அப்படிதான் பேசுவா என்று நக்கலடித்தனர்.. ஆனால் அதன் உண்மை இப்பொழுதுதான் வெளிவர துவங்கியிருக்கிறது..

இன்னும் கூட, காங்கிரஸ் கட்சியின் அடிமை மீடியாக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரில்லை.. மேலும் மேலும் ராகுலின் புதிய சந்தேகங்களை கொண்டு சேர்ப்பதிலேயே முனைப்பு காட்டுகின்றன.. அதாவது உச்சநீதிமன்றத்தை விட, ராகுலுக்கு எல்லா தொழில்நுட்பம், ராணுவ தளவாடங்கள் வாங்கும் முறை, கணக்கு எல்லாம் நன்றாக தெரியும் போல.. என்ன கோமாளித்தனம்? இவர்கள் கேட்கும் குப்பை கேள்விகளுக்கு அரசாங்கம் இல்லை, என்னை போன்ற சாதாரணமாக தொடர்ந்து (இப்பொழுதில்லை, பல வருஷங்களாக) செய்திகள் படித்து வருபவர்களாலேயே பதில் சொல்ல இயலும்.. இதோ, இவர்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டாக பார்ப்போம்

1 நாங்கள் 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தோம்.. ஆனால் மோடி வெறும் 36 விமானங்கள்தான் வாங்குகிறார்.. இது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விஷயம்

பதில் - காங்கிரஸ் அரசாங்கம் 2013 ல் 126 விமானம் வாங்க முடிவு செய்தது.. ஆனால் கடைசிவரை இறுதி ஒப்பந்தம் எதுவும் கைய்யெழுத்தாகவில்லை.. அதுமட்டுமின்றி, அன்றய பாதுகாப்பு அமைச்சர் AK Antony , நம்மிடம் 126 விமானம் வாங்க பணம் இல்லை என்று கைவிரித்துவிட்டார்.. அதனால் மோடி வந்தவுடன் அவசர தேவைக்காக வாங்குவதுதான் 36 விமானங்கள்.. மீதி தேவைக்கு Make in India மூலம் மேலும் 110 விமானங்கள் தயாரிக்க சர்வேதேச நிறுவனங்களிடம் டெண்டர் விடப்பட்டிருக்கிறது

https://indianexpress.com/article/india/india-others/no-money-this-fiscal-for-rafale-jets-a-k-antony/

https://www.flightglobal.com/news/articles/india-re-opens-competition-to-supply-110-fighters-447392/

2 எதற்க்காக அம்பானிக்கு கொடுக்க வேண்டும் 30000 கோடி ரூபாய் கான்ட்ராக்ட்டை, HAL க்கு கொடுக்காமல்

பதில் - 2013 ல் HAL இடம் பேச்சுவார்த்தை நடத்திய Dassault நிறுவனம், எங்களுக்கு HAL மீது முழு நம்பிக்கையில்லை. அவர்கள் இங்கே தயாரிக்கும் விமானங்களுக்கு எங்களால் உத்திரவாதம் தர இயலாது என்று கூறி மறுத்ததால்தான் இறுதி ஒப்பந்தம் கைய்யெழுத்தாக தாமதம் ஏற்பட்டது.. அப்பொழுதும் ரிலையன்ஸ் ஐ Dassault நிறுவனம் ஒரு பங்குதாரராக சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.. அதுமட்டுமின்றி, பழைய ஒப்பந்தத்தை போல, இந்தமுறை ஒரு விமானம் கூட இங்கே தயாரிக்கப்போவதில்லை (பழைய ஒப்பந்தத்தில் 108 விமானங்களை இங்கே தயாரிப்பதாகவும், 18 France இலிருந்து இறக்குமதி செய்யவிருந்ததாகவும் இருந்தது).. அதனால்தான் இந்த முறை, உங்களுக்கு யார் கூட்டாளி என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என கூறியது மோடி அரசு (கொள்முதல் தாமதத்தை தடுக்க).. ஆனால் Dassault நிறுவனம் மறுமுதலீடு செய்யப்போகும் 30000 கொடியும் ரிலையன்ஸ் க்கு போகப்போவதில்லை.. அதில் 3 % மட்டுமே reliance  - Dassault கூட்டு நிறுவனத்திற்கு போகும் , அதாவது 900 கோடிக்கு குறைவாக.. இதில் பெரும் பங்கு இந்திய அரசின் DRDO க்குதான் செல்லவிருக்கிறது.. அதாவது சுமார் 9000 கோடிகள்.. அதைத்தவிர, 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை Dassault தன் பங்குதாரராக சேர்த்திருக்கிறது Dassault .. ராகுல் புளுகுவது போல ரிலையன்ஸ் ஐ மட்டுமே தேர்ந்தெடுக்கவில்லை.. இதை Dassault நிறுவனமே தெளிவுபடுத்தியிருக்கிறது

