சிங்கப்பூர்
01)சிங்கப்பூர் குடிமகன் தன் இரண்டு படுக்கைகள் கொண்ட வீட்டிற்குக் குப்பை எடுக்க மாதம் 2500 ரூபாய் கட்டவேண்டும். (அரசு சர்வீஸ் கொடுத்தாலும் அதற்குச் செலவு உண்டு தானே?? இந்தியாவில் மாதம் எவ்வளவு கட்டுகிறீர்???) அதைதாண்டி தங்கள் நாடு சுத்தமாக இருக்க மக்களும் முறையாக நடந்து கொள்கிறார்கள். நாம் எப்படி???? வீட்டில் இருக்கும்குப்பையை நகராட்சி அமைத்துக் கொடுத்த குப்பைத் தொட்டியில் கூடக் கொட்ட மாட்டோம். ஆனால் சிங்கப்பூர் மாதிரிஎனக்குச் சுத்தமான நாடு வேண்டும்?
02)சிங்கப்பூர் குடிமகன் 300Kwh மிம்சாரம் பயன்படுத்தினால் 2700ரூபாயில் இருந்து 3300ரூபாய் வரை கட்டவேண்டும்.இங்கே தமிழகத்தில் 300யூனிட் மிம்சாரம் பயன்படுத்தினால் - 530 ரூபாய் கட்டவேண்டும். {100 யூனிட் மிம்சாரம் இங்கேஎதுவுமே கட்ட தேவை இல்லை. ஆனால் சிங்கப்பூரில் 900 ரூபாய்க்கு மேல் கட்டவேண்டும்.} அதாவது ஒரு யூனிட் மிம்சாரம்10.26ரூபாய் வரை அங்கே, ஆனால் இங்கே? வெறும் 2.50ரூபாய் மட்டுமே. அதில் இலவச மிம்சாரம் வேறு. இத்தனைஆண்டுகாலமாகத் திருட்டு மின்சாரம் வேறு இங்கே. {விவசாயத்திற்கு மின்சாரம் பற்றி பேசினால் அதில் நடக்கும் கூத்தைபேசினால் விவசாயி தானே என்று நம்மை நாமே சப்பை கட்டுக்கட்டுவது.}
03)தண்ணீர் கூட தரமுடியாத அரசு என்று ஏளனம் செய்வது. தண்ணீருக்கு இங்கே மாதம் 50ரூபாய். அதையும் ஒழுங்காகட்டமாட்டேங்க. மாநகராட்சி வந்து கேட்டாலும் அலுத்துக் கொள்வது. ஆனால் சிங்கப்பூரில் 4பேர் இருக்கும் வீட்டிற்குக்குறைந்தது 1500 ரூபாய் வரை மாதம் மாதம் செலவு செய்கிறார்கள். நாம் அனைத்தையும் எதோ இலவசமாகஎதிர்பார்க்கிறோம். இருப்பதை ஒழுங்கா மக்கள் நம் பக்கம் சரியாக இருக்கோமா என்று சிந்திப்பதே இல்லை. தாங்கள்செய்யும் அனைத்து தவற்றையும் இங்கே அரசியல் வாதி தான் காரணம் என்பது போல் பேசித் திரிவது.
04)கேஸ் பில்??? 22kwh LPG பயன்படுத்தினால் ஒரு சிங்கப்பூர் வாசி சுமார் 220ரூபாய் வரை கட்டணம் கட்டுகிறார். அப்படிஎன்றால் LPG (propane) kg to kWh: 1kg = 13.6kWh என்று வைத்துக் கணக்கிட்டால் நாம் ஒரு சிலிண்டர் 14.2kg LPG 500 - 550ரூபாய்வரை கொடுத்து வாங்குகிறோம். {மானியம் போக}. அதே அளவை ஒரு சிங்கப்பூர் வாசி சுமார் 1930ரூபாயிக்குவாங்குகிறார்.
