Tuesday, 11 December 2018

மோடியின் முக்கிய சாதனைகள்

முக்கிய செய்திகள் :

1.  இப்போது அமெரிக்கா, இரானுடனான தன் உறவிலும், எண்ணெய்க்கு விதித்திருந்த தடையிலும், மோடியின் உறுதியானக் கொள்கையால், தன் கடினத் தன்மையைக் குறைத்துக் கொண்டுள்ளது. ஈரானின் சாபஹார் துறைமுக வேலைகளிலும் குறிக்கிடுவதில்லை.

2. இந்தியா, ஈரானுடன் ரூபாயில் எரிபொருள் வியாபாரம் செய்கிறது. இதனால் டாலரின் ஏற்ற, இறக்கங்கள் இனி கடுகளவும் நம்மை பாதிக்கப் போவதில்லை.

3. அஸ்ஸாமுக்கும்,  அருணாசலப் பிரதேசத்துக்கும் இடையில் மிகப் பெரிய ரயில் பாலம் அமைத்து வருகிறார்கள். இப்போதுள்ள பயண தூரமான 600 கிலோமீட்டர், வெறும் 40 கிலோமீட்டராகக் குறைகிறது. இது வட கிழக்கு மாநிலங்களுக்கு பெரியதொரு வரப்பிரசாதம். சுதந்திரம் கிடைத்த காலம் முதல் நிதி இல்லை என்று சொல்லி முந்தைய அரசாங்கங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் முனைப்பு காட்டவில்லை.

4. ஆறுகள் வழியாக சரக்குக் கப்பல்கள் போக ஆரம்பித்து விட்டன. காசியில் பெரிய ஆற்றுத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

5. பெட்ரோலியப் பொருள்களின் விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. விலை ஏறிய போது ‘குய்யோ முறையோ’ என்று கதறிய  ஊடகங்கள் இப்போது சப்தநாடியும் ஒடுங்கி உட்கார்ந்திருக்கின்றன.

6. மலைப் போருக்கு ஏற்றவாறு, நம் ராணுவத்தின் விசேஷ படை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

7. மின்சாரத்துறையில் காங்கிரஸ் ஆட்சியின் போது நாம் உலகிலேயே 99-ம் இடம் என்னும் தரத்தில் இருந்தோம். இப்போது 26-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.

8. ஹுண்டாய் சென்னையில் மின்சாரக் கார் தயாரிப்புத் தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது.

9. ஜி எஸ் டி வரி வசூல் மாதா மாதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்போது ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. எல்லா மாநிலங்களுமே - காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உள்பட- ஜி எஸ் டி யின் வெளிப்படைத் தன்மையால், அதனை ஆதரிக்கத் தொடங்கி விட்டன.

10. சிக்கிம் மாநிலத்தில் விமான நிலையம் திறக்கப்பட்டதை அகில உலக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

11. உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையைப் பார்க்க வந்தவர்களிடம் வசூலான டிக்கெட் கட்டணம் முதல் வாரத்தில் 2.5 கோடியை நெருங்கி இருக்கிறது.

12. மும்பை ரயில் சேவை சீரமைக்கப்பட்டு வருகிறது.

இவை எல்லாம் நம் டமில் ஊடகங்களுக்கு வேண்டாத விஷயங்கள். சினிமாவும், சீமானின் பேட்டியும்,  ஐயாக்கண்ணுவின் அம்மண ஆட்டம் தான் அவர்களுக்கு முக்கியம்.

#whatsapp

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...