https://www.thehindubusinessline.com/economy/logistics/dassault-aviation-carrying-out-gap-analysis-of-hals-capabilities/article23121443.ece

https://www.reuters.com/article/dassault-reliance/dassault-aviation-indias-reliance-in-defence-pact-idUSL4E8DC05220120212

https://economictimes.indiatimes.com/news/defence/reliance-defence-to-get-3-of-rs-30000-crore-offset/articleshow/66228334.cms

3 நாங்கள் ஒரு விமானம் 500 கோடிக்கு பேசியிருந்தோம்.. இப்பொழுது 1600 கோடி.. ஒரு விமானத்திற்கு 1100 கோடி அதிகம்.. அதான் ஊழல் என்கிறோம்

பதில் - நீங்கள் பேசிய விலை ஆயுதங்கள் இல்லாத மொட்டை விமானம்.. இப்பொழுது பேசியிருப்பது ப்ரஹ்மோஸ், Meteor போன்ற அதிநவீன ஏவுகணைகள், ரேடார்கள், குண்டுகள் பொருத்திய முழு போர்விமானம்.. மாருதி காரும் கார்தான், BMW வும் கார்தான்.. நானும் கார் வாங்கினேன், வெறும் 3 லட்சத்திற்கு, நீ 30 லட்சம் குடுத்து ஏமாத்திருக்கிறாயே என்று பேசுவதுபோல முட்டாள்தனமாக உள்ளது

https://www.indiatoday.in/india/story/government-document-reveals-india-saved-rs-59-crore-per-rafale-aircraft-under-nda-1295288-2018-07-25

இந்த காங்கிரஸ் அயோக்கியர்கள்தான் நமது விமானப்படை பலவீனமாக ஆனதற்கு காரணம்.. நம்மிடம் உள்ள அறுத்த பழைய MIG விமானங்கள் பழுதாகி பொத்து பொத்தென கீழே விழுந்து விமானிகள் உயிரிழந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது காங்கிரஸ் அரசு.. புதிய விமானங்கள் வாங்க வக்கில்லை.. ஊழல் புகார்களில் சிக்கி, அதை சமாளிக்கவே நேர சரியாக இருந்தது.. சொல்லப்போனால் இவர்கள் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு ஒரு bullet proof jacket கூட இல்லை.. மோடி வந்துதான் அதையெல்லாம் செய்திருக்கிறார்.. தானும் செய்யமாட்டேன், செய்பவனாயும் தடுப்பேன் என்கிற கீழ்த்தரமான புத்தி படைத்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.. மக்கள் நல்லது கெட்டதை பிரித்து பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.. இப்பொழுதும் CAG அறிக்கை எங்கே என கேட்டு இந்த விஷயத்திற்கு தேர்தல் வரை முடிவு வராமல், மோடிக்கு நல்ல பெயர் கிடைக்காமல் இருக்கவேண்டும் என துடிக்கிறார்கள்.. ஆனால் CAG அறிக்கை ஜனவரியில் வரவிருக்கிறதுபோகிறது.. பிரச்சனை இவ்வனேற்றால் ராகுலும் சோனியாவும் இப்பொழுது Agusta westland ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் வசமாக சிக்கியிருக்கிறார்கள்.. அதற்க்கான முக்கிய சாட்சியான Christin Michael இந்தியா கொண்டுவரப்பட்டிருக்கிறார் கடந்த வாரம் (துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட).. அதற்க்கு பயந்து, தாங்கள் மாட்டிக்கொண்டால், மோடி மட்டும் ஒழுங்கா என்று கேட்கலாம் அல்லவா.. அதற்குதான் இந்த துடிப்பு..  ஆனால் உண்மை இதுதான்.. இந்த 4 .5 ஆண்டுகளில் மோடி அரசாங்கத்தில் மேல்மட்டத்தில் ஒரு ஊழல் கூட நடக்கவில்லை என்பதே அது..

https://timesofindia.indiatimes.com/india/cag-to-submit-rafale-report-by-jan-end/articleshow/67100627.cms

~~~இந்திய தேசிய தமிழர்கள்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...