*இனி மேலும் உயரும் இந்திய ரூபாயின் மதிப்பு*
https://www.facebook.com/2041937002491440/posts/2219048831446922/
இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மறைமுக வரி மற்றும் ஆயதீர்வை வாரியம் ஆயதீர்வை சட்டம் 1962 புரிவு 14'இன் கீழ் 12/12/2018 அன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொரிய நாட்டின் நாணயமான வோன் மற்றும் துருக்கியின் லிரா நாணயங்களை இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது.இ ஒவ்வொரு வருடமும் கொரிய நாட்டுடன் சுமார் 12.59 பில்லியன் வர்த்தகமும் துருக்கியுடன் சுமார் 7.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகமும் நமது பாரத தேசத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இனி அந்த நாடுகளுடன் நாம் நமது இந்திய ரூபாய் மதிப்பிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ளமுடியும். ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடன் நமது மத்திய அரசு இதே போல ஒப்பந்தம் செய்ததும் அதனால் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணையின் மதிப்பு சரிவடைந்து வந்ததும் நினைவில் இருக்கலாம். நமது மத்திய அரசின் இந்த சாதூரியமான நடவடிக்கையால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் ஸ்திரதன்மை அடையும்.
No comments:
Post a Comment