அதாவது ஒரு நடுத்தர குடும்பம் மிம்சாரம் , தண்ணீர் , கேஸ் , குப்பை அல்ல போன்ற சர்வீஸ் அனைத்திற்கும் பில்முறையே :
கரண்டு பில் : 3300ரூபாய்
கேஸ் பில் : 1930ரூபாய்
தண்ணீர் : 1500 ரூபாய் கட்டுகிறார்கள். மொத்தம் இந்த மூன்றிற்கு மட்டும் ஒரு நடுத்தர வர்க்கத்தினர் 6730ரூபாய்அரசுக்குக் கட்டுகிறார்கள். {இதில் அரசின் GSTயும் அடக்கம்.}
05)இந்தியாவில் பெட்ரோல் Hyundai i20 கார் வாங்க போறேங்க. காரின் விலை 8.25லட்சம். அப்படி என்றால் உங்களுக்கு RTO + Road Tax இதுலாம் சேர்த்து ஒரு 80,000ரூபாய் வரும். அடுத்து இன்சூரன்ஸ் ஒரு 30,000ரூபாய் வரும். மொத்தம் 9.25லட்சம்ஆகிவிடும். அதாவது காரின் விலையை விடக் கூடுதலாக 1லட்சம் கட்டுவோம்.
இதே மாதிரி நம்ம சிங்கப்பூரில் நீங்கள் கார் வாங்கினால்? 25 லட்சம் வரை ஆகும்.
காரின் விலை Additional Registration Fee (ARF) முதல் வரி - காரின் விலை 20,000$ கீழ் இருந்த 100% ARF கட்டவேண்டும். அதாவதுARF மட்டும் 8.25 லட்சம், மற்றும் காருக்கு 8.25லட்சம் கட்டவேண்டும். (20,000டாலருக்கு மேல் செல்லும் அனைத்துகார்களுக்கும் 140% முதல் 180% வரை ARF இருக்கும்.) ஆக சாதாரண கார் வாங்கினாலே காரின் விலை இரண்டு மடங்காகமாறும்.
இத்துடன் விடமாட்டங்க... அடுத்து Excise Duty ஒரு 20% , GST ஒரு 7% வரும். இது தவிர இதர செலவுகள் வைத்துப் பார்த்தால் 25 லட்சம் முதல் 30லட்சம் ஆகும். அப்புறம் இன்னொன்று நீங்கள் கார் வோட்டுவதற்கு லைசன்ஸ் இருக்கு பாருங்க லைசன்ஸ்அதற்கு ஒரு 20லட்சம் கட்டவேண்டும். Certificate Of Entitlement (COE) என்று பெயர் அதன் மதிப்பு 40,000$ முதல் 50,000$ வரைஆகும். அதாவது 20 முதல் 25லட்சம் ஆகும். {அதாவது நான் கார் வோட்டனும்னு எவனுக்கும் கனவே கூட வரக்கூடாது. காரணம் அங்கே இருக்கும் இடப் பிரச்சனை. இங்கே அதே போல காற்று மாசு அதிகம். அதற்காக வரியை உயர்த்தினால்என்ன ஆகும்??? பெட்ரோல் விலை 120 வரையும் , டீசல் விலை 95 வரையும் விற்பனை செய்கிறார்கள். }
06)நீங்கள் வாங்கும் சம்பளத்தில் 20% அளவிற்கு Central Provident Fund (PF) பிடித்துக் கொள்வர். 17% அளவிற்கு உங்களுக்குவேலைக் கொடுப்பவர் கட்டவேண்டும். அப்படி என்றால் நீங்கள் 50,000ஆயிரம் சம்பளம் வாங்கினால் அதில் 10ஆயிரம்அரசு PF என்று எடுத்துக்கொள்ளும். அந்த பணத்தினை வைத்து நீங்கள் அரசிடம் வீடு வாங்கிக் கொள்ளலாம் (திருமணதம்பதிகள் வாங்கலாம், திருமணம் ஆகாதவர்கள் 35வயதிற்கு மேல் வாங்கலாம்). 55வயதிற்குப் பின் பென்சன் கிடைக்கும். இந்த 20%+17% மூலம் தான் அரசு உங்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றைக் கவர் சேர்க்கிறது. {இது புரியாமல்நம்மாளுக சிங்கப்பூர் மருத்துவம் இலவசம் என்பர்.} ஒரு பேச்சுக்கு உங்கள் சம்பளத்தில் 20% கட்டாயம் அரசு எடுத்துக்கொள்ளும் என்று கூறினால் என்ன செய்வீர்??? மக்கள் என்ன சொல்வார்கள் என்று கொஞ்சம் இந்தியாவில் யோசிக்கவும்.
