*ஏன் மோடி மீண்டும் வேண்டும்?-11*
அனில் மிஸ்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் , மத்திய
அரசிடம் ஒரே ஒரு கேள்விக்கு விடை கேட்கிறார்:
‘ மோடி தன் அலுவலகத்தில், உணவுக்காகவும், பானங்களுக்காகவும் இது வரை செலவழித்த தொகை என்ன?’
பதில் வருகிறது: “0”
‘மோடி அலுவலகத்தில் இருக்கும்போது உண்பதுமில்லை; பருகுவதுமில்லை.
எப்போதாவது , தன் சொந்த செலவில், டீ வரவழைத்துப் பருகுவார்.’ ‘சொந்த செலவில்’ என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
மோடியின் சம்பளமே தர்ம ஸ்தாபனங்களுக்குத் தான் அனுப்பப் படுகிறதாம். அவர் நெருங்கிய சுற்றத்தார் இன்றும் கீழ்த்தட்டு மத்தியதர மக்களாகவே வசித்து வருகின்றனர்.
நேரு காலம் தொட்டு , இது வரை , லால் பகதூர் சாஸ்திரி, ராஜேந்திரப் பிரஸாத், மோடி ஆகிய மூவரே, அரசுப் பணத்தில் சாப்பிடாமல் இருந்துள்ளனர். மற்றவர்கள் அரசு செலவில், கோடிக் கணக்கில் உணவுக்காகவும், பானத்துக்காகவும் செலவழித்துள்ளனர்.
ஏ ராசா, தயாநிதி மாறன், பி சிதம்பரம், டி ஆர் பாலு போன்றோர் மந்திரிகளாக இருந்த போது, தங்கள் அலுவலகத்தில், சாப்பாட்டுக்காகவும், பானங்களுக்காகவும் எவ்வளவு செலவழித்துள்ளனர் என்று தகவல் அறியும் சட்டத்தில் கேட்டுப் பாருங்கள். மயக்கம் அடைந்து விழுந்து விடுவீர்கள். இவர்களா மக்கள் தொண்டர்கள்?
ஓர் அரசியல்வாதிக்கு மன சுத்தமும், கை சுத்தமும் வேண்டும். நம்மிடை இப்போது இரண்டும் உள்ள ஒரே மகாத்மா, மோடி தான்.
மற்றவர்கள் நம் பணத்தை சாப்பிட்டே-அதற்குக் கணக்குக் காண்பித்தே-அழித்து விடுவார்கள்.
ஏன் மோடி மீண்டும் வேண்டும் தெரிகிறதா?
*மோடி2019*
நன்றி- வெங்கடரமணன் ஜி.
No comments:
Post a Comment