Tuesday, 4 December 2018

இந்தியாவை வானளவிற்கு நம்பும் அமெரிக்கா.. கில்லியாக சொல்லி அடித்த இஸ்ரோ 2.0!

இந்தியாவை வானளவிற்கு நம்பும் அமெரிக்கா.. கில்லியாக சொல்லி அடித்த இஸ்ரோ 2.0!

ஸ்ரீஹரிகோட்டா: இன்று விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில் மொத்தம் 23 அமெரிக்க சாட்டிலைட்டுகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக 31 செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது. இந்தியா உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது.

முக்கியம் என்ன
இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 31 செயற்கைகோள்களில் இந்தியாவின் ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள்தான் முக்கியமானது. இது இந்தியாவின் பருவநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டை கண்டறிய அனுப்பப்பட்டு இருக்கிறது. இது இல்லாமல் மற்ற வெளிநாட்டு செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது.
  

விண்ணில் நடக்கும் அதிசயம்
இந்த 31 செயற்கைகோள்களை அனுப்ப ஒரு பெரிய அதிசயமும் விண்ணில் நடக்க உள்ளது. ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். மற்ற செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். இதனால் முதலில் ஹைசிஸை நிலைநிறுத்திய பின் , திரும்பி ரிவர்ஸில் வந்து 504 கிமீ தொலைவில் மற்ற செயற்கைகோள்கள் நிலை நிறுத்தம் செய்யப்படும்.

  

எந்த நாடுகள்
31 செயற்கைகோளில் 30 செயற்கைகோள் வெளிநாட்டு செயற்கைகோள் ஆகும். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது.
  

சூப்பர்
ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் செயற்கைகோள்கள் 1 என்ற கணக்கில் 7 அனுப்பப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 23 செயற்கைகோள்கள் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் ஆகும். அதில் ஒன்று நானோ செயற்கைகோள் ஆகும்.

என்ன தெரியுமா
அமெரிக்காவின் இந்த நானோ செயற்கைகோள் வானிலை மாறுபாட்டை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டு இருக்கிறது. மற்ற செயற்கைகோள்கள், மழையை கணிக்க, கலிபோர்னியா காட்டுத்தீயை கணிக்க, கடல் தொடர்பான தொலைத்தொடர்பு, போன்கள் பயன்படுத்தும் புதிய தொலைத்தொடர்பு பேன்ட் வித் உள்ளிட்ட தொடர்புகளுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.
  

மீண்டும் நிரூபணம்
இந்த சாதனை மூலம் செயற்கைகோள்களை அனுப்புவதில் கில்லி என்று இஸ்ரோ மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது. முக்கியமாக அமெரிக்காவின் 23 செயற்கைக்கோளை சுமந்து சென்று, இஸ்ரோவின் கெத்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...