07)பேருந்துகள் பொது இடங்களில் சாப்பிடுவது குப்பை கொட்டுவது - சிவிங்கம் மெண்டு துப்புவது - இதற்கு எல்லாம்25,000ரூபாய் வரை அபராதம் உண்டு. அடுத்தவன் wifi பயன்படுத்தினால் 2லட்சம் அபராதம் அத்துடன் 3மாதம் ஜெயில். டாய்லட் போய்ட்டு தண்ணீர் பிளஸ் செய்யாமல் வந்தால் 7000 ரூபாய் வரை அபராதம். பொது இடங்களில் புறா நாய் என்றுபிராணிகளுக்கு உணவு துண்டை தூக்கி போட்டா அப்பாவும் அபராதம். குப்பை எங்கேயாவது போட்ட அந்த இடத்திலேயேபிடிச்சு ஒரு 51,000 அபராதம் கட்டவேண்டும். {இப்படி வசுக்கோ என்னலாம் சின்னதா தப்பென்று நினைப்பு உனக்குவருகிறதோ அது எல்லாமே குறைந்தது 10,000 அபராதம் கட்டவேண்டி வரும் அங்கே.}
08)கஞ்சா போன்ற Drug பயன்படுத்தினால் தூக்கு நிச்சயம் உண்டு. நீ எப்படி அடிச்ச ஏன் அடிச்ச கதை எல்லாம் வேண்டாம்நீ கிளம்பு வரும் வெள்ளிக்கிழமை தூக்குல தொங்கவிட்டு உன் கதையை முடிக்கிறோம் என்று கூறிவிடும் சிங்கப்பூர். {எனக்குத் தெரிந்து இந்தச் சட்டத்திற்கே நமது தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் இளம் கதாநாயகன் கதாநாயகிகள் 90% பேரைத் தூக்கில் தொங்க வேண்டிவரும். ஆனால் வாயைத் திறக்க மாட்டானுக இதைபற்றி எல்லாம். ஆபாசமாக பொதுஇடங்களில் எது விற்பனை செய்யப்பட்டாலும் நீ காலி. ஆனால் எங்கள் சினிமா கதாநாயகிகள் ஆபாசப் படத்தை தெருதெருவா ஒட்டு விச்சுருபாணுக இங்கே.}
போதும் போதும் விசயத்திற்கு வருவோம்.
இதை எல்லாம் நான் ஏன் சொல்லவேண்டி வருகிறது என்றால் அங்கே மக்கள் அரசு மேற்கொள்ளும் திட்டங்களை புரிந்து - அரசு என்பது மக்கள் வரிகொண்டு நாட்டை மக்கள் வாழ்வை மேன்படுத்த இயங்கும் ஒரு இயந்திரம் , எனவே அதற்கும்பொருளாதாரம் உண்டு என்பதைப் புரிந்து ஒத்துழைப்பு தருகிறார்கள். அதாவது எந்த அளவிற்கு வருமானம் உண்டு என்றுநீங்கள் கூறும் அதே நேரம் அவர்கள் அதே அளவு வரி மூலம் அரசு மீண்டும் எடுத்து அவர்களுக்கு ஒரு நல்லபொதுவாழ்வை உருவாக்கிக் கொடுக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
{சில ஆதாரங்களைச் சிங்கப்பூரில் வாழும் நண்பரின் பில் விவரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். }
--------------------------------------------------------------------
வருமானம் வந்தால் நாங்களும் தான் கட்டுவோம், வருமானம் இல்லை. வேலை கொடுங்கள்... இப்படி உடனே தன் தவறை மறைத்து மீண்டும் அரசின் மீது குறை சொல்வதும் நாட்டின் மீது குறை சொல்வது தான் ஒரு கேடுகெட்ட புத்தியாகவேஇருக்கு. இப்படிக் கேட்பவர்களுக்கு
முதலில் நாம் வருமான கணக்கினை முறையாகத் தாக்கல் செய்வது இல்லை. வரி கட்டுவது அடுத்து. என் வருமானவிவரங்களை நான் அரசுக்குக் காட்டவேண்டும். வருமானமே இல்லை என்றாலும் அட மாதம் 10,000தாங்க வாங்குறேன்என்றாலும் அதை முறையாகக் காட்டவேண்டும். வரி அரசு 2.5லட்சத்திற்கு மேல் தான் கேட்க போகிறது.
