https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1841521749303543/
தற்போதைய தேர்தல் முடிவுகள் எனது பார்வையில்..... சிறிய அலசல்......
தெலங்கானா --------
போன முறை எதிர் கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்தமுறை கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டது. எதிர்பார்த்ததைவிட தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு. ஆளும் கட்சிமீது அதிக விமர்சனம் இருந்தபோதும் மக்கள் காங்கிரஸை ஆளும் அரசுக்கு எதிர்துருவமாக ஏற்கவில்லை என்பதனை மிகத் தெளிவாக கூறிவிட்டார்கள். அதுமட்டுமின்றி காங் கட்சியை இம்மாநிலத்தில் மக்கள் ஏறத்தாழ புறந்தள்ளி விட்டார்கள். பெரிய அளவில் செல்வாக்கு இல்லாமலும் தனித்து நின்றாலும் கூட பாஜக அங்கு கணிசமான வாக்குகளையும் உறுப்பினர்களையும் பெற்றிருப்பது ஆளும் கட்சிக்கு எதிராக பாஜக அங்கு வரவேண்டும் என்பதனை அங்குள்ள மக்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
மிசோரம்-------
ஆளும் காங்கிரஸ் கட்சியை சுத்தமாக துடைத்து எறிந்து விட்டார்கள். முதல் முறையாக சட்டமன்றத்தில் பாஜக நுழைகிறது.
சட்டீஸ்கர் -----
அனுமானிக்க முடியவில்லை. ஏறத்தாழ பல நக்ஸல் கிராமங்கள் உட்பட பல கிராமங்களுக்கு சுதந்திரத்திற்கு பின் மின்சாரம் சாலை வசதி பள்ளிகள் என பாஜக அரசு பல மக்கள் பணியை செய்திருக்கின்றது. இந்த முடிவு அந்த மாநில மக்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தாங்களே தங்களின் தலையில் மண் அள்ளி போட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் -----
பெரிய மாநிலம். தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த அரசு. அதனாலேயே மக்களுக்கு கொஞ்சம் சலிப்பு. தேர்தல் தொடங்குவதற்கு முன் ஆட்சி மீது இருந்த பல விமர்சனங்கள் சில குற்றச்சாட்டுகள் ஆகியவைகளை சரியான முறையில் மாநில பாஜக சரிசெய்யவில்லை என்பதை காட்டுகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகள் மிகவும் அதிகமாக இருக்கும் மாநிலம். அதீத விளைச்சல். விளை பொருட்கள் விவசாயிகளிடமிருந்து சரியாக கொள்முதல் செய்யப்படவில்லை. அதனால் ஏற்பட்ட நஷ்டம். இதன்காரணமாக விவசாயிகள் தற்கொலை. ஆளும் அரசுக்கு மிகச்சவாலான இப்பிரச்சினையை சரியாக கையாளப்படவில்லை. சுய பரிசோதனை செய்வதற்கு கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி. அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தலுக்கு முன் இருந்த நிலவரப்படி மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கவேண்டியது. ஆனால் திரு மோடி மற்றும் அமித்ஷா கூட்டணியின் கடும் உழைப்பு பரப்புரை தொண்டர்களின் உழைப்பே இந்த அளவிற்கு வெற்றியை கொடுத்திருக்கின்றது.
ராஜஸ்தான் -----
வறண்ட பகுதி. முதல்வர் வசுந்தரா மீது உள்ள அதிருப்தி. அவரின் செயல்பாட்டினால் இரண்டாம் கட்ட தலைவர்களின் அதிருப்தி. அவர்மீதான மக்கள் கோவம்.இன்னும் பல.முதல்வர் திருமதி வசுந்தராவின் அதிகாரத்தை குறைத்தால் மட்டுமே அங்கு பாஜக வின் எதிர்காலம். தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் வெறும் 30 தொகுதிகளிலேயே வெற்றி பெறமுடியும் என்ற மோசமான நிலைமை. இங்கும் வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு திரு மோடி மற்றும் அமித்ஷா கூட்டணியின் கடும் உழைப்பு பரப்புரை. இதன் காரணமாக மட்டுமே 90 தொகுதிகளை அடைந்திருக்கின்றது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மாநில அதிருப்திகளே முழுக்க காரணமாக இருந்திருக்கின்றது. திரு மோடிக்கான அலை என்பது குறையவில்லை மாறாக ஏற்றமே பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி மக்கள் காங்கிரஸ் கட்சியை மத்திய பாஜக அரசின் ஆல்டர்நேட்டிவ்வாக பார்க்கவில்லை. ராகுலை பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்பது கண்கூடு. இனி வரும் காலங்களில் திரு மோடி அவர்களின் பெயரை மட்டுமே சொல்லிக்கொண்டு உறுப்பினர்களை பெறமுடியாது மாநில பாஜகவின் செயல்பாடுகளும் மிக முக்கியம் என்பதை இது காட்டுகிறது.
No comments:
Post a Comment