அமெரிக்காவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் 43%. {ஏறக்குறைய அனைவருமே வருமான கணக்கு அரசுக்குத்தெரியும்.} சிங்கப்பூரில் வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை 40% க்கும் மேல். ஜெர்மனி , ஐயர்லாந்து , போர்சுக்கள்என்று அனைத்து நாடுகளிலும் 50% க்கும் குறையாமல் வருமான வரி கட்டுகிறார்கள். இந்தியாவில் 1.7% மட்டுமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள். நன்கு புரிந்து கொள்ளுங்கள் வருமானவரி கட்டுபவர்கள் வெறும் 1% தான் இங்கே. வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தான் 1.7% பேர். இதில் விசேசம் என்னவென்றால் 4.07 கோடி பேர் வருமானகணக்கு காட்டியுள்ளார்கள். ஆனால் அதில் 82 லட்சம் பேர் வருமானம் இல்லை அல்லது 2.5லட்சத்திற்கும் குறைவு. எனவேஇவர்கள் வருமான கணக்கு காட்டியவர்கள் - இவர்களால் அரசுக்கு வரி வருமானம் இல்லை. இது 2015-16 கணக்கீட்டின் படி.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் - நீங்கள் அனைவரும் வருமான வரி காட்டும்போது தான் அங்கே அரசுக்கு யாருக்குஎப்படியான திட்டங்களை சென்று சேர்க்க வேண்டும் என்று சரியாக திட்டமிட முடியும்.
அரசு ஏழைகளுக்கு மானியமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நாடுமுழுவதும் இருக்கும் சுமார் 5லட்சம்கடைகளுக்கு ஆண்டுக்கு 1.15 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கும் நம் நாட்டில் - ரேஷன் கடைகள் மூலம் நடக்கும் கள்ளவிற்பனை மட்டும் 40முதல் 50%. அதாவது சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருடம் வருடம் வீண். அதற்கு முக்கிய காரணம்இத்தனை ஆண்டுகளாகப் பலர் 3,4 ரேஷன் கார்டுகள் எல்லாம் வைத்து அரசை ஏமாற்றி கொள்ளை அடித்தது தான். வெறும் இந்த ரேஷன் கடைகளின் கள்ள மார்க்கெட் மற்றும் மக்கள் சேர்ந்து ஏமாற்றுவார்த்தை தடுத்தால் - அதில் வீணாகும் பணத்தினை கொண்டு இங்கே அனைத்துப் பள்ளிகளையும் வெளிநாடுகளில் உள்ளது போல் மிக வசதியான பள்ளிகளாக மாற்றமுடியும்.
அரசு மானியத்தை முறைப்படுத்தினாலே இங்கே பல லட்சம் வரிப் பணம் மிச்சம் ஆகும். அந்த பல லட்சம் வைத்துத் தான்இங்கே உற்பத்தி ஆலைகள் தொழிற்கூடங்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்து தர முடியும். அந்தத் தொழில் கூடங்களில்படித்த அனைவருக்கும் போதுமான தொழில் பயிற்சி கொடுத்து உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்த முடியும். இதுஎல்லாமே மக்கள் நிதி விவரம் அரசுக்குத் தெரிந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆனால் மக்கள் காட்டுவார்கள் என்று நினைக்கிறீர்???? ஒரே நாளில் சிங்கப்பூர் இப்படி வரவில்லை. அங்கே மக்களுக்கும் அரசுக்கும் இடையே வெளிப்படைத் தன்மை இருந்தது. அதனால் அரசுக்குச் சரியான மக்களுக்கு உதவவும் - வரி வருமானத்தினை வீன்செய்யாது நாட்டை முன்னேற்றம்காணவும் செலவு செய்ய முடிந்தது. மெல்ல மெல்ல அந்த நிர்வாகம் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
மேலே சிங்கப்பூரில் சொல்வது போல இவ்வளவு வரி செலுத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஏன் என்றால் அங்கேஉற்பத்தி பெரிய அளவில் இல்லை , விவசாயம் இல்லை பெரிய அளவில் கச்சா எண்ணெய் , நிலக்கரி, தனிமங்கள் என்றுஇல்லை. எனவே அங்கே இவ்வளவு வரி அவசியமாகிறது. அதனால் அனைத்திற்கு அங்கே அரசுக்கு மக்களிடம் இருந்துதேவை இருக்கிறது. ஆனால் சவுதி அரபியா போன்ற வளைகுடா நாடுகள், ரஷ்யா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை இருக்கு அது அவர்கள் அரசை நடத்தை போதுமான அளவு வருமானம் தருகிறது. அமேரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் வரி வருமானமும் சரி இயற்கை வளங்களும் சரியாக கிடைக்கப் பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகள் அனைத்தும் தங்கள் நிறுவனங்களின் வியாபார புத்திசாலி தனத்தாலும் - தங்களுடைய புதியகண்டுபிடிப்புகளாலும் நன்கு வருமானம் ஈட்டுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை உற்பத்தித் துறையை நோக்கிநகரவேண்டும்.
---------------------------------------------------------
No comments:
Post a Comment